Entertainment Headlines Aug 08: ஃபகத் ஃபாசில் பிறந்தநாள்.. ஓடிடியில் வெளியான ஸ்பைடர்மேன் படம் - இன்றைய சினிமா செய்திகள்!
Entertainment Headlines Aug 08: திரையுலகில் இன்று இதுவரை நடந்த நிகழ்வுகளை கீழே விவரமாக காணலாம்.
ஸ்பைடர்மேன் யுனிவர்ஸ்
பட வரிசையில் இரண்டாம் பாகமாக வெளிவந்த ஸ்பைடர்மேன் அக்ராஸ் தி ஸ்பைடர் வெர்ஸ் (spiderman across the spiderverse ) திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு சோனி மற்றும் மார்வெல் இணைந்து தயாரித்து வெளியான திரைப்படம் ஸ்பைடர்மேன் இன்டூ தி ஸ்பைடர் வெர்ஸ் (spiderman into the spiderverse) . இன்று பரவலாக ரசிகர்களால் கொண்டாடப்படும் மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸ் முதல் முறையாகத் தொடங்கியது இந்தப் படத்திலிருந்து தான். ஸ்பைடர் வெர்ஸ் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்ததைத் தொடர்ந்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தைத் தயாரிக்க முடிவு செய்யப்பட்டு சமீபத்தில் வெளியானது ஸ்பைடர்மேன் அக்ராஸ் தி ஸ்பைடர் வெர்ஸ் (spiderman across the spiderverse ) . முதல் பாகம் அளவிற்கு இல்லையென்றாலும் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது இந்தப் படம்.மேலும் வாசிக்க..
ஊழியர்களுக்கு விடுமுறை.. இலவச டிக்கெட்..
ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில்,தியேட்டர்கள் இப்போதே திருவிழாக்கோலம் பூண்டுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்தின் 169வது படமாக ஜெயிலர் படம் உருவாகியுள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். தமன்னா, ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, மோகன்லால், விநாயகன், ஜாக்கி ஷெராஃப், யோகிபாபு, சிவராஜ்குமார் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாசிக்க..
கூட இருக்கப்ப பெத்தவங்க அருமை புரியாது’ - விஜய்யை குறிவைத்து பேசினாரா எஸ்.ஏ.சந்திரசேகர்?
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் கிழக்கு வாசல் சீரியல், முதல் நாள் காட்சி நடிகர் விஜய்யை மனதில் வைத்து எடுக்கப்பட்டுள்ளதாக சர்ச்சை கிளம்பியுள்ளது. நேற்று ஒளிபரப்பான இந்த சீரியலில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் சாமியப்பன் என்ற கேரக்டரில் நடிக்கிறார். இதில் அவரது முதல் காட்சியின் வசனமே நடிகர் விஜய்யை மையப்படுத்தி இருந்ததாக விமர்சனம் எழுந்துள்ளது. அதாவது, மறைந்த தனது பெற்றோர்கள் முன் நின்று “அம்மா, அப்பா நீங்க ரெண்டு பேரும் என்ன வளர்க்க எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பீங்க என்று அப்ப எனக்கு புரியலை. வயசாக வயசாக தான் உங்க அருமை எனக்கு புரியுது. பெற்றோரோட அருமை அவங்க நம்ம பக்கத்துல இருக்கும்போது யாருக்கும் தெரிவது இல்லை. மேலும் வாசிக்க..
அம்பேத்கரின் குரலை ஓங்கி ஒலிக்க விட்டேன்
மலையாளத் திரையுலகில் தனக்கென தனி பாணியை உருவாக்கி அதன் மூலம் ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமாவை தன் பக்கம் ஈர்த்தது மட்டும் இல்லாமல், மலையாளம் தாண்டி தமிழ், தெலுங்கு என தான் கால்பதித்த இடங்களில் எல்லாம் வெற்றிக்கொடி நாட்டியவர் நடிகர் ஃபகத் ஃபாசில். தெலுங்கில் அவர் ”புஷ்பா” என்ற ஒரு படம் மட்டும் நடித்திருந்தாலும், அந்த காதாப்பாத்திரத்தில் காவல்துறை அதிகாரியாக மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுகளை அள்ளி இருப்பார். மேலும் வாசிக்க.
ஃபகத் பாசிலுக்கு பிறந்தநாள்.. அவரோட இந்த படங்களைப் பாக்க மறக்காதீங்க..
சமீப காலங்களில் அதிகம் உச்சரிக்கப்படும் ஒரு நடிகரின் பெயர் ஃபகத் ஃபாசில். இன்று அவரது பிறந்த நாளும்கூட. இந்த நாளில் ஒருவர் தனது வாட்ஸப் ஸ்டேட்டசில் ஃபகதின் புகைப்படத்தை வைக்கலாம். அவரது கண்களின் மேல் காதல் கொள்ளலாம், அவர் நடித்த கதாபாத்திரங்களின் (ரத்தினவேல் தவிர்த்து) ஸ்டில்களை எடுத்து ஹார்ட் எமோஜிக்களைப் விடலாம். ஆனால் தன்னை ஒர் ஃபகத் ஃபாசில் ரசிகர் என்று சொல்லிக் கொள்வதற்கு முன் அவர் நடிப்பில் வெளிவந்த சில படங்களை நிச்சயம் பாத்திருக்க வேண்டும்.மேலும் வாசிக்க..
மாறுபட்ட கேரக்டரில் அஜித்.. சிந்திக்க வைத்த 'நேர்கொண்ட பார்வை’ .. இன்றோடு 4 ஆண்டுகள் நிறைவு..!
தான் நடிக்கும் படங்கள் மூலமாகவே தனது ரசிகர்களை சில நல்ல கதைகளை ஒரு நடிகர் பார்க்க வைக்க முடியும். அதை தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் செய்தார். தீரன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஹெச்.வினோத் அடுத்து எந்த நடிகரை இயக்க இருக்கிறார் என்கிற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்தது. அஜித்குமாரை வைத்து அவர் ஒரு படம் இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அது அவரது கதை இல்லையென்றும் ஏதோ இந்தி படத்தின் ரீமேக் என்றும் தகவல்வல்கள் வெளியாகின.மேலும் வாசிக்க..
டிவியில் ஒளிபரப்பாகும் “பொன்னியின் செல்வன்- 2
மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற பொன்னியின் செல்வன் படத்தின் 2ஆம் பாகம் டிவியில் எப்போது ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவல் இரண்டு பாகங்களாக அதே பெயரில் திரைப்படமாக எடுக்கப்பட்டு வெளியானது. மணிரத்னம் இயக்கிய இந்த படத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா,ஜெயராம், சரத்குமார், பார்த்திபன், ரகுமான், ஐஸ்வர்யா லட்சுமி, ஷோபிதா துலிபாலா, அஸ்வின் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். மேலும் வாசிக்க..
விஜய் பட இயக்குநருக்கு மாரடைப்பு.. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை.. ரசிகர்கள் சோகம்
பிரபல மலையாள இயக்குநர் சித்திக்கிற்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இயக்குநர் பாசிலிடம் உதவி இயக்குநராக இருந்து 1985 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘ஆ நேரம் அல்ப தூரம்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் சித்திக். இவர் இதுவரை 350க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழிலும் சுபாஷ், ஜனா, ரங்கூன், பாஸ்கர் ஒரு ராஸ்கல், வைகை எக்ஸ்பிரஸ், வெந்து தணிந்தது காடு, வரலாறு முக்கியம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.மேலும் வாசிக்க..
வீரப்பன் நம்பிக்கை துரோகம் செய்தாரா?’ ..
நெட் பிளிக்ஸில் வெளியாகியுள்ள The Hunt For Veerappan தொடர் பலத்த சர்ச்சைகளை சமூக வலைத்தளங்களில் கிளப்பி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ‘தி ஹன்ட் ஃபார் வீரப்பன்’- சந்தனக் கடத்தல் வீரப்பன் குறித்து ‘தி ஹன்ட் ஃபார் வீரப்பன்’ என்ற தொடர் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. கிட்டதட்ட 4 தசாப்தங்களாக தமிழ்நாடு - கர்நாடகா மாநில அரசுகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய வீரப்பனை பற்றிய பல அறியப்படாத நிகழ்வுகள் இந்த தொடரில் இடம் பெற்றுள்ளது. இதில் வீரப்பன் மனைவி முத்துலட்சுமி, கூட்டாளிகள், ஊர் மக்கள், காவல்துறை, வனத்துறை அதிகாரிகள் அனைவரது கருத்துகள் இடம் பெற்றுள்ளது. அதில் மூத்த வனத்துறை அதிகாரி ஸ்ரீனிவாஸை வீரப்பன் கொலை செய்த நிகழ்வு வீரப்பன் நல்லவரா? கெட்டவரா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. மேலும் வாசிக்க..
சூப்பரான படங்களை மறக்காம பாருங்க.. டிவியில் இன்றைய படங்களின் லிஸ்ட் இதோ..!
ஆகஸ்ட் 8 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம் - மேலும் வாசிக்க..