மேலும் அறிய
Funeral Vani Jayaram: விடைபெற்றார் வாணி ஜெயராம்: துப்பாக்கி குண்டுகள் முழங்க இறுதி மரியாதையுடன் உடல் தகனம்!
துப்பாக்கி குண்டுகள் முழங்க காவல் துறை மரியாதையுடன் மறைந்த பாடகி வாணி ஜெயராமின் உடல் தகனம் செய்யப்பட்டது.

வாணி ஜெயராம்
துப்பாக்கி குண்டுகள் முழங்க காவல் துறை மரியாதையுடன் பாடகி வாணி ஜெயராமின் உடல் தகனம் செய்யப்பட்டது.
தமிழ் சினிமாவின் மூத்த பின்னணி பாடகி வாணி ஜெயராம் நேற்று (04/02/2023) நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். இந்நிலையில் அவரது உடல் இன்று (05/02/2023) பெசண்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் காவல் துறை சார்பில் துப்பாக்கி குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. அதன் பின்னர் அவரது உடல் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. அவரது உறவினர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















