மேலும் அறிய

Mark Antony Trailer: 17 மணி நேரத்தில் ஒரு கோடி வியூஸ்... விஷால், எஸ்.ஜே.சூர்யாவின் ‘மார்க் ஆண்டனி’ ட்ரெய்லர் சாதனை!

தொலைபேசி வாயிலாக டைம் ட்ராவல் செய்யும் நடிகர் விஷாலின் கதாபாத்திரத்தை மையப்படுத்தி இப்படம் அமைந்துள்ள நிலையில், இப்படத்தின் வித்தியாசமான டீசர் கவனமீர்த்து வைரலாகி வருகிறது.

நடிகர்கள் விஷால், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள மார்க் ஆண்டனி திரைப்படம் வரும் செப்.15ஆம் தேதி வெளியாக உள்ளது.

டைம் ட்ராவலை மையமாகக் கொண்ட காமெடி ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகியுள்ள இந்தப் படத்தில் ரிது வர்மா ஹீரோயினாக நடித்துள்ளார். இவர்கள் தவிர, தெலுங்கு ஸ்டார் சுனில் குமார், நடிகை அபிநயா, இயக்குநர் செல்வராகவன், காமெடியன் ரெட்டின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், நேற்று இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இணையத்தில் லைக்ஸ் அள்ளி வருகிறது. தொலைபேசி வாயிலாக டைம் ட்ராவல் செய்யும் நடிகர் விஷாலின் கதாபாத்திரத்தை மையப்படுத்தி இப்படம் அமைந்துள்ள நிலையில், இப்படத்தின் வித்தியாசமான டீசர் கவனமீர்த்து வைரலாகி வருகிறது.

நேற்று இரவு மார்க் ஆண்டனி படத்தின் ட்ரெய்லர் வெளியான நிலையில், தொடர்ந்து யூட்யூபில் ட்ரெய்லர் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்து வருகிறது.

இந்நிலையில் கடந்த 17 மணி நேரத்தில் மார்க் ஆண்டனி ட்ரெய்லர் 10 மில்லியன் அதாவது ஒரு கோடிக்கும் மேற்பட்ட பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் 24 மணி நேரத்தில் இந்த ட்ரெய்லர் எவ்வளவு பார்வையாளர்களைப் பெறும் என எதிர்பார்த்து கோலிவுட் ரசிகர்கள் காத்துள்ளனர்.

முன்னதாக, நடிகர் சூர்யாவின் கங்குவா பட க்ளிம்ஸ் வீடியோ ஒரே நாளில் 25 மில்லியன் அதாவது 2 கோடியே 50 லட்சம் பார்வையாளர்களைப் பெற்று சாதனை படைத்தது. இந்த இமாலய சாதனையை மார்க் ஆண்டனி படம் முறியடிப்பது கடினம் தான் என்றாலும், இப்படத்தின் ட்ரெய்லர் 24 மணி நேரங்களில்  ஒன்றரை கோடி பார்வையாளர்களை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டார்க் காமெடி ஜானரில் கேங்ஸ்டர் கதைக்களம், டைம் ட்ராவல் என பக்கா மசாலா பேக்கேஜாகவும் புதுமையாகவும் இப்படத்தின் ட்ரெய்லர் அமைந்துள்ள நிலையில், இப்படத்தின் பாடல்கள் முன்னதாக வெளியாகி கவனமீர்த்தன. ஆனால் பஜாரி எனும் பாடலின் வரிகள் சர்ச்சையைக் கிளப்பி கடும் எதிர்ப்புகளைப் பெற்றது.

இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்ற நிலையில், படக்குழுவினருடன் நடிகர் ஆர்யாவும் கலந்துகொண்டு பேசினார். மினி ஸ்டூடியோ நிறுவனம் மார்க் ஆண்டனி படத்தைத் தயாரித்துள்ள நிலையில், அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்துள்ளார். 

முன்னதாக மார்க் ஆண்டனி என இப்படத்துக்கு டைட்டில் வைத்தது பற்றி பேசிய இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், பாட்ஷா படத்தில் பாட்ஷா ஒரு பயங்கரமான கதாபாத்திரம் என்றாலும், அப்படியான பாட்ஷாவைவிட பயங்கரமான ஒரு கதாபாத்திரம் தான் மார்க் ஆண்டனி என விளக்கமளித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

New Case on Seeman: வழக்கு வேட்டை நடத்தும் சீமான்... இப்படியா தொடர்ந்து கேஸ் வாங்குறது.?
வழக்கு வேட்டை நடத்தும் சீமான்... இப்படியா தொடர்ந்து கேஸ் வாங்குறது.?
Gold Rate: ஆத்தாடி... கண்ண கட்டுதே...புதிய உச்சத்தை தொடும் தங்கம் விலை...
ஆத்தாடி... கண்ண கட்டுதே...புதிய உச்சத்தை தொடும் தங்கம் விலை...
ம.பி. முதலமைச்சரின் செயலாளர் ஆன ஈரோட்டுக்காரர்; யார் இந்த சிபி சக்கரவர்த்தி?
ம.பி. முதலமைச்சரின் செயலாளர் ஆன ஈரோட்டுக்காரர்; யார் இந்த சிபி சக்கரவர்த்தி?
“வெடிகுண்டு வச்சிருக்கேன்; தூக்கி வீசுனா என்ன ஆவீங்க” – ஐயா பிரகாஷ்ராஜ் பாணியில் மிரட்டல் விடுக்கும் சீமான்!
“வெடிகுண்டு வச்சிருக்கேன்; தூக்கி வீசுனா என்ன ஆவீங்க” – ஐயா பிரகாஷ்ராஜ் பாணியில் மிரட்டல் விடுக்கும் சீமான்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vellore Ibrahim Arrest : திருப்பரங்குன்றம் சர்ச்சைவேலூர் இப்ராஹிம் கைது!பரபரக்கும் மதுரைMadurai Accident CCTV : மின்கம்பத்தில் மோதிய ஆட்டோதுடிதுடிக்க பிரிந்த உயிர்..பகீர் சிசிடிவி காட்சிகள்Accident News | குறுக்கே ஓடிய குதிரை வரிசையாக மோதிய வாகனங்கள் ஸ்ரீபெரும்புதூரில் அதிர்ச்சி! | ChennaiSrirangam Murder | ஸ்ரீரங்கத்தில் கொடூர கொலைதுடி துடிக்க வெறிச்செயல் பதைபதைக்க வைக்கும் காட்சி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
New Case on Seeman: வழக்கு வேட்டை நடத்தும் சீமான்... இப்படியா தொடர்ந்து கேஸ் வாங்குறது.?
வழக்கு வேட்டை நடத்தும் சீமான்... இப்படியா தொடர்ந்து கேஸ் வாங்குறது.?
Gold Rate: ஆத்தாடி... கண்ண கட்டுதே...புதிய உச்சத்தை தொடும் தங்கம் விலை...
ஆத்தாடி... கண்ண கட்டுதே...புதிய உச்சத்தை தொடும் தங்கம் விலை...
ம.பி. முதலமைச்சரின் செயலாளர் ஆன ஈரோட்டுக்காரர்; யார் இந்த சிபி சக்கரவர்த்தி?
ம.பி. முதலமைச்சரின் செயலாளர் ஆன ஈரோட்டுக்காரர்; யார் இந்த சிபி சக்கரவர்த்தி?
“வெடிகுண்டு வச்சிருக்கேன்; தூக்கி வீசுனா என்ன ஆவீங்க” – ஐயா பிரகாஷ்ராஜ் பாணியில் மிரட்டல் விடுக்கும் சீமான்!
“வெடிகுண்டு வச்சிருக்கேன்; தூக்கி வீசுனா என்ன ஆவீங்க” – ஐயா பிரகாஷ்ராஜ் பாணியில் மிரட்டல் விடுக்கும் சீமான்!
எச்சரிக்கை! டிஜிட்டல் கைது! ஆசிரியையிடம் ரூ.5.50 கோடி அபேஸ்! – மக்களே ஏமாறாதீங்க!
எச்சரிக்கை! டிஜிட்டல் கைது! ஆசிரியையிடம் ரூ.5.50 கோடி அபேஸ்! – மக்களே ஏமாறாதீங்க!
காலையிலேயே சோகம்! மௌனி அமாவாசை! கும்பமேளாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 31 பக்தர்கள் பலி!
காலையிலேயே சோகம்! மௌனி அமாவாசை! கும்பமேளாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 31 பக்தர்கள் பலி!
பூம்புகார் மற்றும் காவிரி துலா கட்டத்தில் அமாவாசை வழிபாட்டுக்காக திரண்ட பொதுமக்கள்.
பூம்புகார் மற்றும் காவிரி துலா கட்டத்தில் அமாவாசை வழிபாட்டுக்காக திரண்ட பொதுமக்கள்.
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது இஸ்ரோவின் 100வது ராக்கெட்! என்ன ஸ்பெஷல்!
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது இஸ்ரோவின் 100வது ராக்கெட்! என்ன ஸ்பெஷல்!
Embed widget