Entertainment Headlines August 02: ஜெயிலர் ட்ரெய்லர் ரிலீஸ்... அஜித்தின் அடுத்த சுற்றுலா... சிக்கலில் வடிவேலு... இன்றைய டாப் சினிமா செய்திகள்!
Entertainment Headlines Today August 02: திரையுலகில் இன்று இதுவரை நடந்த நிகழ்வுகளை கீழே விவரமாக காணலாம்.
கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது.. ஹீரோ யாரு?
கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவின் வாழ்க்கை வரலாறை திரைப்படமாக எடுப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இயக்குனர் சத்ய ரத்னம் இயக்கத்தில் இந்த படம் உருவாகிறது. இந்த படத்திற்கு தலைவர் ராமையா என பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. கர்நாடகாவின் 24-வது முதலமைச்சரின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகிறது. இந்த படத்தை இரண்டு பாகங்களாக எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் படிக்க
விடாமுயற்சி படத்தைத் தொடங்காமல் அஜித் மீண்டும் சுற்றுலா.. ரசிகர்கள் கவலை!
மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் நடிக்கவிருந்த விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதத்தில் தொடங்க இருந்த நிலையில் தற்போது அஜித் குமார் பைக் சுற்றுப் பயணம் சென்றுள்ளது படத்தைக் குறித்து பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளது. மீகாமன், தடையறத் தாக்க, தடம் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் மகிழ் திருமேனி அடுத்து இயக்க உள்ள படம் விடாமுயற்சி. துணிவு படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித் குமார் இந்தப் படத்தில் நடிக்க உள்ளார். மேலும் படிக்க
தன்னைப்போல் நடித்ததால் ஆள் வைத்து அடித்த வடிவேலு? காமெடி நடிகர் பகிர்ந்த அதிர்ச்சித் தகவல்!
வடிவேலு என்றாலே நம் எல்லோருக்கும் அவர் நடித்த நகைச்சுவை காட்சிகள் தான் நினைவுக்கு வரும். தனது பேச்சு, உடல் மொழி, கண் அசைவு என அனைத்திலும் காமெடி கலையை ஒளித்து வைத்திருக்கும் வித்தகர் வடிவேலு. ஆனால் மாமன்னன் திரைப்படத்திற்குப் பின் நடிகர் வடிவேலுக்கு புதிய திரைப்பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. இந்த படத்தில் சீரியஸ் கதாப்பாத்திரத்தில் நடித்து அவர் அசத்தி இருந்தார். மேலும் படிக்க
அதிர்ச்சியில் திரையுலகம்.. தேசிய விருது வென்ற கலை இயக்குநர் தற்கொலை.. என்ன காரணம்?
இந்திய சினிமாவின் பிரபல கலை இயக்குநரான நிதின் சந்திரகாந்த் தேசாய் தற்கொலை செய்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு வயது 58. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பாலிவுட்டில் கோலோச்சி வரும் நிதின் பாலிவுட்டின் புகழ்பெற்ற இயக்குநர்களான சஞ்சய் லீலா பன்சாலி, அசுதோஷ் கௌரிக்கர், ராஜ்குமார் ஹிரானி, விது வினோத் சோப்ரா உள்ளிட்ட பலருடன் பணிபுரிந்துள்ளார். மேலும் படிக்க
இன்னைக்கு இருக்கு சம்பவம்.. முத்துவேல் பாண்டியன் வரார்.. ஜெயிலர் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ்..
நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படம் வருகிற ஆகஸ்ட் 10 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடித்துள்ளார். அதிரடி சண்டை படமாக தயாராகியுள்ள இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. மேலும் படிக்க
’ஆள விடுங்கடா சாமி’ : பேஸ்புக் கவர் போட்டோவை நீக்கிய ஃபஹத் பாசில்..
மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்த மாமன்னன் படம் திரையரங்குகளில் வெளியானபோது கொண்டாடப்பட்டதை விட ஓ.டி.டி.-யில் வெளியான பிறகு ரசிகள் மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். தமிழ்நாட்டில் மேற்கு மாவட்டம் ஒன்றில் ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவர், எம்.எல்.ஏ. ஆன பிறகும் ஆதிக்க சாதியினரால் ஒடுக்கப்படுவதும், அதை தந்தையும் மகனும் சேர்ந்து எதிர்ப்பதும் கதையாக அமைந்திருந்தது. மேலும் படிக்க