Beast Trailer Fans Celebration: திரையரங்குகளில் வெளியான பீஸ்ட் ட்ரெய்லர்.. ஆர்ப்பரித்த ரசிகர்கள்.. திக்கிமுக்காடிய சோசியல் மீடியா..!
நடிகர் விஜய் நடிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வெளியாக உள்ள பீஸ்ட் படத்தின் ட்ரெய்லர் தமிழகத்தின் பல திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.
நடிகர் விஜய் நடிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வெளியாக உள்ள ‘பீஸ்ட்’ படத்தின் ட்ரெய்லர் தமிழகத்தின் பல திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. குறிப்பாக சென்னையில் உள்ள ரோஹிணி திரையரங்கின் வெளியே திரையிடப்பட்டது. அதனால் அங்கு ஏராளமான விஜய் ரசிகர்கள் குவிந்தனர்.
#Beast at #FansFortRohini
— Rohini SilverScreens (@RohiniSilverScr) April 2, 2022
That’s the tweet. pic.twitter.com/x7BXyeg2Q7
#BeastAtRohini on #Beast mode 🔥🔥
— Rohini SilverScreens (@RohiniSilverScr) April 2, 2022
Idhu just trailer dhan pa. Apr 13th gonna be 🔥🔥 pic.twitter.com/9Jwuk7Ta1s
நெல்லை ராம் முத்துராம் தியேட்டர்
Earth Shattering Response for #BeastInRamCinemas 🔥 #Beast Mode is on 😎
— Ram Muthuram Cinemas (@RamCinemas) April 2, 2022
pic.twitter.com/aSOt8NrvW7
நடிகர் விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியாக உள்ள பீஸ்ட் படத்தின் ட்ரெய்லர் வெளியாக உள்ள நிலையில் இன்று பீஸ்ட் படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விஜய். ‘மாஸ்டர்’ படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் விஜய், இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் (Beast) படத்தில் நடித்திருக்கிறார். இந்தப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 13-ம் தேதி வெளியாக உள்ளது.
View this post on Instagram
படத்தின் ப்ரொமோஷன் வேலைகளில் ஒரு பகுதியாக, முதல் பாடல் கடந்த மாதம் 14-ம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டது. சிவகார்த்திகேயன் பாடல் வரிகள் எழுதி அனிருத் இசையமைத்துள்ள அரபிக்குத்து பாடல் பல மில்லியன் பார்வையாளர்களை கடந்து ஹிட் அடித்து இருக்கிறது. அதனைத்தொடர்ந்து வெளியான போஸ்டரும் வைரலான நிலையில், விஜய் குரலில் ‘ஜாலிலோ ஜிம்கானா’ பாடலும் சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலானது.