Vettaiyan Holiday : வேட்டையன் படம் பார்க்க விடுமுறை அளித்த அலுவலகங்கள்...குழந்தைகளைப் போல் குஷியில் ஊழியர்கள்
ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் வெழியாவதை முன்னிட்டு தனியார் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளன.
வேட்டையன்
ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் நாளை அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. த.செ.ஞானவேல் இயக்கியுள்ள இப்படத்தில் அமிதாப் பச்சன் , ஃபகத் ஃபாசில் , மஞ்சு வாரியர் , ரித்திகா சிங் , துஷாரா விஜயன் , ரானா டகுபடி , கிஷோர் , அபிராமி , விஜய் டிவி ரக்ஷன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்துள்ளார். லைகா ப்ரோடக்ஷன்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. தமிழ் , தெலுங்கு , இந்தி , மலையாளம் , கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் இப்படம் வெளியாக இருக்கிறது
விடுமுறை அறிவித்த அலுவலகங்கள்
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். ஒவ்வொரு முறை ரஜினி படம் வெளியாகும் போது திரையரங்குகள் திருவிழாவைப் போல் காட்சியளிக்கின்றன. வருடந்தோறும் ஜப்பானில் தனது மனைவியோடு சென்னை வந்து ரஜினி படம் பார்த்து செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார் ரசிகர் ஒருவர்.
When you see companies declaring holidays for a movie , you know Its a #Rajinikanth movie 🔥#Trendsetter #Vettaiyan #vettaiyaanTheHunter pic.twitter.com/n7EVHL2ZCN
— vaishali (@vaisu_tweets) October 9, 2024
அதேபோல் ரஜினி படம் வெளியாகிறது என்றால் தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு விடுமுறை அளிப்பதும் ஒரு சம்பிரதாயமாக மாறிவிட்டிருக்கிறது. கடந்த ஆண்டு ஜெயிலர் , அதற்கு முன்பாக பேட்ட , கபாலி அகிய படங்களுக்கும் இதுபோல் விடுமுறை அளிக்கப்பட்டது. தற்போது வேட்டையன் படத்திற்கும் பல்வேறு தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளன. இதனை ரசிகர்கள் தங்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். இன்னும் சில நிறுவனங்கள் விடுமுறை அறிவித்தது மட்டுமில்லாமல் தங்கள் ஊழியர்களுக்கு வேட்டையன் படத்திற்கான டிக்கெட்களையும் கொடுத்துள்ளன. இப்படியே போனால் ரஜினி படம் வெளியாகும் நாட்கள் அரசு விடுமுறையாகவே அறிவிக்கப்பட்டு விடுமோ..
#Vettaiyan படம் பார்ப்பதற்காக தனது நிறுவன ஊழியர்களுக்கு அக்டோபர் 10ம் தேதி சினிமா டிக்கெட்டும் கொடுத்து அலுவலக விடுமுறையும் கொடுத்த தூத்துக்குடியைச் சேர்ந்த #HYSAS நிறுவனம் 🔥 #VettaiyanVibes #kodankiupdate #VettaiyanFrom10thOctober #VettaiyanBookings #Thoothukudi pic.twitter.com/7HVMb5WSPD
— kodanki (@onlykodanki) October 7, 2024
மேலும் படிக்க : Vettaiyan : வேட்டையன் டைட்டிலை மாற்ற வேண்டும்...கடுப்பான தெலுங்கு ரசிகர்கள்..என்ன காரணம் ?
Amitabh Bachchan Rajinikanth: 32 ஆண்டுகள் கேப், வேட்டையனில் அமிதாப் பச்சன் - ரஜினி காம்போ, முந்தைய கூட்டணி எப்படி?