Marimuthu Death: ”மாரிமுத்து ஒரு வாத்தியார் போல சொல்லித் தருவார்” நடிகை சத்திய பிரியா கண்ணீர்..!
Marimuthu Death:எதிர்நீச்சல் தொடர் மூலம் மிகவும் பிரபலமான மாரிமுத்துவின் மரணம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Marimuthu Death: மாரிமுத்து அனைவரையும் சிரிக்க வைக்க கூடிய ஒரு நல்ல நபர் என இயக்குநரும், நடிகருமான எஸ்.ஜே. சூர்யா தெரிவித்துள்ளார்.
மாரிமுத்து மரணம்:
பிரபல தொலைக்கட்சியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியல் மூலம் மிகவும் பிரபலமான மாரித்து இன்று காலை மாரடைப்பால் திடீரென உயிரிழந்தார். சீரியலுக்கு டப்பிங் செய்து கொண்டிருக்கும்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மறைந்த மாரிமுத்துவின் உடலுக்கு நேரில் சென்று திரைபிரபலங்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் மாரிமுத்துவின் உடலுக்கு நேரில் சென்று நடிகரும், இயக்குநருமான எஸ்.ஜே.சூர்யா அஞ்சலி செலுத்தி உள்ளார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “ மாரிமுத்து மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. நான் வசந்த் சார்கிட்ட உதவி இயக்குநராக இருக்கும்போது எனக்கு சீனியராக மாரிமுத்து சார் இருந்தார். அனைவரையும் சிரிக்க வைக்க கூடிய ஒரு நபராக இருந்தார். அவர் நல்ல நிலைக்கு வந்து கொண்டிருந்த நேரத்தில் இப்படி ஒரு நிகழ்வு ஏற்பட்டுள்ளது. இறைவன் ஏன் இப்படி ஒரு கஷ்டத்தை கொடுத்தார் என தெரியவில்லை” என வருத்தத்துடன் பேசியுள்ளார்.
இதேபோன்று மாரிமுத்துவுடன் இணைந்து எதிர்நீச்சல் சீரியலில் நடித்து வரும் நடிகை சத்தியபிரியா மாரிமுத்துவின் மரணம் குறித்து உருக்கத்துடன் பேசினார். அதில், “ஷூட்டிங்கில் மாரிமுத்து ரொம்ப கலகலப்பாக பேசுபவர். ஒவ்வொருவருக்கும் வாத்தியார் போல இருந்து நடிக்க சொல்லி கொடுப்பார். டயலாக் எப்படி பேச வேண்டும், தமிழை எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதை சொல்லி கொடுப்பவர். புதிதாக நடிக்க வருபவர்களுக்கு அவர் ஒரு முன்னுதாரணமாக இருந்தார். அர்ப்பணிப்புடன் இருந்த ஒரு நல்ல நடிகர். சீனியர் என்ற முறையில் பழகாதவர். முதலில் அவர் நடிப்பை சொல்லி கொடுப்பார். அதை புரிந்து கொள்ளவில்லை என்றால் தான் திட்டுவார். சில நேரம் அடிக்கும் நிலைக்கு கூட சென்றிடுவார்” என பேசியுள்ளார். காலையில் இருந்து அவரது உடலுக்கு அருகே இருந்து அஞ்சலி செலுத்தி வரும் சத்யபிரியா மார்முத்துவின் உடலை பார்த்து கதறி அழுதார்.
மாரிமுத்துவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த நடிகர் சூரி, “புலிவால் படத்தில் விமலுடன் மாரிமுத்து அண்ணனுடன் நடித்து உள்ளேன். எனக்கு மிகவும் பிடித்த நபர். அவரது மறைவு செய்தி வதந்தியாக இருக்க கூடாதா என்று நினைத்தேன்” என உருக்கமாக பேசியுள்ளார்.
மேலும் படிக்க: Marimuthu Death: ”மாரிமுத்துவை உங்களுக்கு தெரியுமா..?” வைரமுத்துவிடம் போன் பண்ணி கேட்ட ரஜினி..!
Director Marimuthu: “மனவேதனை தருகிறது” .. இயக்குநர் மாரிமுத்து மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல்..