மேலும் அறிய

Ethir Neechal June 20th : தூக்கு மாட்டச்செல்லும் குணசேகரன்.. குடும்பத்தையே மிரட்டும் ஜான்சி.. ஆதிரை திருமணம் நடக்குமா? எதிர்நீச்சல் அப்டேட்..

Ethir Neechal Serial June 20th : ஆதிரை ஓடிப்போன தகவல் தெரிந்து குணசேகரன் குடும்பத்தை மிரட்டும் ஜான்சி ராணி. நேற்றைய எதிர்நீச்சல் சீரியலில் என்ன நடந்தது?

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் தொடர் கடந்த சில வாரங்களாக ஆதிரை திருமணம் தான் ஹைலைட்டாக இருந்து வருகிறது.  மிகவும் பரபரப்பான கட்டத்தில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பது தான் ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது. அந்த வகையில் நேற்று என்ன நடந்தது என்பதை பார்க்கலாம். 

Ethir Neechal June 20th : தூக்கு மாட்டச்செல்லும் குணசேகரன்.. குடும்பத்தையே மிரட்டும் ஜான்சி.. ஆதிரை திருமணம் நடக்குமா? எதிர்நீச்சல் அப்டேட்..

மண்டபத்தில் குணசேகரன், விசாலாட்சி அம்மாவிடம் உண்மையை சொல்லுமா? அவங்க எங்க போயிருக்காங்க? என கதறுகிறார். இதை எல்லாம் பார்த்த ஜான்சி ராணி ஒட்டுமொத்த குடும்பமாக சேர்ந்து சதி திட்டம் போட்டு என்னை ஏமாற்றுகிறார்களா என கத்துகிறாள்.  ஆதிரை எங்கு?என கேட்டுக்கொண்டு இருக்கும்போது கரிகாலன் அங்கு வருகிறான். ”ஆதிரை நம்மை ஏமாற்றி விட்டு ஓடிப்போய்விட்டாள்” என சொல்கிறான். நடந்ததை எல்லாம் ஒன்று ஒன்றாக சொல்ல, குணசேகரன் அம்மாவிடம் ”எல்லாத்தையும் அப்போ பிளான் பண்ணிதான் போயிருக்காங்க. பெத்த பிள்ளை கேட்கிறேன் அம்மா என்னோட மானம் மரியாதை எல்லாம் போய்விட்டது அம்மா. தயவு செய்து அவங்களை எங்க ஒளித்து வைத்து இருக்க சொல்லுமா?” என கேட்கிறார். ”உன்னோட காலில் விழுறேன் அம்மா” என கதறுகிறார். இந்த நேரம் பார்த்து ஜான்சி ராணி, “இங்க பாரு அண்ணன் குறித்த நேரத்தில் உன்னோட தங்கச்சிக்கு என்னோட மகனுக்கும் கல்யாணம் நடந்தே  தீரணும் இல்லனா நீ வேற ஜான்சி ராணியை பார்ப்பா. ஒட்டுமொத்த குடும்பத்தையும் சந்தி சிரிக்க வைத்துவிடுவேன். இன்னும் பத்து நிமிஷம் டைம் தரேன் அதுக்குள்ள சொல்லிடுங்க” என அம்மாவிடம் சொல்கிறார் குணசேகரன்.

”வீட்டுக்கு பொண்ணு மாப்பிள்ளையை கூட்டிக்கொண்டு போக மாட்டீங்க என்னோட பிணத்தைதான் எடுத்துக் கொண்டு போவீங்க. இந்த பொம்பளைங்களை நான் என்ன செய்யப்போறேன்னு பாருங்க. என்னோட தங்கச்சி கல்யாணத்தை எப்படி செய்து வைக்க வேண்டும் என எனக்கு தெரியும்” என சொல்ல உடனே ஜான்சி ராணி, ”கல்யாணம் மட்டும் நடக்கலை நீ சாவுறது என்ன நானே உன்னோட கதையை முடிக்காம இங்க இருந்து நகர மாட்டேன்” என மிரட்டுகிறாள். 

Ethir Neechal June 20th : தூக்கு மாட்டச்செல்லும் குணசேகரன்.. குடும்பத்தையே மிரட்டும் ஜான்சி.. ஆதிரை திருமணம் நடக்குமா? எதிர்நீச்சல் அப்டேட்..

மறுபக்கம் ஆதிரை மற்றும் ஜனனி டீம் கோயிலுக்கு சென்று விடுகிறார்கள். அங்கு சக்தியிடம் கௌதம் மற்றும் அருண் பற்றி விசாரிக்கிறார்கள். நான் போன் பண்ணாலும் லைன் போகவில்லை. அவர்கள் வந்து கொண்டு தான் இருப்பார்கள் என சொல்கிறான். ரேணுகா கரிக்கலானே பரவாயில்லை. இந்த அருண் பையன் ஏன் இப்படி சோப்லாங்கி பயலா இருக்கான் என சொல்கிறாள். 

மண்டபத்தில் ஞானம், குணசேகரனிடம் எல்லா கோயிலிலும் தேடியும் அவர்கள் எங்கும் இல்லை என தகவல் வந்துள்ளதாக குணசேகரிடம் சொல்கிறான். ”கடைசியா ஆதிரை பொறந்த போது மூத்த அண்ணனுக்கு பெருமை சேர்ப்பாள் என நினைத்தேன் ஆனால் அவள் என் மானத்தை வாங்கிவிட்டாள். என்னோட மானம் போய்விட்டது. இனிமேல் நான் வாழ்வதில் அர்த்தமில்லை. எல்லாரும் மானத்தை வாங்குவதை காட்டிலும் நான் சாவதே மேல் என ரூமுக்குள் சென்று தூக்கு போட்டு கொள்கிறார். அனைவரும் சேர்ந்து கதவை உடைத்து காப்பாற்றுகிறார்கள். 

குணசேகரன், ”நான் இருப்பதுதான் எல்லாருக்கும் பிரச்சனையா இருக்கு  நான் செத்து போயிடுறேன். அவங்க அவங்களுக்கு என்ன வேணுமோ பண்ணிக்கோங்க. அம்மா உங்களுக்கு வேணும் என்றால் நான் பிடிக்காதவனாக இருக்கலாம். எனக்கு சாமி நீ தானே அம்மா. யாருமே உண்மையை சொல்லவில்லை என்றால் நான் என்ன அம்மா பண்ண முடியும்” என அழுகிறார். அவளுக்காக நீங்க ஏன் அண்ணா சாகனும் நான் இப்போவே போய் அவளை வெட்டிட்டு வந்து விடுகிறேன் என கதிர் கிளம்புகிறான். 

Ethir Neechal June 20th : தூக்கு மாட்டச்செல்லும் குணசேகரன்.. குடும்பத்தையே மிரட்டும் ஜான்சி.. ஆதிரை திருமணம் நடக்குமா? எதிர்நீச்சல் அப்டேட்..
விசாலாட்சி, குணசேகரனிடம், “என்னை மன்னித்து விடு பா. நான் தான் அவளை அனுப்பிவிட்டேன். அவளை நாம் மறந்து விடலாம். அவள் இனிமேல் நமக்கு தேவையில்லை” என கூறுகிறார். இதை கேட்ட ஜான்சி ராணி, “அப்போ அவ ஒடித்தான் போய்விட்டாளா. அப்போ ஊர்முழுக்க என் மகனுக்கு உன்னோட பொண்ணு தான் போஸ்டர் ஒட்டிவிட்டு இப்போ அந்த ஆளு சாகப்போறேன் சொல்றான், நீ என்னவோ போகட்டும் விடுடானு சொல்ற அப்போ நாங்க என்ன தலையில துண்டு போட்டுக்கிட்டு போகவா. பொண்ணு குடுக்குறீங்களே என்பதற்காக அண்ணன் என கூப்பிட்டா ஆளாளுக்கு அதிகாரம் பண்றீங்க. உன் தங்கச்சி மட்டும் என்னோட மகனுக்கு இல்லனு ஆகட்டும் உங்க எல்லாரோட வேட்டியையும் அவுத்துவிடுவேன். கரிகாலன் அழுதுகிட்டே இனிமே இந்த கல்யாணம் நடக்கும் எனக்கு நம்பிக்கையே இல்லை. இந்த கல்யாணம் நடக்கவில்லை என்றால் மொத்த குடும்பத்தையும் முடித்துவிடுவேன்” சொல்லிவிட்டேன் என மிரட்டுகிறாள். அத்துடன் இந்த எபிசோட் முடிவுக்கு வருகிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

விஜய்யை தாக்கிய வெற்றிமாறன்! பின்னணியில் திமுக? கொந்தளிக்கும் தவெகவினர்”குறுக்க வர மாட்டோம்” மோடிக்கு CALL பண்ண ஷிண்டே! சோகத்தில் சிவசேனா”இவர் தான் என் காதலர்”மதம் மாறும் கீர்த்தி சுரேஷ்? கிறித்தவ முறைப்படி திருமணம்திமுக பக்கம் சாயும் நயினார்! EPS கொடுத்த அசைன்மெண்ட்! நேரில் சென்ற SP வேலுமணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Fengal Cyclone: நாளை 16 மாவட்டங்களில் கனமழை.! அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை இருக்கு; லிஸ்ட் இதோ.!
Fengal Cyclone: நாளை 16 மாவட்டங்களில் கனமழை.! அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை இருக்கு; லிஸ்ட் இதோ.!
Salem Power Shutdown: சேலத்தில் நாளை (28.11.2024) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது மக்களே
சேலத்தில் நாளை (28.11.2024) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது மக்களே
Sabarimala: ஐயப்ப பக்தர்களே பம்பை நதிக்கரையிலிருந்தும் இருமுடி கட்டி செல்லலாம் -  புது அறிவிப்பு இதோ
ஐயப்ப பக்தர்களே பம்பை நதிக்கரையிலிருந்தும் இருமுடி கட்டி செல்லலாம் - புது அறிவிப்பு இதோ
Suriya 45 : தோல்வியில் இருந்து மீளும் சூர்யா...கோயம்புத்தூரில் பூஜையுடன் தொடங்கியது சூர்யா 45 படப்பிடிப்பு
Suriya 45 : தோல்வியில் இருந்து மீளும் சூர்யா...கோயம்புத்தூரில் பூஜையுடன் தொடங்கியது சூர்யா 45 படப்பிடிப்பு
Embed widget