மேலும் அறிய

போதையில் தள்ளாடும் பிரபல மலையாள நடிகர்கள்.. நடிக்க தடை விதித்த திரையுலக சங்கங்கள்..! ரசிகர்கள் அதிர்ச்சி

நடிகர்கள் ஸ்ரீநாத் பாசி, ஷேன் நிகாம் ஆகியோருக்கு மலையாள திரைப்பட உலகம் தடை விதித்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

நடிகர்கள் ஸ்ரீநாத் பாசி, ஷேன் நிகாம் ஆகியோருக்கு மலையாள திரைப்பட உலகம் தடை விதித்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

மலையாள நடிகர்:

தரமான சினிமாக்களை தொடர்ந்து வழங்கி வரும் மலையாள சினிமாவுக்கென உலகமெங்கும் தனி ரசிகர் கூட்டம் உள்ளது. ஆனால் அங்கு இரு நடிகர்களுக்கு நடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பல மலையாள படங்களில் சிறிய வேடங்களில் நடித்து வந்த ஷேன் நிகம், 2013 ஆம் ஆண்டு வெளியான வெளியான நீலகாஷம் பச்சைக்கடல் சுவாச பூமி என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து கிஸ்மத் (2016), பரவா, கும்பலாங்கி நைட்ஸ் (2019) மற்றும் இஷ்க் போன்ற படங்களில் நடித்தார். 

தடை விதித்த நடிகர் சங்கம்:

அதேசமயம் 2017 ஆம் ஆண்டு வெளியாகிய C/O சைரா பானு படத்தில் அமலா மற்றும் மஞ்சு வாரியருடன் நடித்த ஷேன் நிகம் சிறந்த நடிப்புக்காக பாராட்டைப் பெற்றார். இவர் நடிப்பில் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி பிரியதர்ஷன் இயக்கிய கொரோனா பேப்பர்ஸ் படம் வெளியானது. இதில் சக நடிகர் ஷைன் டாம் சாக்கோ மற்றும் ஜீன் லால் ஆகியோருடன் இணைந்து நடித்திருந்தார். ஆக்‌ஷன் த்ரில்லர் கதையம்சம் கொண்ட இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இப்படியான நிலையில் திரைப்பட தொழிலாளர்கள் சங்கம் மற்றும் மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கம் (அம்மா), தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் நடிகர்கள் ஷேன் நிகம் மற்றும் ஸ்ரீநாத் பாசி ஆகியோருக்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டது. இனி இருவரின் படங்களுக்கும் ஒத்துழைக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

போதைக்கு அடிமை:

இதுதொடர்பாக தயாரிப்பாளர் ரஞ்சித் பத்திரிகையாளர் சந்தித்தார். அப்போது, “போதைக்கு அடிமையான கலைஞர்களுக்கு சங்கம் ஒருபோதும் ஒத்துழைக்காது என்றும், ஷேன் நிகாம் மற்றும் ஸ்ரீநாத் பாசி இருவரும் அடிக்கடி சுயநினைவின்றி நடந்து கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இருவரும் ஷூட்டிங்கில் போதையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது சக நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு பிரச்சினையை ஏற்படுத்துகிறது” என தெரிவித்திருந்தார். 

திரையுலக தடையால் ஷேன் நிகம் ஒப்பந்தமாகியுள்ள . பெர்முடா, குபானி, கல்ப், பைங்கிலி, பராக்கிரமம் மற்றும் ஆயிரத்தோன்னம் ரவு ஆகிய படங்களின் நிலை என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.  அதேசமயம் ஸ்ரீநாத் பாசி வேண்டுமென்றே பல படங்களுக்கு ஒரே தேதிகளைக் கொடுத்ததாகவும், இதனால் தயாரிப்பாளர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. மேலும் போதைக்கு அடிமையான நடிகர்களின் பட்டியலை  மாநில அரசிடம் சமர்ப்பிக்கப் போவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

வேற ஆளே இல்லையா? மணிப்பூரை கையில் எடுத்த விஜய்! போட்டுத்தாக்கிய அண்ணாமலை! இடையில் சிக்கிய விசிக! 
வேற ஆளே இல்லையா? மணிப்பூரை கையில் எடுத்த விஜய்! போட்டுத்தாக்கிய அண்ணாமலை! இடையில் சிக்கிய விசிக! 
விசிகவில் இருந்து தூக்கி எறியப்படும் ஆதவ் அர்ஜுனா? சாட்டையை சுழற்றும் திருமா!
விசிகவில் இருந்து தூக்கி எறியப்படும் ஆதவ் அர்ஜுனா? சாட்டையை சுழற்றும் திருமா!
என் கூட குடும்பம் நடத்த முடியாது; ஆனால் ரோகித் நடத்துவார்: எப்படின்னு விவரிக்கும் அன்னபூரணி அரசு அம்மா
என் கூட குடும்பம் நடத்த முடியாது; ஆனால் ரோகித் நடத்துவார்: எப்படின்னு விவரிக்கும் அன்னபூரணி அரசு அம்மா
சீமான் என்னை திட்டினாலும் பரவாயில்லை: கஸ்தூரி வைக்கும் ஒரே ஒரு கோரிக்கை! 
சீமான் என்னை திட்டினாலும் பரவாயில்லை: கஸ்தூரி வைக்கும் ஒரே ஒரு கோரிக்கை! 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMK Vs TVK | Aloor Shanavas: என்னது விஜய் கூத்தாடியா? உங்க தலைவர் திருமா யாரு? ஷா நவாஸை பொளக்கும் பிரபலங்கள்!Aadhav Arjuna: VCK Issue : ஆதவ் பற்றவைத்த நெருப்புகோபத்தில் விசிக சீனியர்ஸ்! கட்சியை காப்பாற்றுவாரா திருமா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வேற ஆளே இல்லையா? மணிப்பூரை கையில் எடுத்த விஜய்! போட்டுத்தாக்கிய அண்ணாமலை! இடையில் சிக்கிய விசிக! 
வேற ஆளே இல்லையா? மணிப்பூரை கையில் எடுத்த விஜய்! போட்டுத்தாக்கிய அண்ணாமலை! இடையில் சிக்கிய விசிக! 
விசிகவில் இருந்து தூக்கி எறியப்படும் ஆதவ் அர்ஜுனா? சாட்டையை சுழற்றும் திருமா!
விசிகவில் இருந்து தூக்கி எறியப்படும் ஆதவ் அர்ஜுனா? சாட்டையை சுழற்றும் திருமா!
என் கூட குடும்பம் நடத்த முடியாது; ஆனால் ரோகித் நடத்துவார்: எப்படின்னு விவரிக்கும் அன்னபூரணி அரசு அம்மா
என் கூட குடும்பம் நடத்த முடியாது; ஆனால் ரோகித் நடத்துவார்: எப்படின்னு விவரிக்கும் அன்னபூரணி அரசு அம்மா
சீமான் என்னை திட்டினாலும் பரவாயில்லை: கஸ்தூரி வைக்கும் ஒரே ஒரு கோரிக்கை! 
சீமான் என்னை திட்டினாலும் பரவாயில்லை: கஸ்தூரி வைக்கும் ஒரே ஒரு கோரிக்கை! 
"பக்திமானா இருப்பார் போல" பெட்ரோல் பங்கில் சாமியை கும்பிட்டுவிட்டு ஆட்டைய போட்ட திருடர்!
"அவங்களுக்கு தகுதி இருக்கு" மம்தா தலைமையில் இந்தியா கூட்டணி? பயங்கர வியூகமா இருக்கே!
Vijay - Seeman:
Vijay - Seeman: "திருமாதான் வேண்டும்" சீமானை கண்டுகொள்ளாத விஜய்! அப்செட்டில் அண்ணன்!
வேகமாக சென்ற கார் மரத்தில் மோதி விபத்து - 4 பேர் பலி
வேகமாக சென்ற கார் மரத்தில் மோதி விபத்து - 4 பேர் பலி
Embed widget