Siddaramaiah Biopic: கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது.. ஹீரோ யாரு?
கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகிறது. இத்திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி சித்தராமையாவாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது...
கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவின் வாழ்க்கை வரலாறை திரைப்படமாக எடுப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இயக்குனர் சத்ய ரத்னம் இயக்கத்தில் இந்த படம் உருவாகிறது. இந்த படத்திற்கு தலைவர் ராமையா என பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
கர்நாடகாவின் 24-வது முதலமைச்சரின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகிறது. இந்த படத்தை இரண்டு பாகங்களாக எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த படத்தை தொடங்குவதற்கான வேலைப்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், இந்த மாதத்தில் படப்பிடிப்பு துவங்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
விஜய் சேதுபதி சித்தராமையா கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தவல் வெளியாகி உள்ள நிலையில், இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இப்படத்தில் நடிக்க, நடிகர் விஜய் சேதுபதியுடன் தயாரிப்பு நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் அவரிடம் இருந்து பாசிட்டிவ் பதில் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. நடிகரின் கால்ஷீட்டிற்கு ஏற்றவாறு தங்கள் திட்டமிடலை மேற்கொள்ள தயாராக உள்ளதாகவும் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தில் விஜய் சேதுபதியின் தோற்றம் 20 முதல் 30 நிமிடங்கள் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சித்தராமையாவின் குழந்தைப் பருவம் மற்றும் இளமைப் பருவம் குறித்த முதல் பாக வேலைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் அதே நேரத்தில், இளமைப்பருவ சித்த ராமையாவாக நடிக்க ஒரு இளம் நடிகரையும் தயாரிப்பாளர்கள் தேடி வருவதாக கூறப்படுகிறது. இப்படத்தில் இரண்டு ஹீரோயின்கள் இடம்பெறுவார்கள் என்றும், இந்தப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த திரைப்படத்தில் ஒரு சில பிரபல கன்னட நடிகர்கள் நடிப்பதை தயாரிப்பு குழு உறுதிப்படுத்தியுள்ளது. தற்போது அவர்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. மேலும், ‘தலைவர் ராமையா’ படத்துக்கு இசையமைப்பாளராக ஷஷாங்க் சேஷகிரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். படத்தின் முதல் பாகத்துக்கான மூன்று முதல் நான்கு பாடல்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். பாடகர் ஹரிசரணின் குரலில் ஏற்கனவே ஒரு பாடல் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க,
Annamalai: மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை..ட்விஸ்ட் வைக்கும் அண்ணாமலை..பாஜகவின் மாஸ்டர் பிளான்