Entertainment Headlines June 26:விஜய்யுடன் கைக்கோர்க்கும் வெற்றிமாறன்.. வாடிவாசல் அப்டேட்.. பிரித்விராஜூக்கு காயம்... இன்றைய சினிமா செய்திகள்!
Entertainment Headlines Today in June 26: சினிமா உலகில் இன்று நடந்த மிக முக்கியமான நிகழ்வுகளை ஏபிபி நாடுவின் பொழுதுபோக்கு தலைப்புச் செய்திகளில் பார்க்கலாம்.
சூர்யா வளர்க்கும் காளைக்கு டூப்! லேட்டஸ் டெக்னாலஜியை பயன்படுத்தும் வாடிவாசல் குழு! தாமதத்திற்கு காரணம் இதுதான்!
வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் திரைப்படம் வாடிவாசல். கிட்டதட்ட இரண்டு ஆண்டுகளாக இப்படம் நிலுவையில் இருந்து வருகிறது. இதற்கு அடுத்தடுத்த திரைப்படங்களில் வெற்றிமாறன் பிஸியாக இருந்து வருவது ஒரு காரணம் என்றால், மற்றொரு முக்கியமான காரணமும் இதில் இருக்கிறது. மேலும் படிக்க
பிரியாவிடை கொடுத்த இசைப்பிரியாவின் உருக்கமான போஸ்ட் ... முடிவுக்கு வந்த தாலாட்டு தொடர்...
சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற தொலைக்காட்சிகளில் முதலிடம் வகிக்கும் சன் டிவியில் ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. காலையில் துவங்கும் சீரியல்கள் வரிசையாக இரவு வரை ஒளிபரப்பாகி வரும் நிலையில் அனைத்து சீரியல்களும் டி.ஆர்.பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடித்து வருகின்றன. மேலும் படிக்க
இறுதிச் சுற்றுக்குள் நுழைந்த விசித்ரா.. அப்செட்டான ஸ்ருஷ்டி! குக் வித் கோமாளி அப்டேட்..
குக் வித் கோமாளியின் நான்காவது சீசனின் டிக்கெட் டூ ஃபினாலே போட்டி கடந்த சனிக்கிழமை அன்றும் ஞாயிற்றுக்கிழமை அன்றும் ஒளிபரப்பானது. சில வாரங்களுக்கு முன்பு டாப் 5 போட்டி நடைப்பெற்றது. இதில் அசால்டாக சமைத்த ஷிவாங்கி முதல் போட்டியாளராக டாப் 5 போட்டிக்குள் நுழைந்தார். அதனை தொடர்ந்து எதிர்பாராதவிதமாக ஆண்ட்ரியன் எலிமினேட் செய்யப்பட்டார். மேலும் படிக்க
படப்பிடிப்பின்போது காயம்.. பிரபல நடிகர் பிரித்விராஜுக்கு காலில் இன்று அறுவை சிகிச்சை..
மலையாள திரையுலகின் பிரபல நடிகர் பிரித்விராஜ். இயக்குனர், நடிகர் என்று பன்முகம் கொண்ட இவர் மலையாளம் மட்டுமின்றி தமிழிலும் பிரபல நடிகர் ஆவார். இவருக்கு மலையாளத்தில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் தற்போது விளையாட் புத்தா என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார். மேலும் படிக்க
ரெண்டு லட்டு தின்ன ஆசையா? வெற்றிமாறனுடன் கைகோர்க்க காத்திருக்கும் விஜய்...
வெற்றிமாறனின் படங்களில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை எந்த நடிகருக்குத்தான் இருக்காது. நடிகர்களுக்கு மட்டுமில்லை.. தனக்கு பிடித்த ஸ்டாரை அவரது படத்தில் பார்க்க வேண்டும் என்கிற ஆசை ஒவ்வொரு ரசிகருக்கும் இருக்கிறது. தற்போது விஜய் ரசிகர்களுக்கு ஒரு ஆரவாரம் என்னவென்றால் விடுதலை, வாடிவாசல், வடசென்னை 2 ஆகிய படங்களை முடித்த பின்பு நடிகர் விஜயுடன் இணைய இருக்கிறார் இயக்குநர் வெற்றிமாறன். மேலும் படிக்க
'சேர்ந்து சிகரெட் புகைக்கலாம் வருகிறீர்களா?' என்று கேட்ட ரசிகருக்கு ஷாருக் சொன்ன பதில்… வைரலாகும் டுவீட்!
நேற்றோடு ஷாருக்கான் பாலிவுட்டில் 31 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். அவர் 1992 இல் மறைந்த நடிகர் திவ்யபாரதிக்கு ஜோடியாக நடித்த தீவானா திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமானார். அந்த திரைப்படம் ஜூன் 25 ஆம் தேதிதான் வெளியாகி இருந்தது. இந்த நிகழ்வைக் கொண்டாடும் வகையில், அவர் ட்விட்டரில் Ask SRK என்ற அமர்வை நடத்தினார். அதில் அவரது ரசிகர்கள் சில நகைச்சுவையான கேள்விகளை முன்வைத்தனர். மேலும் படிக்க