24 மணி நேரமும் மதுபானக்கூடம் செயல்படுவதாக கூறி வீடியோ வெளியிட்ட பாஜக நிர்வாகி கைது
பழனியில் பாரதிய ஜனதா கட்சியின் திண்டுக்கல் மேற்கு மாவட்ட தலைவர் கனகராஜ் கைது செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவி ஒருவருக்கு நிகழ்ந்த பாலியல் வன்புணர்வு சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. குறிப்பாக பாஜக மாநிலத்தலைவர் கடும் கண்டனம் தெரிவித்தது மட்டுமின்றி தன்னைத்தானே சாட்டையால் அடித்துக் கொள்ளும் போராட்டத்திலும் ஈடுபட்டார். அதை தொடர்ந்து பாஜக மகளிரணி சார்பில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதிகேட்டு மதுரையில் இருந்து நீதிப் பேரணியாக துவங்கி சென்னை சென்று ஆளுநரிடம் மனு அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து பாஜக மகளிரணியினர் நடத்தவிருந்த நீதிப்பேரணியில் பங்கெடுக்க தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பெண்கள் மதுரைக்கு செல்ல திட்டமிட்டிருந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புறப்படும் இடத்திலேயே அனைவரும் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் பழனியில் இருந்து பாஜக மகளிரணியை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட பெண்கள் மதுரைக்கு வேனில் புறப்பட்டபோது தடுத்து நிறுத்திய போலீசார் அவர்களை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பெண்கள் அனைவரையும் தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.
சீமான் நிகழ்வில் தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிப்பு - அமைச்சர் சேகர்பாபு சொன்ன பதில்
அப்போது 15 பெண்களை கைது செய்து அடைத்து வைத்திருக்கும் மண்டபத்திற்கு 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டபோது மண்டபத்தின் அருகிலேயே தனியார் மதுபான பார் ஒன்று செயல்பட்டு வருவதை செய்தியாளர் சந்திப்பிலேயே பாரதிய ஜனதா கட்சியின் திண்டுக்கல் மேற்கு மாவட்ட தலைவர் கனகராஜ் செய்தியாளர்களை அழைத்துக்கொண்டு மதுபான பாரின் உள்ளே அழைத்துச் சென்று காண்பித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. மேலும் காவல்துறையை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக மதுபான கூடத்திற்குள் அத்துமீறி நுழைந்தது பணியாளர்களை தாக்கியது உள்பட ஐந்து பிரிவுகளில் பழனி நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து திண்டுக்கல் மேற்கு மாவட்ட தலைவர் கனகராஜ் இன்று மாலை கொடைக்கானல் சென்று விட்டு தனது காரில் பழனிக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது பழனி கொடைக்கானல் சாலையில் உள்ள அய்யம்புள்ளி காவல்துறை சோதனைச் சாவடியில் காத்திருந்த போலீசார், பாஜக மாவட்ட தலைவர் கனகராஜ் மற்றும் பாஜக மாவட்ட பொது செயலாளர் செந்தில்குமார் ஆகியோரை கைது செய்தனர். மாவட்டத் தலைவர் கனகராஜ் கைது செய்யப்பட்ட தகவல் அறிந்து பழனி நகர காவல் நிலையம் முன்பாக ஏராளமான கட்சி நிர்வாகிகள் திரண்டனர். பாஜக திண்டுக்கல் மேற்கு மாவட்ட தலைவர் கனகராஜ் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.