(Source: Poll of Polls)
CWC 4 Ticket to Finale : இறுதிச் சுற்றுக்குள் நுழைந்த விசித்ரா.. அப்செட்டான ஸ்ருஷ்டி! குக் வித் கோமாளி அப்டேட்..
Cook With Comali 4 Ticket to Finale: முதல் சுற்றிலும் இரண்டாவது சுற்றிலும் அதிக மதிப்பெண்களை பெற்ற விசித்ரா நேரடியாக குக் வித் கோமாளி நான்காவது சீசனின் முதல் ஃபைனலிஸ்டானார்.
குக் வித் கோமாளியின் நான்காவது சீசனின் டிக்கெட் டூ ஃபினாலே போட்டி கடந்த சனிக்கிழமை அன்றும் ஞாயிற்றுக்கிழமை அன்றும் ஒளிபரப்பானது.
சில வாரங்களுக்கு முன்பு டாப் 5 போட்டி நடைப்பெற்றது. இதில் அசால்டாக சமைத்த ஷிவாங்கி முதல் போட்டியாளராக டாப் 5 போட்டிக்குள் நுழைந்தார். அதனை தொடர்ந்து எதிர்பாராதவிதமாக ஆண்ட்ரியன் எலிமினேட் செய்யப்பட்டார்.
கிரிக்கெட் வீரர்களின் வருகை
கடந்த வார இறுதியின் முதல் நாளில் வழக்கம் போல் கஷ்டமான அட்வாண்டேஜ் டாஸ்க் கொடுக்கப்பட்டது. எந்தவொரு பாத்திரத்தையும் பயன்படுத்தாமல் ஐயன் பாக்ஸை வைத்து காடை முட்டை சாண்ட்விஜ்ஜையும், காத்தி ரோலையும் செய்ய வேண்டும் என்ற நிபந்தனை முன்வைகப்பட்டது. அதில் வெற்றி பெற்றவர்கள் அடுத்த கட்ட அட்வாண்டேஜ் டாஸ்க்கை செய்தனர். ஜவ்வு மிட்டாய் கை கடிகார டாஸ்க்கில் அதிகமான ஜவ்வு மிட்டாய் செய்து கிரண் அட்வாண்டேஜ் டாஸ்க்கில் வெற்றி பெற்றார்.
நிகழ்ச்சியை சிறப்பிக்க கிரிக்கெட் வீரர்களான வருண் சக்கரவர்த்தியும், வெங்கடேஷ் ஐயரும் வருகை தந்தனர். அத்துடன் விஜய் ஷங்கரும் வீடியோ கால் செய்து சர்ப்ரைஸ் கொடுத்தார்.
மெயின் டாஸ்க்
முதல் நாளின் தொடர்ச்சியாக இரண்டாவது நாளில் மெயின் டாஸ்க் நடைப்பெற்றது. ஷிவாங்கி, விச்சித்ரா, ஸ்ருஷ்டி ஆகியோர் அசைவ உணவை சமைக்க முடிவு செய்தனர். மைம் கோபி, கிரண் ஆகியோர் சைவ உணவை சமைக்க முடிவு செய்தனர். அட்வாண்டேஜ் டாஸ்க்கில் வெற்றி பெற்ற கிரண் ஸ்ருஷ்டியை சைவ உணவை சமைக்க மாற்றிவிட்டார்.
போட்டியை சுவாரஸ்யமாக்க கிட்சனில் பெரிய திரை வைக்கப்பட்டது. ஒரு புறத்தில் குக்குளும், மறுபுறம் கோமாளிகளும்
இருக்க வேண்டும். போட்டியாளர்கள் கொடுக்கும் விளக்க முறையை கேட்டு கோமாளிகளே முழுக்க முழுக்க சமைக்க வேண்டும் என்பதே நிபந்தனை.
சிரிக்க வைத்த சம்பவங்கள் :
அங்கங்கு வரும் தங்கதுரையின் தற்கொலை ஜோக்குகள், டவள் மீது படுத்து கொண்டு புகழ் செய்த சேட்டை, ஒன்றும் புரியாமல் முழித்து கொண்டிருந்த ஜிபி முத்துவின் ரியாக்ஷன், குரேஷியின் கே.ஜி.எப் டான்ஸ், மோனிஷாவின் க்யூட்னஸ், சுனிதாவின் தமிழ், கிரணுக்கும் விச்சித்ராவுக்கும் இடையே நடந்த விளையாட்டு சண்டை என அனைத்தும் பார்வையாளர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது.
டிக்கெட் டூ பினாலே சுற்று
விசித்ரா, ஸ்ருஷ்டி, மைம் கோபி ஆகியோர் நன்றாக சமைத்து, சிறப்பு விருந்தினராக வந்த பஞ்சாப் சிங்குகளை கவர்ந்து அடுத்த கட்டமான ஃபைனல் ஃபேஸ் ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தனர்.
கொடுக்கப்பட்ட டாஸ்க்கை பற்றி புரிந்து கொள்ளாத மைம் கோபி, ஸ்ருஷ்டியின் டிஷ் சுவையாக இருந்தாலும், விதிமுறைக்கு எதிராக அமைந்தது. இதனால் ஸ்ருஷ்டியின் முகம் வாடியது. முதல் சுற்றிலும் இரண்டாவது சுற்றிலும் அதிக மதிப்பெண்களை பெற்ற விசித்ரா நேரடியாக குக் வித் கோமாளி நான்காவது சீசனின் முதல் ஃபைனலிஸ்டானார். யாருக்கும் எப்போதும் என்ன வேண்டுமானலும் நடக்கலாம் என்பதை இந்த எபிசோட் உணர்த்துகிறது.
குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் எப்போது வேண்டுமானலும் பார்க்கலாம். தொலைக்காட்சியில் பார்க்க விரும்புவர்கள், ஒவ்வொரு சனிக்கிழமை 9 மணிக்கும், ஞாயிற்றுகிழமை 9:30 மணிக்கும் இதனை காணலாம்.