Nayanthara Instagram: ஒரே நாளில் ஒரு மில்லியன் பேரை ஃபாலோ பண்ண வச்ச நயன்தாரா..!
அதிகாரப்பூர்வமாக இன்ஸ்டாகிராம் கணக்கை தொடங்கிய நயன்தாரா முதன் முதலாக குழந்தைகளின் முகத்தை வெளி உலகிற்கு காட்டினார்.
Nayanthara Instagram: இன்ஸ்டாகிராமில் அதிகாரப்பூர்வ கணக்கை தொடங்கிய நயன்தாரா ஒரே நாளில் மில்லியனை கடந்த ஃபாலோயர்களை பெற்றுள்ளார்.
லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படும் நயன்தாரா இன்று அதிகாரப்பூர்வ சமூக வலைதளமான இன்ஸ்டகிராமை தொடங்கினார். 2004ம் ஆண்டு வெளிவந்த சரத்குமார் நடித்த ஐயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நயன்தாரா ரஜினி, விஜய், அஜித், விஜய்சேதுபதி, சூர்யா, கார்த்தி, ஆர்யா, சிவகார்த்திகேயன் என முன்னணி நடிகர்களுக்கு ஹீரோயினாக நடித்தார்.
ஹீரோக்களுக்கு ஹீரோயினாக நடித்தது மட்டும் இல்லாமல் காஷ்மோரா, இமைக்கா நொடிகள், டோரா, கோலமாவு கோகிலா உள்ளிட்ட படங்களில் சோலோ பர்மான்ஸ் செய்து ஹீரோக்களை தூக்கி சாப்பிடும் அளவுக்கு படத்தை வெற்றிப்பெற செய்தார். கெத்தான நடிப்பை வெளிக்காட்டிய நயன்தாராவை லேடி சூப்பர் ஸ்டார் என தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடினர். இந்த நிலையில் பாலிவுட்டில் தடம் பதித்துள்ள நயன்தாரா, பாலிவுட் சூப்பர் ஹீரோ ஷாருக்கான் நடித்திருக்கும் ஜவான் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.
படத்தின் டிரெய்லரே நயன்தாரா அதிரடி ஆக்ஷன் காட்சிகளை காட்டப்போகிறார் என்பதை கூறுகிறது. இதற்கிடையே இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்ட நயன்தாரா, வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகளுக்கு தாயானார். உயிர், உலகு என குழந்தைகளுக்கு பெயர் வைத்த நயன்தாரா, அடிக்கடி குழந்தைகளின் புகைப்படங்களை இணையத்தளத்தில் பகிர்ந்து வந்தார். நேற்று முன் தினம் ஓணம் பண்டிகையை குழந்தைகளுடன் இணைந்து கொண்டாடிய புகைப்படத்தை இணையத்தளத்தில் பகிர்ந்து கொண்டார்.
இந்த நிலையில், வியாழக்கிழமை அதிகாரப்பூர்வமாக இன்ஸ்டகிராம் கணக்கை தொடங்கிய நயன்தாரா முதன் முதலாக தனது குழந்தைகளின் முகத்தை வெளிஉலகிற்கு காட்டினார். ’நான் வந்துட்டேன்னு சொல்லு’ என்ற கேப்ஷனுடன் குழந்தைகளுடன் ஜாலியாக நடந்து வரும் நயன்தாராவை பார்த்த ரசிகர்களும் குஷியாகினர். இது மட்டும் இல்லாமல் ஜவான் படத்தில் டிரெய்லரும் இன்ஸ்டகிராமில் பகிர்ந்து கொண்டார்.
View this post on Instagram
இன்ஸ்டகிராம் கணக்கு தொடங்கிய ஒரேநாளில் ஒரு மில்லியன் பாலோவர்ஸை நயன்தாரா பெற்றுள்ளார். இந்தியாவிலேயே ஒரே நாளில் இத்தனை பாலோவர்ஸை கொண்ட ஒரே நடிகையாக நயன்தாரா இருப்பதால், இணையத்தில் கெத்து காட்டி வருகிறார். இதன் மூலம் நயன்தாராவை டிரெண்டிங்கில் வைத்துள்ளனர் அவரது ரசிகர்கள். நயன் நடிப்பிலும், கேரக்டரிலும் கெத்து தான் என பதிவிட்டு வருகின்றனர்.
View this post on Instagram