மேலும் அறிய

Dhanush 50: ஷோபனாவுடன் மீண்டும் இணையும் ‘பலம்'... டி50 படத்தில் தனுஷ் - நித்யா மேனன் கூட்டணி!

Dhanush - Nithya Menen: ‘திருச்சிறம்பலம்’  திரைப்படத்தில் முதன் முறையாக தனுஷ் - நித்யா மேனன் இருவரும் இணைந்து நடித்திருந்தனர்.

திருச்சிற்றம்பலம் படத்துக்குப் பிறகு நடிகர் தனுஷூடன் நடிகை நித்யா மேனன் மீண்டும் படத்தில் இணையவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

‘திருச்சிறம்பலம்’  திரைப்படத்தில் முதன் முறையாக தனுஷ் - நித்யா மேனன் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். நித்யா மேனன் ஷோபனா கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்த நிலையில், டைட்டில் ரோலான திருச்சிற்றம்பலம் கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்திருந்தார். இந்நிலையில், படத்தைத் தாங்கிய இவர்களது கதாபாத்திரங்களான திரு - ஷோபனா இருவரின் நட்பு, காதல் காட்சிகள் பெரிதும் ரசிக்கப்பட்டன.

கோலிவுட் சினிமாவில் மலையாள நாயகிகள் நடித்து வெளியான படங்கள்/ கதாபாத்திரம் ரசிகர்களிடையே மிகவும் வரவேற்பை பெற்று வருகிறது எனலாம். இவர்களில் நித்யா மேனன், பலருக்கும் பிடித்தமான ஒருவர். ஏற்கெனவே ஓ.கே.கண்மணி, மெர்சல், சைக்கோ, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட சூப்பர் ஹிட் தமிழ் படங்களில் நடித்துள்ள நித்யா, தனுஷின் 50-வது படத்தில் நடிப்பதாக ஏற்கெனவே தகவல்கள் வெளியாகின.


Dhanush 50: ஷோபனாவுடன் மீண்டும் இணையும் ‘பலம்'... டி50 படத்தில் தனுஷ் - நித்யா மேனன் கூட்டணி!

இப்போது இந்தப் படத்திற்காக நித்யா மேனன் ஷூட்டிங்கில் இணைய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தனுஷ் இயக்கி நடிக்கும் இன்னும் பெயரிடப்படாத ‘தனுஷ் -50’ படத்தில்  நடிகர்கள் எஸ்.ஜே சூர்யா, சுந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

அதைதொடர்ந்து சுந்தீப் கிஷான் ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடிக்கின்றார் என சொல்லப்படுகிறது. இப்போது இதில் நித்யா மேனன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், நித்யா மேனன் முன்னதாக நேர்காணல் ஒன்றில் இது தொடர்பாக பேசியபோது, “தனுஷ் அவர் இயக்கும் படத்தில் நடிக்குமாறு கேட்டுக்கொண்டார் “ என்று தெரிவித்திருந்தார்.



Dhanush 50: ஷோபனாவுடன் மீண்டும் இணையும் ‘பலம்'... டி50 படத்தில் தனுஷ் - நித்யா மேனன் கூட்டணி!

திருச்சிற்றம்பலம் இசை வெளியீட்டு விழாவில் தனுஷ் பேசும்போது, “ நித்யா மேனன் திறமையை பற்றி சொல்லி கொண்டே போகலாம். இன்னும் பத்து நிமிடங்கள்தான் சூரிய ஒளி இருக்கும்- ஆனால், முழு Scene முடிக்க வேண்டும் என்ற நிலையில், நித்யா மேனன் இருந்தால் தைரியமாக எடுத்து முடித்துவிடலாம். அப்படியொரு 'Phenomenal' திறமை அவருக்கு இருக்கிறது. உங்களுடன் சேர்ந்து இன்னும் நிறைய படங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன். அவ்ளோ எளிதில் நான் இப்படி சொல்ல மாட்டேன். இருந்தாலும், உங்களுடன் இணைந்து நடிக்க ஆவலுடன் இருக்கிறேன்.” என்று நெகிழ்ச்சியுடன் பேசியிருந்தார். 

அதோடு, திருச்சிறம்பலம் திரைப்படத்தில் ‘ஷோபனா’ பெஸ்ட் ஃப்ரண்ட் என்று அறிமுகம் செய்ய வேண்டும். இப்போது, என் வாழ்விலும் நித்யா மேனன் பெஸ்ட் ஃப்ரெண்ட் என புன்னனையுடன் பகிர்ந்திருந்தார். இருவரும் மீண்டும் இணைந்து திரைப்படத்தில் நடிப்பது ரசிகர்களின் ஆவலை அதிகரித்துள்ளது.

D50

தனது 50ஆவது படத்தை இயக்கி நடித்து வருகிறார் நடிகர் தனுஷ். கேங்ஸ்டர் படமாக உருவாகிவரும் இந்தப் படம் மூன்று சகோதரர்களின் கதையை மையமாகக் கொண்டு உருவாகி வருவதாகக் கூறப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 100 கோடி ரூபாயில் இந்தப் படம் உருவாகிறது. ஏ.ஆர் ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைக்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கேப்டன் மில்லர்

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கேப்டன் மில்லர் படம் வரும் டிசம்பர் 15ஆம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.  ராக்கி, சாணிக் காயிதம் படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இந்தப் படத்தை இயக்கி இருக்கிறார்.

பிரியங்கா மோகன், கன்னட நடிகர் ஷிவ ராஜ்குமார் படத்தில் நடித்துள்ளார்கள்.  ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார்.  பீரியட் படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் வெளியாகவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமீபத்தில் வெளியான கேப்டன் மில்லர் படத்தின் டீசர் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. தற்போது இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.


 

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

விஜய் வெற்றியால் முட்டாள்களுக்கும் அரசியல் ஆசை.. தனுஷை விளாசிய ப்ளூ சட்டை மாறன்!
விஜய் வெற்றியால் முட்டாள்களுக்கும் அரசியல் ஆசை.. தனுஷை விளாசிய ப்ளூ சட்டை மாறன்!
Cheran: விஜய் ஆட்சியில் தான் எங்களுக்கு விடிவுகாலம்.. இயக்குநர் சேரன் புகழாரம்.. திமுக,அதிமுக மீது காட்டம்!
Cheran: விஜய் ஆட்சியில் தான் எங்களுக்கு விடிவுகாலம்.. இயக்குநர் சேரன் புகழாரம்.. திமுக,அதிமுக மீது காட்டம்!
திமுக ஆட்சியில் தப்பி வந்த இர்ஃபானை தட்டி தூக்கிய தவெக! மீண்டும் சூடுபிடித்த பாலின வெளிப்படுத்தல் வழக்கு
திமுக ஆட்சியில் தப்பி வந்த இர்ஃபானை தட்டி தூக்கிய தவெக! மீண்டும் சூடுபிடித்த பாலின வெளிப்படுத்தல் வழக்கு
90 நொடி காட்சிக்காக 1.5 கோடி செலவு செய்த ஜனநாயகன் படக்குழு!
90 நொடி காட்சிக்காக 1.5 கோடி செலவு செய்த ஜனநாயகன் படக்குழு!

வீடியோ

Kangana Ranaut on CJP Protest :”போராட்டமா இது வாந்தி வருது இவங்களை வளர்த்தது யார்?” மாணவர்களை அசிங்கப்படுத்திய கங்கனா
Thanjavur Viral Video : ”உன்ன DISMISS பண்ணியாச்சே நீ எப்படி வேலை செய்ற” ரணகளமான அரசு அலுவலகம்
Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK - Congress Alliance : ‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!
‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!
Mekadatu Dam: தமிழக அனுமதி வேண்டாமா? மத்திய அமைச்சர் சொன்னது தவறு - பிரதமருக்கு CM விஜய் கடிதம்
தமிழக அனுமதி வேண்டாமா? மத்திய அமைச்சர் சொன்னது தவறு - பிரதமருக்கு CM விஜய் கடிதம்
Vaiko Book Release : ’புத்தக வெளியீட்டிற்கு டெல்லி செல்ல மறுத்த முதல்வர் விஜய்?’ வைகோ சொல்வது உண்மையா..? – காரணம் என்ன ?
’புத்தக வெளியீட்டிற்கு டெல்லி செல்ல மறுத்த முதல்வர் விஜய்?’ வைகோ பேச்சு உண்மையா..?
Tamil Thai Vazhthu:கடும் எதிர்ப்பு; 3ஆம் இடத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து- மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. சர்ச்சை
Tamil Thai Vazhthu:கடும் எதிர்ப்பு; 3ஆம் இடத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து- மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. சர்ச்சை
பிரெஸ்ஸா vs நெக்ஸான்: ரூ. 1 லட்சம் முன்பணம், EMI எதற்கு கம்மி? பட்ஜெட் SUV எது? ஒப்பீடு!
பிரெஸ்ஸா vs நெக்ஸான்: ரூ. 1 லட்சம் முன்பணம், EMI எதற்கு கம்மி? பட்ஜெட் SUV எது? ஒப்பீடு!
கனிமக் கொள்ளைக்கு நிரந்தரத் தடை, சிபிஐ விசாரணை- தவெக அரசிடம் அன்புமணி வலியுறுத்தல்
கனிமக் கொள்ளைக்கு நிரந்தரத் தடை, சிபிஐ விசாரணை- தவெக அரசிடம் அன்புமணி வலியுறுத்தல்
TN Govt: தமிழ்நாட்டிலிருந்து கனிமவளங்களை ஏற்றுமதி செய்ய இடைக்கால தடை - CM விஜய் அரசு அதிரடி உத்தரவு
தமிழ்நாட்டிலிருந்து கனிமவளங்களை ஏற்றுமதி செய்ய இடைக்கால தடை - CM விஜய் அரசு அதிரடி உத்தரவு
Kangana Ranaut: CJP நீட் போராட்டம்.. வாந்தி வருது.. இவங்கெல்லாம் நல்ல பெண்களா?.. கேவலமாக பேசிய கங்கனா!
Kangana Ranaut: CJP நீட் போராட்டம்.. வாந்தி வருது.. இவங்கெல்லாம் நல்ல பெண்களா?.. கேவலமாக பேசிய கங்கனா!
Embed widget