GV Prakash: திருக்கடையூர் கோயிலில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குடும்பத்துடன் வழிபாடு
அபிராமி அம்மன் சமேத அமிர்தகடேஸ்வரர் கோயிலில் பிரபல இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ் தனது மனைவி சைந்தவி மற்றும் அவரது தந்தை வெங்கடேஷ் ஆகியோருடன் சாமி தரிசனம் செய்தார்.
![GV Prakash: திருக்கடையூர் கோயிலில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குடும்பத்துடன் வழிபாடு Thirukkadaiyur temple famous composer GV Prakash Worship with family TNN GV Prakash: திருக்கடையூர் கோயிலில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குடும்பத்துடன் வழிபாடு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/01/8560f5593bbcfdd0543487f88440daee1693549028875733_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
திருக்கடையூர் அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோயிலில் பிரபல இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் மனைவி சைந்தவி உடன் சாமி தரிசனம் மேற்கொண்டார்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான உலக புகழ் பெற்ற அபிராமி அம்மன் உடனாகிய அமிர்தகடேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. புராண காலத்தில், பக்த மார்க்கண்டேயர் உயிரை பறிப்பதற்காக, எமன் பாசக்கயிற்றை வீசியபோது, மார்க்கண்டேயர், இங்கிருக்கும் சிவலிங்கத்தை கட்டியணைத்தார். அப்போது, இறைவன் தோன்றி, எமனை சம்ஹாரம் செய்ததாக, ஆலய வரலாறு கூறுகின்றது.
அழித்தல் தொழில் நின்று போனதால் பாரம் தாங்காத பூமா தேவியின் வேண்டுகோளுக்கு இணங்க, எமனை, சிவபெருமான் மீண்டும் உயிர்ப்பித்தார். இதனால் இங்கு, ஆயுள் சம்பந்தமான, வழிபாடுகள் 60, 80,100 வயது பூர்த்தி அடைந்தவர்கள் ஆயூஷ் ஹோமம் திருமணங்கள் செய்து சுவாமி அம்பாளை வழிபட்டால் ஆயுள் விருத்தி கிடைக்கும் என்பதால் இவ்வாலயத்தில் ஆண்டின் 365 நாட்களும் திருமணமும், யாகங்களும் நடைபெறும் ஒரே ஸ்தலாமாகும். இத்தகைய பல்வேறு சிறப்புகள் வாய்ந்த கோயிலுக்கு நாள் தோறும், அரசியல் பிரமுகர்கள், அமைச்சர்கள், அதிகாரிகள், சினிமா பிரபலங்கள் என பலரும் வந்து செல்கின்றனர்.
Latest Gold Silver Rate : குறைந்தது தங்கம் விலை... சவரன் எவ்வளவுன்னு தெரியுமா? உடனே செக் பண்ணுங்க..
இந்நிலையில், இன்று அபிராமி அம்மன் சமேத அமிர்தகடேஸ்வரர் கோயிலில் பிரபல இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ் தனது மனைவி சைந்தவி மற்றும் அவரது தந்தை வெங்கடேஷ் ஆகியோருடன் சாமி தரிசனம் செய்தார். முன்னதாக அவருக்கு ஆலய நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து அமிர்தகடேஸ்வரர், கால சம்ஹார மூர்த்தி, அபிராமிஅம்பாள் ஆகிய சன்னதிகளுக்கு சென்று சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)