மேலும் அறிய

ப்ளாஷ்பேக்: சொதப்பியதால் வாய்ப்பு பெற்ற அஜித்... ஓப்பனிங் சீன் மாற்றம்...எஸ்.பி.பி., அறிமுகத்தில் ‛அமராவதி’!

‛தெலுங்கில் பூர்ணசந்திராவ் ஒரு படம் பண்ணிருக்கார்... பிரேம புஸ்தகம்...னு ஒரு படம். அதுல வர்ற ஹீரோ நல்லா இருக்கான்... நீ பாரு உனக்கு பிடிக்கும்...’ என அஜித்தை பரிந்துரைக்கிறார் எஸ்.பி.பி.,!

காலம் ஒருவரை தூக்கி விடும், சில நேரம் தாக்கி விடும். தூக்கிவிட்டர்களுக்கு நிறைய உதாரணம் உண்டு. அவர்களில் ஒருவர் அஜித். ஆசை நாயகன், லக்கி ஸ்டார், காதல் மன்னன், அல்டிமேட் ஸ்டார் இப்போ தல என பல பட்டங்களை சுமந்து தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடம் பிடித்திருக்கும் அஜித்தின் தமிழ் எண்ட்ரியும், அவரது முதல் படமான அமராவதி உருவான விதத்திலும் நிறைய சுவாரஸ்யங்கள் உண்டு. இன்றைய ப்ளாஷ்பேக் பகுதியில் அவற்றை காணலாம்...

ப்ளாஷ்பேக்: சொதப்பியதால் வாய்ப்பு பெற்ற அஜித்... ஓப்பனிங் சீன் மாற்றம்...எஸ்.பி.பி., அறிமுகத்தில் ‛அமராவதி’!

யார் ஹீரோ... குழப்பமோ... குழப்பம்!

தலைவாசல் படத்தை முடித்த கையோடு, அதே தயாரிப்பு நிறுவனமான சோழா கிரியேஷன்ஸிற்கு படம் செய்ய தயாராகிறார் செல்வா. குறைந்த பட்ஜெட், குறைந்த நாட்கள், நல்ல படம் என்கிற மந்திரத்தை கொண்டவர்கள் அவர்கள். தலைவாசல் கொஞ்சம் அடிதடி நிறைந்த படம். இம்முறை அமராவதி, காதல் கதையாக இருக்க வேண்டும் என்பதில் இயக்குனர் செல்வா உறுதியாக இருந்தார். அதனால் தான் படத்தின் பெயரே அமராவதி. மைசூரு பெண் சங்கவியை கதாநாயகியாக்க வேண்டும் என்கிற முடிவு ஏற்கனவே எடுத்தாகிவிட்டது. ஆனால் கதாநாயகன் யார் என்பதில் தான் குழப்பம். பட்ஜெட் குறைவு, ஆளும் புதுமுகமாக இருக்க வேண்டும் என்கிற பல நிபந்தனைகளை கொண்டது அந்த தேடல், பாக்யராஜ் படத்திற்காக ஹீரோ தேர்வுக்காக சிலரின் போட்டோக்கள் இருப்பதை அறிகிறார் செல்வா. 

ப்ளாஷ்பேக்: சொதப்பியதால் வாய்ப்பு பெற்ற அஜித்... ஓப்பனிங் சீன் மாற்றம்...எஸ்.பி.பி., அறிமுகத்தில் ‛அமராவதி’!

பாக்யராஜ் ஆல்பத்திலிருந்து ஹீரோ ரெடி! 

பாக்யராஜ் கம்பெனியில் இருந்த போட்டோ ஆல்பத்தில் இருவரை தேர்வு செய்து, அதில் ஒருவரை ஓகே செய்கிறார் செல்வா. அந்த நபர் நன்றாக பேசுகிறார். நன்றாக நடிக்கிறார். ஆனால் கேமரா முன் வந்துவிட்டால் தடுமாறுகிறார். இப்படியோ நாட்கள் போகிறது. அடுத்த வாரம் சூட்டிங் தொடங்க வேண்டும். 40 நாட்கள் ஊட்டியில் சூட்டிங். செல்வாவிற்கு அந்த நடிகரால் திருப்தியில்லை. இது ஒருபுறமிருக்க, இசையமைப்பாளர் பாலபாரதி கம்போசிங் முடித்து பாடல்களையும் முடித்துவிட்டார். எஸ்.பி.பி., தான் படத்தின் அனைத்து பாடல்களையும் பாடியிருந்தார். தலைவாசல் படத்தில் நடித்திருந்ததால், செல்வா-எஸ்.பி.பி., உறவு நெருக்கமாக இருந்தது. செல்வாவுக்கு ஆலோசனை தருபவராகவும் எஸ்.பி.பி., இருந்தார். 

ப்ளாஷ்பேக்: சொதப்பியதால் வாய்ப்பு பெற்ற அஜித்... ஓப்பனிங் சீன் மாற்றம்...எஸ்.பி.பி., அறிமுகத்தில் ‛அமராவதி’!

எஸ்.பி.பி., அறிமுகம் செய்த அஜித்குமார்!

‛என்ன படம் பண்ணிருக்க... எப்படி பண்ணிருக்க...’ என செல்வாவிடம் கேட்கிறார் எஸ்.பி.பி., ‛அண்ணா... இந்த முறை காதல் படம்...’ என செல்வா சொல்ல, ‛காதல் படமென்றால் ஹீரோ, ஹீரோயின் முக்கியம்... யாரை போட்டிருக்க...’  என எஸ்.பி.பி., கேட்க, ‛சங்கவியை ஹீரோயினை போட்டிருக்கேன். ஹீரோ தான் கிடைக்கல...’ என செல்வா சொல்ல, ‛தெலுங்கில் பூர்ணசந்திராவ் ஒரு படம் பண்ணிருக்கார்... பிரேம புஸ்தகம்...னு ஒரு படம். அதுல வர்ற ஹீரோ நல்லா இருக்கான்... நீ பாரு உனக்கு பிடிக்கும்...’ என அஜித்தை பரிந்துரைக்கிறார் எஸ்.பி.பி.,! போதாக்குறைக்கு அவரே அஜித்தின் ஆல்பத்தை செல்வாவிற்கு காண்பிக்கிறார். முதல் போட்டோவை பார்த்ததுமே செல்வாவுக்கு பிடித்துவிட்டது. ‛அப்படியே அமீர்கான் மாதிரி இருக்கான்... ஓகே...’ பண்ணிடலாம்’  என செல்வா சொல்ல, மறுநாளே எஸ்.பி.பி., பரிந்துரையில் செல்வாவை சந்தித்தார் அஜித்குமார். 

ப்ளாஷ்பேக்: சொதப்பியதால் வாய்ப்பு பெற்ற அஜித்... ஓப்பனிங் சீன் மாற்றம்...எஸ்.பி.பி., அறிமுகத்தில் ‛அமராவதி’!

ஓப்பனிங் காட்சியை மாற்றிய ஓப்பனிங் கிங்!

அஜித்தை சந்தித்ததும் இரண்டு நாள் டிஸ்கஷன், அடுத்த வாரமே ஊட்டி புறப்பட்டது படக்குழு. படம் முழுக்க ஊட்டியில் நடக்கும் கதைக்களம். 40 நாள் சூட்டிங் எடுக்க திட்டமிட்டார்கள். ஆனால் 50 நாட்கள் வரை சூட்டிங் நீட்டிக்கப்பட்டது. அந்த அளவிற்கு படத்தை வேறு லெவலுக்கு கொண்டு செல்ல திட்டமிட்டனர். படத்தின் கதைப்படி ஹீரோ எண்ட்ரி சைக்கிளில் வர வேண்டும். ஆனால் அஜித்திடம் பேசிப்பார்த்ததில், அவர் வீட்டிற்கு சென்று பார்த்ததில், அவர் ஒரு பைக் பிரியர் என்பது செல்வாவிற்கு தெரிகிறது. இதனால் அஜித் ஓப்பனிங் காட்சியை சைக்கிளிலிருந்து பைக்கில் எண்ட்ரி ஆவதாக மாற்றினார் செல்வா. போதாக்குக்குறை ஸ்கிட் அடிப்பது போன்ற சாகாச காட்சிகளையும் படமாக்கினார். இன்று அஜித் ஓப்பனிங் கிங். ஆனால் அவரது அறிமுக படத்தில், அவரது ஓப்பனிங் காட்சி மாற்றப்பட்டது. அதற்கும் அவரே காரணமாக இருந்தார். 

ப்ளாஷ்பேக்: சொதப்பியதால் வாய்ப்பு பெற்ற அஜித்... ஓப்பனிங் சீன் மாற்றம்...எஸ்.பி.பி., அறிமுகத்தில் ‛அமராவதி’!

சுரேஷ் சந்திரா பைக்கை பயன்படுத்திய அஜித்!

அமராவதில் அஜித் பயன்படுத்தும் பைக், இன்று அவரது மேலாளராக உள்ள சுரேஷ் சந்திராவினுடையது. அந்த  பைக் தான் அவரது எண்ட்ரி ஷாட்டிலும் வந்தது. அஜித்தின் ஓப்பனிங்கில் அன்றே சுரேஷ்சந்திரா இடம்பிடித்திருந்தார். திட்டமிட்டபடி படம் முடிகிறது. பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட். படமும் சுமாரான வெற்றி. செல்வாவிற்கு அஜித் மீது ப்ரியம் இருந்தது. அவரை வைத்து அடுத்த படம் செய்யலாம் என்று அவரும் நினைத்திருந்தார். ஆனால் அவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் பெரிய ஹீரோக்களுடன் கிடைத்தது. அந்த நேரத்திலும் செல்வா-அஜித் கூட்டணிக்கு பலர் முன்வந்திருக்கிறார்கள். அதற்கான அட்வான்ஸ் தொகையும் அஜித்திற்கு தரப்பட்டிருந்தது. ஆனால் சில வாரங்களிலேயே ஏதாவது ஒரு காரணத்தை கூறி அட்வான்ஸை திருப்பி கேட்பதும், அதை அஜித்திடமிருந்து செல்வா வாங்கித் தருவதுமாய் பல வாய்ப்புகள் பறிபோகின. 

ப்ளாஷ்பேக்: சொதப்பியதால் வாய்ப்பு பெற்ற அஜித்... ஓப்பனிங் சீன் மாற்றம்...எஸ்.பி.பி., அறிமுகத்தில் ‛அமராவதி’!

நடிகராவதை விரும்பாத அஜித்! 

பேட்டி ஒன்றில் பேசிய இயக்குனர் செல்வாவிடம், ‛உங்கள் படத்தில் அறிமுகமான அஜித்... இந்த உயரத்திற்கு செல்வார்,’ என அப்போது நினைத்தீர்களா என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த இயக்குனர் செல்வா, ‛நான் நினைக்கவில்லை என்பது உண்மை... அதை விட உண்மை... அஜித்தே அதை நினைக்கவில்லை...’ என்று அதிர்ச்சியான பதிலை அளித்தார். மேலும் பேசிய அவர், ‛அஜித்... ஒரு பைக் வெறியராக தான் அப்போது இருந்தார். படத்தில் நடிக்க வேண்டும் என்பதை விட... உலகின் நம்பர் 1 ரேஸராக வேண்டும் என்று தான் விரும்பினார்,’ என்று செல்வா கூறினார். நாம் நினைப்பது நடப்பதில்லை. ஆனால் நடப்பது நாம் நினைத்ததை விட பெரிது என்றால், அதை பற்றிக் கொள்ள வேண்டும். அதை தான் அஜித் செய்திருக்கிறாா். அமராவதியில் தொடங்கிய காதல் பயணம்... வலிமை வரை அழைத்து வந்திருக்கிறது என்றால், முதலில் தேர்வான ஹீரோ சொதப்பியதும், அந்த வாய்ப்பு எஸ்.பி.பி., மூலம் அஜித்திற்கு கிடைத்ததும் தான் முக்கிய காரணம்! 

மேலும் ப்ளாஷ்பேக் செய்திகளை படிக்க....

ப்ளாஷ்பேக்: கடைசி நேரத்தில் விலகிய வசந்த்... இன்ஸ்டண்ட் இயக்குனரான சுரேஷ் கிருஷ்ணா:அமிதாப் தயவில் ‛அண்ணாமலை‛!

ப்ளாஷ்பேக்: ரஜினியை மாற்றிய மனோபாலா... கருணாநிதியில் தொடங்கி எம்.ஜி.ஆர்.,யில் முடிந்த ஊர் காவலன்!

ப்ளாஷ்பேக்: பார்த்திபனுடன் சண்டை... நடிக்க மறுத்த ரேவதி... சபதம் போட்டு விக்ரமன் எடுத்த ‛புது வசந்தம்‛!

ப்ளாஷ்பேக்: சிவக்குமார்-ஸ்ரீகாந்த் வாய்ப்பை தட்டிப் பறித்த கமல்-ரஜினி: இப்படி தான் இளமை ஊஞ்சல் ஆடியது!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Kaliammal Quits NTK: நாம் தமிழருக்கு குட் பை! கட்சியில் இருந்து விலகினார் காளியம்மாள்! அடுத்து எந்த கட்சி?
Kaliammal Quits NTK: நாம் தமிழருக்கு குட் பை! கட்சியில் இருந்து விலகினார் காளியம்மாள்! அடுத்து எந்த கட்சி?
ரூ.1.94 லட்சம் சம்பளம்; தேர்வில் 0 பேர் தேர்ச்சி- ஒருவருக்குக் கூட தகுதியில்லையா? வெளியான அதிர்ச்சித் தகவல்!
ரூ.1.94 லட்சம் சம்பளம்; தேர்வில் 0 பேர் தேர்ச்சி- ஒருவருக்குக் கூட தகுதியில்லையா? வெளியான அதிர்ச்சித் தகவல்!
Mudhalvar Marundhagam: அட..முதல்வர் மருந்தகத்துல விலை இவ்ளோ கம்மியா.? இது உண்மையாவே சூப்பர் திட்டம்...
அட..முதல்வர் மருந்தகத்துல விலை இவ்ளோ கம்மியா.? இது உண்மையாவே சூப்பர் திட்டம்...
Gold Rate: போற போக்க பாத்தா, இறங்க வாய்ப்பில்ல போலயே.?!! உச்சியிலேயே இருக்கும் தங்கம் விலை...
போற போக்க பாத்தா, இறங்க வாய்ப்பில்ல போலயே.?!! உச்சியிலேயே இருக்கும் தங்கம் விலை...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sengottaiyan: Three Language Policy | மாநில அதிகாரம் பறிப்புசெக் வைத்த மத்திய அரசுCBSE-ல் நடக்கும் ட்விஸ்ட் | Hindi | DMK | UdhayanidhiDurai Murugan Slams Vijay: போட்டுடைத்த கமல்  ”விஜய்க்கு 2026-ல புரியும்” டார்கெட் செய்த சாட்டை!PM Modi with pawan kalyan:  காவி உடையில் ENTRY! மோடி சொன்ன வார்த்தை? உண்மையை உடைத்த பவன்கல்யாண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kaliammal Quits NTK: நாம் தமிழருக்கு குட் பை! கட்சியில் இருந்து விலகினார் காளியம்மாள்! அடுத்து எந்த கட்சி?
Kaliammal Quits NTK: நாம் தமிழருக்கு குட் பை! கட்சியில் இருந்து விலகினார் காளியம்மாள்! அடுத்து எந்த கட்சி?
ரூ.1.94 லட்சம் சம்பளம்; தேர்வில் 0 பேர் தேர்ச்சி- ஒருவருக்குக் கூட தகுதியில்லையா? வெளியான அதிர்ச்சித் தகவல்!
ரூ.1.94 லட்சம் சம்பளம்; தேர்வில் 0 பேர் தேர்ச்சி- ஒருவருக்குக் கூட தகுதியில்லையா? வெளியான அதிர்ச்சித் தகவல்!
Mudhalvar Marundhagam: அட..முதல்வர் மருந்தகத்துல விலை இவ்ளோ கம்மியா.? இது உண்மையாவே சூப்பர் திட்டம்...
அட..முதல்வர் மருந்தகத்துல விலை இவ்ளோ கம்மியா.? இது உண்மையாவே சூப்பர் திட்டம்...
Gold Rate: போற போக்க பாத்தா, இறங்க வாய்ப்பில்ல போலயே.?!! உச்சியிலேயே இருக்கும் தங்கம் விலை...
போற போக்க பாத்தா, இறங்க வாய்ப்பில்ல போலயே.?!! உச்சியிலேயே இருக்கும் தங்கம் விலை...
Telangana Tunnel: கண்முன்னே பறிபோகும் 8 உயிர்கள்? சுரங்கப்பாதையை அடைத்த தண்ணீர், சேறு & சகதியால் பிரச்சனை
Telangana Tunnel: கண்முன்னே பறிபோகும் 8 உயிர்கள்? சுரங்கப்பாதையை அடைத்த தண்ணீர், சேறு & சகதியால் பிரச்சனை
ஜெயலலிதா நாமம் வாழ்க! – வேதா இல்லத்தில் ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி
ஜெயலலிதா நாமம் வாழ்க! – வேதா இல்லத்தில் ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி
டெம்போவும் லாரியும் மோதி பாலத்தில் இருந்து கவிழ்ந்து விபத்து – 7 பேர் சம்பவ இடத்திலேயே பலி
டெம்போவும் லாரியும் மோதி பாலத்தில் இருந்து கவிழ்ந்து விபத்து – 7 பேர் சம்பவ இடத்திலேயே பலி
Viral Video: பாகிஸ்தானில் முடியும், இந்தியாவில் சாத்தியமா? விளையாட்டை விழுங்கிய அரசியல்? வைரல் வீடியோ
Viral Video: பாகிஸ்தானில் முடியும், இந்தியாவில் சாத்தியமா? விளையாட்டை விழுங்கிய அரசியல்? வைரல் வீடியோ
Embed widget