மேலும் அறிய

Entertainment Headlines Sep 04: மாஸ் காட்டும் மார்க் ஆண்டனி ட்ரெய்லர்.. கம்பேக் கொடுக்கும் டி.ராஜேந்தர்.. லேட்டஸ்ட் சினிமா செய்திகள் இதோ..!

Entertainment Headlines Sep 04: திரையுலகில் இன்று இதுவரை நடந்த நிகழ்வுகளை கீழே விவரமாக காணலாம்.

  • 17 மணி நேரத்தில் ஒரு கோடி வியூஸ்... விஷால், எஸ்.ஜே.சூர்யாவின் ‘மார்க் ஆண்டனி’ ட்ரெய்லர் சாதனை!

நடிகர்கள் விஷால், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள மார்க் ஆண்டனி திரைப்படம் வரும் செப்.15ஆம் தேதி வெளியாக உள்ளது. டைம் ட்ராவலை மையமாகக் கொண்ட காமெடி ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகியுள்ள இந்தப் படத்தில் ரிது வர்மா ஹீரோயினாக நடித்துள்ளார். நேற்று மார்க் ஆண்டனி படத்தின் ட்ரெய்லர் வெளியான நிலையில், தொடர்ந்து யூட்யூபில் ட்ரெய்லர் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்து வருகிறது. இது  கடந்த 17 மணி நேரத்தில் மார்க் ஆண்டனி ட்ரெய்லர் 10 மில்லியன் அதாவது ஒரு கோடிக்கும் மேற்பட்ட பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது. மேலும் படிக்க

  • 'மூச்சுவிடும் நேரத்துக்குள் பகைவரால் அழிக்கப்படுவர்' - திருக்குறள் பகிர்ந்து வெற்றிமாறனை வாழ்த்திய விடுதலை படக்குழு

இயக்குநர் வெற்றிமாறன் இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். இந்நிலையில், விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் வெளியான விடுதலை முதல் பாகத்தில் வெற்றியைத் தொடர்ந்து தற்போது விடுதலை இரண்டாம் பாகத்தில் படப்பிடிப்பில் பிஸியாக இருந்து இருக்கிறார் வெற்றிமாறன். இதனிடையே ‘உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர்  செம்மல் சிதைக்கலா தார் “ என்கிற திருக்குறளைப் பகிர்ந்து இயக்குநர் வெற்றிமாறனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர் விடுதலைப் படக்குழுவினர். மேலும் படிக்க

  • ஷோபனாவுடன் மீண்டும் இணையும் ‘பலம்'... டி50 படத்தில் தனுஷ் - நித்யா மேனன் கூட்டணி!

திருச்சிற்றம்பலம் படத்துக்குப் பிறகு நடிகர் தனுஷூடன் நடிகை நித்யா மேனன் மீண்டும் படத்தில் இணையவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தனுஷ் இயக்கி நடிக்கும் இன்னும் பெயரிடப்படாத ‘தனுஷ் -50’ படத்தில்  நடிகர்கள் எஸ்.ஜே சூர்யா, சுந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தில் தான்  நித்யா மேனன் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் படம் மூன்று சகோதரர்களின் கதையை மையமாகக் கொண்டு உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது. மேலும் படிக்க

  • இறைவன், பார்க்கிங் ஒரே நாளில் ரிலீஸ்.. செம கடுப்பில் கோலிவுட் வட்டாரம்... காரணம் இதுதான்! 

இறைவன் மற்றும் பார்க்கிங் ஆகிய இரண்டு படங்களை ஒரே நாளில் வெளியிடத் திட்டமிட்டுள்ள பேஷன் ஸ்டுடியோஸின் மேல் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.  இதில் அஹமத் இயக்கத்தில் நீண்ட நாட்களாக படப்பிடிப்பில் இருந்து வரும்  இறைவன் படத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா, நரேன், ராகுல் போஸ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.  அதேபோல் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கி ஹரிஷ் கல்யாண், இந்துஜா, எம். எஸ்.பாஸ்கர் ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் பார்க்கிங். இவ்விரு படங்களும் செப்டம்பர் 28 ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க

  • 21 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் இசையமைக்க வரும் “டி.ராஜேந்தர்” .. என்ன காரணம் தெரியுமா? 

 “நான் கடைசி வரை தமிழன்” என்ற படம் சுமார் 163 மொழிகளில்  உருவாகவுள்ளது. இந்த படத்திற்கு கதை,திரைக்கதை,வசனம் ,தயாரிப்பு, இயக்கம் என அனைத்தையும் எம்.ஏ.ராஜேந்திரன் மேற்கொள்கிறார்.  இந்த படத்திற்கு தமிழ் சினிமாவின்  பன்முக கலைஞர்களில் ஒருவரான டி.ராஜேந்தர் பாடல்களை எழுதி இசையமைக்கிறார். இதன் மூலம் 22 ஆண்டுகளுக்குப் பின் அவர் இசைத்துறையில் கம்பேக் கொடுக்க உள்ளார். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் படிக்க

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் ராஜினாமா.. திமுக தந்த அதிர்ச்சி.. பரபர பின்னணி!
கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் ராஜினாமா.. திமுக தந்த அதிர்ச்சி.. பரபர பின்னணி!
Zika virus:உஷார்! அதிவேகமாக பரவும் ஜிகா வைரஸ்: மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!
Zika virus:உஷார்! அதிவேகமாக பரவும் ஜிகா வைரஸ்: மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!
Breaking News LIVE:  ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சராக பதவியேற்க உரிமை கோரினார் ஹேமந்த்!
Breaking News LIVE: ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சராக பதவியேற்க உரிமை கோரினார் ஹேமந்த்!
கோப்பையுடன் நாளை திரும்பும் இந்தியா கிரிக்கெட் அணி: திறந்தவெளியில் பிரம்மாண்ட பேரணிக்கு ஏற்பாடு
கோப்பையுடன் நாளை திரும்பும் இந்தியா கிரிக்கெட் அணி: திறந்தவெளியில் பிரம்மாண்ட பேரணிக்கு ஏற்பாடு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

World Records : 550 மாணவர்களுக்கு இலவச உடல் பரிசோதனை..ஸ்ரீ ராமச்சந்திரா குழுமம் உலக சாதனை!PMK vs DMK  : திமுக நிர்வாகி வீடுபுகுந்து வேட்டி சேலைகள் பறிமுதல்! பாமகவினர் அதிரடிBhole Baba Hathras Stampede  : 132 பேர் பலியும்.. மார்டன் சாமியாரும்..யார் இந்த போலே பாபா?Pawan kalyan salary  : ”எனக்கு சம்பளம் வேணாம்” பவன் கல்யாண் ட்விஸ்ட்! காரணம் என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் ராஜினாமா.. திமுக தந்த அதிர்ச்சி.. பரபர பின்னணி!
கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் ராஜினாமா.. திமுக தந்த அதிர்ச்சி.. பரபர பின்னணி!
Zika virus:உஷார்! அதிவேகமாக பரவும் ஜிகா வைரஸ்: மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!
Zika virus:உஷார்! அதிவேகமாக பரவும் ஜிகா வைரஸ்: மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!
Breaking News LIVE:  ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சராக பதவியேற்க உரிமை கோரினார் ஹேமந்த்!
Breaking News LIVE: ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சராக பதவியேற்க உரிமை கோரினார் ஹேமந்த்!
கோப்பையுடன் நாளை திரும்பும் இந்தியா கிரிக்கெட் அணி: திறந்தவெளியில் பிரம்மாண்ட பேரணிக்கு ஏற்பாடு
கோப்பையுடன் நாளை திரும்பும் இந்தியா கிரிக்கெட் அணி: திறந்தவெளியில் பிரம்மாண்ட பேரணிக்கு ஏற்பாடு
PM Modi:அடுத்த 5 ஆண்டுகள் வறுமையை ஒழிக்க பாடுபடுவோம் - நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச்சு!
அடுத்த 5 ஆண்டுகள் வறுமையை ஒழிக்க பாடுபடுவோம் - நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச்சு!
HDFC வாடிக்கையாளர் கவனத்திற்கு.. 14 மணி நேரத்திற்கு முடங்கப்போகும் சேவைகள்!
HDFC வாடிக்கையாளர் கவனத்திற்கு.. 14 மணி நேரத்திற்கு முடங்கப்போகும் சேவைகள்!
Coolie: விக்ரமை தொடர்ந்து கூலி! ஒளிப்பதிவாளரை புக் செய்த லோகி! ரஜினி படத்தில் இணையும் பிரபலங்கள்?
Coolie: விக்ரமை தொடர்ந்து கூலி! ஒளிப்பதிவாளரை புக் செய்த லோகி! ரஜினி படத்தில் இணையும் பிரபலங்கள்?
TVK Vijay: திமுக வழியில் நடிகர் விஜய்! நீட் விவகாரத்தில் கொந்தளித்த தளபதி!
TVK Vijay: திமுக வழியில் நடிகர் விஜய்! நீட் விவகாரத்தில் கொந்தளித்த தளபதி!
Embed widget