மேலும் அறிய

Jailer: ஊழியர்களுக்கு விடுமுறை.. இலவச டிக்கெட்.. களைகட்டும் ஜெயிலர் திருவிழா.. உற்சாகத்தில் ரசிகர்கள்..!

ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில்,தியேட்டர்கள் இப்போதே திருவிழாக்கோலம் பூண்டுள்ளது. 

ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில்,தியேட்டர்கள் இப்போதே திருவிழாக்கோலம் பூண்டுள்ளது. 

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்தின் 169வது படமாக ஜெயிலர் படம் உருவாகியுள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். தமன்னா, ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, மோகன்லால், விநாயகன், ஜாக்கி ஷெராஃப், யோகிபாபு, சிவராஜ்குமார் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக ஜெயிலர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், பாடல்கள், ட்ரெய்லர் என அனைத்தும் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. கடந்த ஜூலை 28 ஆம் தேதி ஜெயிலர் படத்தின்  ஆடியோ வெளியிட்டு விழா நடைபெற்றது. இது ஆகஸ்ட் 6 ஆம் தேதி சன் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதனால் ஜெயிலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிற வைத்தது. 

மேலும் படத்துக்கான டிக்கெட் முன்பதிவு கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி தொடங்கியது. தமிழ், தெலுங்கு, கன்னடம் ,மலையாளம், இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாகவுள்ள ஜெயிலர் படத்தின் டிக்கெட் முன்பதிவு எதிர்பார்த்ததை விட பல மடங்கு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறதும். மேலும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை அடுத்தடுத்து விடுமுறை நாட்கள் வருவதால் படத்தின் வசூல் மிகப்பெரிய சாதனையைப் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதனிடையே ஜெயிலர் ரிலீசுக்கு இன்னும் 1 நாள் மட்டுமே உள்ள நிலையில், தியேட்டர்கள் திருவிழாக்கோலம் பூண்டுள்ளது. போஸ்டர், பேனர்கள், கட் அவுட்கள் என களைக்கட்ட தொடங்கியுள்ளது. மேலும் முதல் நாள் காட்சிக்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்த நிலையில், வார நாட்களில் படம் வருவதால் பலரும் எப்படியாவது முதல் நாளே பார்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்களுக்கு என்ன சொல்லி லீவு கேட்பது என விழிபிதுங்கி வருகின்றனர். 

இப்படியான நிலையில் சில நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு  ஜெயிலர் படம் வெளியாகும் ஆகஸ்ட் 10 ஆம் தேதியன்று விடுமுறை விடுவதாக அறிவித்துள்ளது. லீவு தொடர்பான கோரிக்கைகள் அதிகளவில் குவிவதால் தவிர்ப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  அதேபோல் சில நிறுவனங்கள் தனது ஊழியர்களுக்கு 'ஜெயிலர்' டிக்கெட்டுகளை இலவசமாக வழங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

தலைப்பு செய்திகள்

Jailer 2 : ஜெயிலர் 2 பாடல் ப்ரோமோ வெளியானது..சிறப்புத் தோற்றத்தில் பூர்ணா..காவாலா சாதனையை உடைக்குமா?
Jailer 2 : ஜெயிலர் 2 பாடல் ப்ரோமோ வெளியானது..சிறப்புத் தோற்றத்தில் பூர்ணா..காவாலா சாதனையை உடைக்குமா?
நடிப்பிற்கு திரும்பும் கருப்பு இயக்குநர் ஆர் ஜே பாலாஜி !
நடிப்பிற்கு திரும்பும் கருப்பு இயக்குநர் ஆர் ஜே பாலாஜி !
‘விஸ்வநாத் & சன்ஸ்’ படப்பிடிப்பில் ராதிகாவிடம் அடி வாங்கிய ஜி.வி.பிரகாஷ்.. அவரே சொன்ன தகவல்
‘விஸ்வநாத் & சன்ஸ்’ படப்பிடிப்பில் ராதிகாவிடம் அடி வாங்கிய ஜி.வி.பிரகாஷ்.. அவரே சொன்ன தகவல்
Dharman : தர்மன் படத்தில் ரஜினியின் மருமகனாகவும் வில்லனாகவும் நடிக்கு ராம் பொத்தினேனி
Dharman : தர்மன் படத்தில் ரஜினியின் மருமகனாகவும் வில்லனாகவும் நடிக்கு ராம் பொத்தினேனி

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
Netanyahu Fail in Polls: பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
Gold and Silver Rate Aug.19th: காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
Skoda Comeback Cars: ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Embed widget