Udhayanidhi Stalin: 'கார்ப்பரேட் உலகின் அநீதியை தட்டிக் கேட்கும் உதயநிதி'.. அக்டோபர் 2 ஆம் தேதி இருக்கு கச்சேரி..!
நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடித்த கலகத்தலைவன் திரைப்படம் முதல் முறையாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாவது குறித்த அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடித்த கலகத்தலைவன் திரைப்படம் முதல் முறையாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாவது குறித்த அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ரெட் ஜெயன்ட் நிறுவனம் மூலம் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக அறிமுகமானவர் உதயநிதி ஸ்டாலின். தொடர்ந்து பல படங்களை சொந்தமாக தயாரித்தும், விநியோக உரிமையை பெற்றும் சினிமாவில் முக்கிய புள்ளியாக திகழ்ந்தார். அவர் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆனார். தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்த உதயநிதி ஸ்டாலின் கடைசி படமாக மாமன்னன் கடந்த ஜூன் மாதம் வெளியானது. இந்தப் படம் உருவாகிக் கொண்டிருக்கும் போதே அவர் தமிழ்நாடு அரசு விளையாட்டு துறை அமைச்சர் பொறுப்பேற்றார்.
எனவே சினிமாவில் இருந்து விலகுவதாகவும் மக்கள் பணியாற்ற உள்ளதாகவும் தெரிவித்தார். இதற்கிடையில் தமிழ்நாடு அரசின் சார்பில் பல்வேறு பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்தும், தனது கருத்துக்களை தைரியமாக தெரிவித்தும் பொதுமக்களிடையே உதயநிதி ஸ்டாலின் மிகப்பெரிய பாராட்டை பெற்று வருகிறார். விரைவில் அவர் துணை முதல்வர் ஆகலாம் என்றெல்லாம் பேச்சு ஒரு புறம் இருக்க சமீபத்தில் சமாதானம் குறித்து உதயநிதி தெரிவித்த கருத்து பெரும் புயலை தமிழக அரசு கிளப்பியது.
View this post on Instagram
இப்படியான நிலையில் உதயநிதி ஸ்டாலின் நடித்து கடந்த ஆண்டு வெளியான கழகத் தலைவன் திரைப்பட டிவியில் ஒளிபரப்பது குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று இந்த படம் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது இது தொடர்பான விளம்பரமானது கார்ப்பரேட் உலகின் அநீதியை தட்டி கேட்கும் கலகத்தலைவன் என்ற கேப்ஷனோடு செய்யப்பட்டு வருவது இணையத்தில் வைரலாகியுள்ளது.
ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் எடுக்கப்பட்ட இந்த படத்தை பிரபல இயக்குநரும், நடிகருமான மகிழ் திருமேனி இயக்கியிருந்தார். தனது ரெட் ஜெயண்ட் நிறுவனம் மூலம் இப்படத்தை உதயநிதி ஸ்டாலின் சொந்தமாக தயாரித்திருந்தார். கலகத்தலைவன் படத்தில் ஆரவ். நிதி அகர்வால், கலையரசன், அனுபமா குமார் என பலரும் நடித்திருந்தனர். அரோல் குரோலி, ஸ்ரீகாந்த் தேவா இருவரும் இசையமைத்திருந்தனர்.
படத்தின் கதை என்றுன் பார்க்கும்போது 'கார்ப்பரேட் அரக்கனை' வீழ்த்த முயற்சிக்கும் ஹீரோ என்ற பழைய கதைதான் என்றாலும், சில காட்சிகள் சீட் நுனிக்கு நம்மை வரவழைக்கும் வகையில் இருந்தது பாராட்டைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: S.P.Balasubrahmanyam: நினைவுகளில் நீங்கா எஸ்.பி.பாலசுப்பிரமணியம்.. 3ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று..!