மேலும் அறிய

Marimuthu Death: ”மாரிமுத்துவை உங்களுக்கு தெரியுமா..?” வைரமுத்துவிடம் போன் பண்ணி கேட்ட ரஜினி..!

எதிர்நீச்சல் தொடரில் ஆதிகுணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த மாரிமுத்துவின் மறைவு திரையுலகம் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Marimuthu Death: ரஜினியே என்னை தொடர்பு கொண்டு மாரிமுத்துவை பற்றி பேட்டார் என மாரிமுத்துவின் மறைவு குறித்து உருக்கமாக வைரமுத்து பேசியுள்ளார். 

மாரிமுத்து மறைவு:

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியல் மூலம் மிகவும் பிர்பலமான மாரிமுத்து இன்று காலை மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். அவரது மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஆரம்ப காலத்தில் வைரமுத்துவுடன் இணைந்து ஒன்றாக பணியாற்றிய மாரிமுத்து குறித்து ஏபிபி நாடு ஊடகத்திற்கு தொலைப்பேசி மூலம் அவரின் நினைவுகளை வைரமுத்து பகிர்ந்து கொண்டார். 

அதில், ”மாரிமுத்து என்ற கலைஞன் இன்று மறைந்து விட்டான், நான் சொல்ல சொல்ல அத்யாயங்களை எழுதியவர் மாரிமுத்து இன்று இல்லை. கல்யாண பூக்கள் எடுத்து கொடுத்த நான், இன்று அவர் சவப்பெட்டிகளில் விழுகின்ற இறுதிப்பூக்களை பார்க்கும்போது என் மனது நொறுங்குகிறது. எனது கவிதை பிரச்சார பீரங்கி மாரிமுத்து. இனி அவர் இல்லை. எனது வரிகளை யார் பிரச்சாரம் செய்வார்கள்..?

வைரமுத்துவிடம் கேட்ட ரஜினி:

கடந்த வாரம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொலைபேசியில் என்னை தொடர்பு கொண்டார். அப்பொது, மாரிமுத்து உங்களுடன் இருந்தாரா என கேட்டார். தொடர்ந்து என்னிடம் பேசிய ரஜினிகாந்த், ஜெயிலர் படத்தின் ஷீட்டிங் இடைவெளியில் மாரிமுத்து என்னிடம் வந்து உட்கார்ந்து கொள்வார். அவர் வாய் திறந்தால் உங்கள் கவிதைகள் தான் வந்து விழுதும், உங்களை பற்றி நான் கேளாத செய்திகளை எல்லாம் சொல்லி சொல்லி என்னை சிலிர்க்க வைத்து விட்டார். உங்கள் மீது அப்படி ஒரு பாசமா, பற்றா என கேட்டார். அதற்கு அவர் என்னுடன் வளர்ந்த பயன், இலக்கியவாதி என்று சொன்னேன்.

சமூக ஊடகங்களில் மாரிமுத்து என்றால் ஒரு அலை அடிக்கும். எனது உதவியாளர்கள் அவரது வளர்ச்சியை பற்றி கூறும் போது, மாரிமுத்து வளர வேண்டிய பையன் என மெய்சிலிர்ந்தேன். அவர் நினைவுகள் மடிவதில்லை. ஆனால், அவரை இழந்து வாடும் குடும்பத்தை நினைத்து தான் கொந்தளித்து நிற்கிறேன். என் மகனுக்கு பெண் பாருங்கள், என் மகளுக்கு மாப்பிளை பாருங்கள் சொல்லி விட்டு சென்றார். இனி நான் யாருடன் உறவாடுவது. அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கல் ஊருக்கெல்லாம் ஆறுதல் நான் சொல்கிறேன். எனக்கு ஆறுதல் யார் சொல்வார்கள்” என உருக்கமாக வைரமுத்து பேசியுள்ளார்.

மேலும் படிக்க: Ethirneechal Marimuthu Passes away: இயக்குநரும், நடிகருமான எதிர்நீச்சல் மாரிமுத்து காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலக ரசிகர்கள்..!

Rajinikanth On Marimuthu: "மாரிமுத்து ஒரு அருமையான மனிதர்..” நடிகர் மாரிமுத்து மறைவுக்கு ரஜினிகாந்த் இரங்கல்

தலைப்பு செய்திகள்

சாய் அப்யங்கரை சாடிய சந்தோஷ் நாராயணன் பதிவுக்கு ‘ஹாஹா’ கமெண்ட்...ஷான் ரோல்டன் விளக்கம்
சாய் அப்யங்கரை சாடிய சந்தோஷ் நாராயணன் பதிவுக்கு ‘ஹாஹா’ கமெண்ட்...ஷான் ரோல்டன் விளக்கம்
Karthigai Deepam: ஆத்திரத்தின் உச்சியில் ரேவதி.. மனம் மாறுவாளா சாமுண்டீஸ்வரி? கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ஆத்திரத்தின் உச்சியில் ரேவதி.. மனம் மாறுவாளா சாமுண்டீஸ்வரி? கார்த்திகை தீபத்தில் இன்று
Alaakaa Loova Lyrics : தனுஷின் ஓம் பட அலாகா லூவா முழு பாடல் லிரிக்ஸ் இதோ
Alaakaa Loova Lyrics : தனுஷின் ஓம் பட அலாகா லூவா முழு பாடல் லிரிக்ஸ் இதோ
பாட்டு ஹிட்டாகிடுச்சுனு ஏமாத்தனும்...சாய் அப்யங்கரை தாக்கி வீடியோ வெளியிட்ட சந்தோஷ் நாராயணன்
பாட்டு ஹிட்டாகிடுச்சுனு ஏமாத்தனும்...சாய் அப்யங்கரை தாக்கி வீடியோ வெளியிட்ட சந்தோஷ் நாராயணன்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
ஸ்விஃப்ட், பலேனோவை முந்தி முதலிடம்; ரூ.4.99 லட்சம் மதிப்பில் கார்- ஹேட்ச்பேக் கார்களின் வரலாற்று கம்பேக்!
ஸ்விஃப்ட், பலேனோவை முந்தி முதலிடம்; ரூ.4.99 லட்சம் மதிப்பில் கார்- ஹேட்ச்பேக் கார்களின் வரலாற்று கம்பேக்!
Manav Suthar: இந்திய சுழலின் எதிர்காலம்.. மானத்தை காப்பாத்தப்போகும் மானவ் சுதர் - யார்?
Manav Suthar: இந்திய சுழலின் எதிர்காலம்.. மானத்தை காப்பாத்தப்போகும் மானவ் சுதர் - யார்?
Minister Vanniyarasu: ”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
Upcoming Hyundai Cars: வரப்போது 5 ஸ்ட்ராங் ஹைப்ட்ரிட் கார்.. ஹுண்டாய் இறக்கப்போகும் அந்த பஞ்ச பாண்டவர்கள் யார்? யார்?
Upcoming Hyundai Cars: வரப்போது 5 ஸ்ட்ராங் ஹைப்ட்ரிட் கார்.. ஹுண்டாய் இறக்கப்போகும் அந்த பஞ்ச பாண்டவர்கள் யார்? யார்?
Embed widget