Entertainment Headlines: இயக்குனராக ஆசைப்படும் ஜெயம் ரவி... சந்திரமுகி 2 -வில் 480 ஷாட்கள் மிஸ்.. சினிமா ரவுண்ட் அப்
Entertainment Headlines Sep 25: திரையுலகில் இன்று இதுவரை நடந்த நிகழ்வுகளை கீழே விவரமாகக் காணலாம்.
- Vijay Sethupathi: விஜய் சேதுபதியை வைத்து படம் இயக்க ஆசைப்படும் ஜெயம் ரவி.. என்ன காரணம் தெரியுமா?
ஜெயம் ரவி - நயன்தாரா நடித்திருக்கும் இறைவன் திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 28 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. என்றென்றும் புன்னகை, மனிதன் உள்ளிட்ட படங்களை இயக்கிய ஐ.அகமத் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். தனி ஒருவன் திரைப்படத்துக்கு பிறகு நயன்தாரா - ஜெயம் ரவி - இரண்டாவது முறையாக இந்தப் படத்தில் இணைந்துள்ளார்கள். ராகுல் போஸ், ஆஷிஷ் வித்யார்த்தி, நரேன், சார்லி, அழகம் பெருமாள், பகவதி பெருமாள், விஜயலட்சுமி, மற்றும் வினோத் கிஷன் உள்ளிட்டவர்கள் இறைவன் படத்தில் நடித்துள்ளார்கள். மேலும் படிக்க
- Udhayanidhi Stalin: 'கார்ப்பரேட் உலகின் அநீதியை தட்டிக் கேட்கும் உதயநிதி'.. அக்டோபர் 2 ஆம் தேதி இருக்கு கச்சேரி..!
உதயநிதி ஸ்டாலின் நடித்து கடந்த ஆண்டு வெளியான கலகத் தலைவன் திரைப்பட டிவியில் ஒளிபரப்பாவது குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று இந்த படம் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது இது தொடர்பான விளம்பரமானது கார்ப்பரேட் உலகின் அநீதியை தட்டி கேட்கும் கலகத்தலைவன் என்ற கேப்ஷனோடு செய்யப்பட்டு வருவது இணையத்தில் வைரலாகியுள்ளது. மேலும் படிக்க
- Chandramukhi 2: காணாமல் போன 480 ஷாட்கள்.. ஷாக்கான சந்திரமுகி 2 படக்குழு.. கடைசியில் என்ன நடந்தது தெரியுமா?
சந்திரமுகி 2 படத்தில் தெலுங்கு ரிலீஸ் புரோமோஷனுக்காக படக்குழுவினர் ஹைதராபாத் சென்றுள்ளனர். அப்போது படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது குறித்து இயக்குநர் வாசு பதிலளித்தார்.செப்டம்பர் 15 ஆம் தேதி படம் ரிலீசாவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் செப்டம்பர் 8 ஆம் தேதி இறுதி பிரதியை பார்க்க தான் விரும்பியதாகவும், ஆனால் அன்றைய தினம் 480 ஷாட்கள் காணவில்லை என்று படக்குழுவினரிடம் இருந்து போன் வந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தேன் என்றும் தெரிவித்தார். மேலும், ‘அந்த காட்சிகளை திரும்ப பெற 150க்கும் மேற்பட்ட டெக்னீஷியன்கள் 4,5 நாட்களாக போராடி மீட்டனர். நான் இப்படியெல்லாம் நடக்குமா? என நினைத்துக் கொண்டேன். மேலும் படிக்க
- Sivakarthikeyan: இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸூடன் இணையும் சிவகார்த்திகேயன்.. அப்ப நெக்ஸ்ட் பிளான் அதுதானா?
முதல்முறையாக ஏ.ஆர்.முருகதாஸ் - சிவகார்த்திகேயன் கூட்டணி இணைந்துள்ளது. இன்றைய தினம் முருகதாஸ் பிறந்தநாள் என்பதால் அவருக்கு சிவகார்த்திகேயன் வாழ்த்து தெரிவித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். அதில், “இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் முருகதாஸ் சார். உங்களுடன் என்னுடைய 23வது படத்தில் இணைவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. நீங்கள் கூறிய கதையை கேட்டபின் என்னுடைய மகிழ்ச்சி இரட்டிப்பாகியுள்ளது. இந்த படம் எனக்கு எல்லா விதங்களிலும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். மேலும் படப்பிடிப்பை தொடங்க ஆவலுடன் காத்திருக்கிறேன்” என தெரிவித்துள்ளார். மேலும் படிக்க
- Parineeti Chopra: ‘காதல் கணவா உந்தன் கரம் விடமாட்டேன்’ .. பரீனிதி சோப்ரா திருமண புகைப்படங்கள் வைரல்..!
பரினீதி சோப்ரா - ராகவ் சத்தா காதலை உறுதி செய்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு டெல்லியில் நிச்சயதார்த்தம் விமரிசையாக நடைபெற்றது. இருவரும் நேற்று (செப்டம்பர் 24) ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் திருமணம் செய்துக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் தவிர்த்து மிக முக்கியமான பிரபலங்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, ஆம் ஆத்மி கட்சி பிரபலங்கள் உள்ளிட்ட சிலர் மட்டுமே கலந்து கொண்டனர்.