Entertainment Headlines Sep 01: ரஜினிகாந்த், நெல்சனுக்கு கலாநிதி மாறன் அன்பு பரிசு.. கெத்து காட்டும் நயன்.. இன்றைய சினிமா ரவுண்டப்
Entertainment Headlines Sep 01: திரையுலகில் இன்று இதுவரை நடந்த நிகழ்வுகளை கீழே விவரமாக காணலாம்.
Entertainment Headlines Sep 01:
ஜெய்லர் வெற்றி கொண்டாட்டம் - ரஜினி பி.எம்.டபிள்யூ பரிசு
ஜெயிலர் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு பி.எம்.டபிள்யூ சொகுசு காரை பரிசாக வழங்கியுள்ளார் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தில் உரிமையாளர் கலாநிதி மாறன். கோலிவுட்டின் மாபெரும் வெற்றிப்படமாக ஜெயிலர் உருவெடுத்துள்ள நிலையில், ரஜினிகாந்த் ரசிகர்கள் இந்த வெற்றியைக் மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் ஜெயிலர் படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸின் நிறுவனர் கலாநிதி மாறன், நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்தினார்.மேலும் வாசிக்க..
பல மாடல்களைக் காண்பித்தும் ரஜினியே தேர்ந்தெடுத்த கார்
ஜெயிலர் படத்தின் மாபெரும் வெற்றியை அடுத்து படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நடிகர் ரஜினிகாந்துக்கு ஒன்றரை கோடி மதிப்புள்ள பிஎம்டபுள்யூ கார் ஒன்றை பரிசளித்துள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனர் கலாநிதி மாறன் காரின் சாவியை ரஜினிகாந்திடம் ஒப்படைக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கூடுதல் வசதிகளாக ஏர் சப்ளை சிஸ்டம், தீ விபத்து ஏற்பட்டால் தானாக அல்லது மேனுவல் முறையிலும் தீயை அணைக்கும் வசதி, பிளாஷ் லைட், ரேடியோ வசதி என பல அம்சங்கள் இந்தக் காரில் உள்ளது. பல சோதனைகளுக்குப் பிறகு BMW நிறுவனம் இந்த X7 காரை உருவாக்கியுள்ளது. மேலும் இந்தக் கார் உலகின் முக்கிய பிரபலங்கள் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் வாசிக்க..
நெல்சனுக்கு கலாநிதி மாறன் கொடுத்த கார் என்ன தெரியுமா?
ஜெயிலர் படம் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றுள்ள நிலையில், படத்தின் இயக்குநர் நெல்சன் திலீப்குமாருக்கு தயாரிப்பாளரும் சன் பிச்சர்ஸ் நிறுவனருமான கலாநிதி மாறன் உயர் ரக சொகுசு காரை பரிசளித்துள்ளார். இன்று காலை நடிகர் ரஜினிகாந்துக்கு உயர் ரக சொகுசு காரான BMW X7 காரை கலாநிதி மாறன் வழங்கிய நிலையில், தற்போது இயக்குநர் நெல்சனுக்கு உயர் ரக போர்ஷே காரை வழங்கி உற்சாகப்படுத்தியுள்ளார். ஜெயிலர் படம் 600 கோடி வசூலை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், அடுத்தடுத்து ரஜினிக்கும் நெல்சனுக்கும் மாறி மாறி கலாநிதி மாறன் பரிசளித்து வருவது கோலிவுட் வட்டாரத்தில் கவனமீர்த்துள்ளது.மேலும் வாசிக்க..
ஓடிடியில் கெத்து காட்டும் 'டிடி ரிட்டர்ன்ஸ்'
ஓடிடி தளத்தில் வெளியான முதல் நாளே 'டிடி ரிட்டர்ன்ஸ்' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. திரையரங்கில் வெளியான போதே நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் தற்போது ஓடிடியில் வெளியாகியுள்ளதால் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர் ரசிகர்கள். மேலும் ஒரு கூடுதல் அட்வான்டேஜ் என்னவென்றால் இந்த வாரம் வேறு எந்த ஒரு தமிழ் படமும் ஓடிடியில் 'டிடி ரிட்டர்ன்ஸ்' படத்துக்கு போட்டியாக வெளியாகவில்லை. இதனால் இப்படத்திற்கு பார்வையாளர்களின் எண்ணிக்கை உச்சத்தை தொட்டுள்ளது. மேலும் வாசிக்க..
ரஜினிக்கு ரூ.100 கோடி? நெல்சனுக்கு எத்தனை கோடி?
ஜெயிலர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சன் பிச்சர்ஸ் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் இயக்குநரை நேரில் பாராட்டி, செக் வழங்கியுள்ளார்.நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆக்ஸ்ட் 10ஆம் தேதி ரிலீசான ஜெயிலர் திரைப்படம் , கோலிவுட்டின் மெகா ஹிட் திரைப்படங்களுள் ஒன்றாக உருவெடுத்துள்ளது. கடந்த மூன்று வாரங்களில் வசூலை வாரிக் குவித்து சுமார் 600 கோடி வசூலை ஜெயிலர் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், கோலிவுட்டின் பல பாக்ஸ் ஆஃபிஸ் சாதனைகளை இப்படம் ப்ரேக் செய்து வருகிறது.மேலும் வாசிக்க..
புள்ளமேல கை வெக்குறதுக்கு முன்னாடி அப்பன தொடு பாக்கலாம்...ஜவான் ட்ரெய்லரின் ஷாருக்கான் வசனம் வைரல்
அட்லீ இயக்கியிருக்கும் ஜவான் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ஒருபக்கம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகிற நிலையில் ட்ரெய்லரில் இடம்பெற்றிருக்கும் ஒரு வசனம் ஷாருக் கானின் தனிப்பட்ட வாழ்க்கையை தொடர்புபடுத்தி இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள். மேலும் வாசிக்க..
திருக்கடையூர் கோயிலில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குடும்பத்துடன் வழிபாடு
திருக்கடையூர் அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோயிலில் பிரபல இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் மனைவி சைந்தவி உடன் சாமி தரிசனம் மேற்கொண்டார். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான உலக புகழ் பெற்ற அபிராமி அம்மன் உடனாகிய அமிர்தகடேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. மேலும் வாசிக்க..
ஒரே நாளில் ஒரு மில்லியன் பேரை ஃபாலோ பண்ண வச்ச நயன்தாரா..!
இன்ஸ்டாகிராமில் அதிகாரப்பூர்வ கணக்கை தொடங்கிய நயன்தாரா ஒரே நாளில் மில்லியனை கடந்த ஃபாலோயர்களை பெற்றுள்ளார். லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படும் நயன்தாரா இன்று அதிகாரப்பூர்வ சமூக வலைதளமான இன்ஸ்டகிராமை தொடங்கினார். 2004ம் ஆண்டு வெளிவந்த சரத்குமார் நடித்த ஐயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நயன்தாரா ரஜினி, விஜய், அஜித், விஜய்சேதுபதி, சூர்யா, கார்த்தி, ஆர்யா, சிவகார்த்திகேயன் என முன்னணி நடிகர்களுக்கு ஹீரோயினாக நடித்தார். மேலும் வாசிக்க..