மேலும் அறிய

Entertainment Headlines Aug 23: சந்திராயன் 3க்கு பிரபலங்கள் வாழ்த்து.. செம்ம லியோ அப்டேட்.. கிங் ஆஃப் கோதாவில் ரோலக்ஸ்... டாப் சினிமா செய்திகள்!

Entertainment Headlines Aug 23: திரையுலகில் இன்று இதுவரை நடந்த நிகழ்வுகளை கீழே விவரமாக காணலாம்.

அமிதாப் பச்சன் முதல் மாதவன் வரை: சந்திரயான் - 3 நிலவு பயணத்துக்கு குவியும் பிரபலங்களின் வாழ்த்துக்கள்..

உலகமே இன்றைய தினத்துக்காக மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்கிறது. சந்திரயான் - 3 விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் ஆகஸ்ட் 23-ஆம் தேதியான இன்று மாலை 6.04 மணிக்கு நிலவின் மேற்பரப்பில் தரையிறங்க உள்ளது. இஸ்ரோ விஞ்ஞானிகளின் இந்த இரண்டாவது முயற்சி வெற்றி பெற வேண்டும் என உலகெங்கிலும் உள்ள மக்கள் பிரார்த்தனை செய்து வருகிறார்கள். அந்த வகையில் திரை பிரபலங்கள் பலரும் சந்திரயான் -3 வெற்றி பெற வாழ்த்துக்களை சோசியல் மீடியா மூலம் தெரிவித்து வருகிறார்கள். மேலும் படிக்க

'நாளைய பொழுதும் உன்னோடு' .. காதல் மனைவியுடன் கவின் வெளியிட்ட வீடியோ...இணையத்தில் ட்ரெண்ட்..!

தமிழ் சினிமாவில் இளம் நடிகரான கவின் திருமணம் சமீபத்தில் நடைபெற்ற நிலையில் அவர் தனது திருமண நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட வீடியோவை இணையத்தில் வெளியிட்டுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ சீரியல் 2ஆவது சீசன் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் கவின். தொடர்ந்து சில சீரியல்களில் நடித்த அவர் 2017ஆம் ஆண்டு விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான ‘சத்ரியன்’ என்ற படத்தின் மூலம் சினிமாவுக்கு அடியெடுத்து வைத்தார். மேலும் படிக்க

சிரிச்சுட்டே ஒரு கேங்ஸ்டர் ஸ்டோரி.. துல்கர் சல்மான் நடித்திருக்கும் கன்ஸ் & குலாப்ஸ் தொடர் எப்படியிருக்கு?

துல்கர் சல்மான், ராஜ்குமார் ராவ், குல்ஷன் தேவையா, டி.ஜே. பானு உள்ளிட்டவர்கள் நடித்துள்ள கன்ஸ் & குலாப்ஸ் இணையத் தொடர் நெட்ஃப்ளிக்ஸில் கடந்த 18-ஆம் தேதி வெளியாகி உள்ளது. தி ஃபேமிலி மேன் என்கிற புகழ்பெற்ற தொடரை இயக்கிய ராஜ் &  டிகே ஆகிய இருவர் இந்தத் தொடரை இணைந்து இயக்கியுள்ளார்கள்.  நகைச்சுவையும் காதலும்  நிறைந்த போர்க்களமாக அமைந்துள்ளது கன்ஸ் & குலாப்... மேலும் படிக்க

அருவி பட இயக்குநரை தெரியுமா: சீண்டிய கேள்விகளுக்கு பதிலடி கொடுத்த விஜய் தேவரகொண்டா!

மேடைகளில் தனது பரபரப்பான பேச்சிற்காக புகழ்பெற்றவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. சமீபத்தில் ரஜினியைப் பற்றி அவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. தற்போது பத்திரிகையாளர் ஒருவர் கேட்ட கேள்வியால் சீண்டப்பட்ட விஜய் தேவரகொண்டா அவருக்கு பதிலடி கொடுத்த வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இயக்குனர் சிவா நிர்வானா இயக்கத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா, நடிகை சமந்தா நடித்துள்ள படம் குஷி. மேலும் படிக்க

திரும்பும் பக்கமெல்லாம் ரோலக்ஸ்...துல்கர் சல்மான் படத்தில் கேங்ஸ்டராக வரும் சூர்யா

துல்கர் சல்மான் நடித்துள்ள கிங் ஆஃப் கோதா திரைப்படத்தில் பல்வேறு முக்கியமான  நடிகர்கள் கெளரவ தோற்றத்தில் நடித்துள்ளதாக பல்வேறு தகவல்கள் இணையதளத்தில் வைரலாகி வந்தன. விக்ரம் படத்தில் ரோலக்ஸாக தோன்றிய சூர்யா இந்த முறை புதிய கதாபாத்திரம் ஒன்றில் இந்தப் படத்தில் தோன்றலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் படிக்க

‘தியேட்டர் தெறிக்கும்’.. எதிர்பார்ப்பை எகிற செய்யும் லியோ படத்தின் இண்ட்டர்வல் காட்சி..!

லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் லியோ திரைப்படம் அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் படத்தின் மீது எக்கசக்கமான எதிர்பார்ப்பு இருந்துவருகிறது. இந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில் மேலுமொரு தகவலை வழங்கியுள்ளார் படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார். விஜய் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், பிரியா ஆனந்த், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், உட்பட பலர் நடித்துள்ள  இந்தப் படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரித்துள்ளது அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். மேலும் படிக்க

எம்ஜிஆர் முதல் ஜெயம் ரவி வரை... சினிமா மூலம் விண்வெளி பயணத்தை பேசிய பிரபலங்கள்..!

சந்திரயான் 3 விண்கலம்  நிலவில் தரையிறங்கி சாதனை படைக்கவிருக்கும் நிலையில் இந்திய சினிமாவில் இதுவரை விண்வெளித்துறையை மையமாக வைத்து வெளியாகியிருக்கும் படங்களை பற்றி காணலாம்.  1963 ஆம் ஆண்டு இயக்குநர் A. காசிலிங்கம் இயக்கிய படம் ‘கலையரசி’. இப்படத்தில் ஹீரோவாக எம்.ஜி. ராமச்சந்திரன் மற்றும் ஹீரோயினாக பானுமதியும் நடித்திருந்தனர். மேலும் எம்.என்.நம்பியார் , பி.எஸ்.வீரப்பா , ராஜஸ்ரீ மற்றும் சச்சு உள்ளிட்ட பழம்பெரும் நடிகர்களும் கலையரசி படத்தில் நடித்தனர். மேலும் படிக்க

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

BSP Armstrong : பகுஜன் சமாஜ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை.. முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்..
பகுஜன் சமாஜ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை.. முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்..
Breaking News LIVE, July 6: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 அதிகரிப்பு
Breaking News LIVE, July 6: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 அதிகரிப்பு
Portugal vs France, EURO 2024: சோகத்தில் ரொனால்டோ - யூரோ காலிறுதியில் ஷூட்-அவுட் முறையில் பிரான்சிடம் போர்ச்சுகல் தோல்வி
சோகத்தில் ரொனால்டோ - யூரோ காலிறுதியில் ஷூட்-அவுட் முறையில் பிரான்சிடம் போர்ச்சுகல் தோல்வி
Samantha : விமர்சனங்களை ஒதுக்கி பாதிக்கப்பட்டவராக நடிக்கிறார் சமந்தா..மீண்டும் மருத்துவர் ஃபிலிப்ஸ் காட்டம்
Samantha : விமர்சனங்களை ஒதுக்கி பாதிக்கப்பட்டவராக நடிக்கிறார் சமந்தா..மீண்டும் மருத்துவர் ஃபிலிப்ஸ் காட்டம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul gandhi meets labourers : கட்டிட வேலை பார்த்த ராகுல்! உற்சாகமான தொழிலாளர்கள்! உருக்கமான பதிவுTrichy rowdy :  ரவுடியை சுட்டுப்பிடித்த POLICE! அலறவிடும் SP வருண்குமார்! நடந்தது என்ன?Britain Election Results | ஆட்சியிழக்கும் ரிஷி சுனக்!வெற்றி விளிம்பில் ஸ்டார்மர்!Rahul Gandhi to Visit Hathras |எட்றா வண்டிய..!ஹத்ராஸுக்கு புறப்பட்ட ராகுல்..நேரில் ஆறுதல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
BSP Armstrong : பகுஜன் சமாஜ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை.. முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்..
பகுஜன் சமாஜ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை.. முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்..
Breaking News LIVE, July 6: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 அதிகரிப்பு
Breaking News LIVE, July 6: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 அதிகரிப்பு
Portugal vs France, EURO 2024: சோகத்தில் ரொனால்டோ - யூரோ காலிறுதியில் ஷூட்-அவுட் முறையில் பிரான்சிடம் போர்ச்சுகல் தோல்வி
சோகத்தில் ரொனால்டோ - யூரோ காலிறுதியில் ஷூட்-அவுட் முறையில் பிரான்சிடம் போர்ச்சுகல் தோல்வி
Samantha : விமர்சனங்களை ஒதுக்கி பாதிக்கப்பட்டவராக நடிக்கிறார் சமந்தா..மீண்டும் மருத்துவர் ஃபிலிப்ஸ் காட்டம்
Samantha : விமர்சனங்களை ஒதுக்கி பாதிக்கப்பட்டவராக நடிக்கிறார் சமந்தா..மீண்டும் மருத்துவர் ஃபிலிப்ஸ் காட்டம்
TVK Vijay: ஆம்ஸ்ட்ராங் படுகொலை - கொந்தளித்த த.வெ.க., தலைவர் விஜய் - ”சமரசமின்றி சட்ட-ஒழுங்கை நிலை நாட்டிடுக”
TVK Vijay: ஆம்ஸ்ட்ராங் படுகொலை - கொந்தளித்த த.வெ.க., தலைவர் விஜய் - ”சமரசமின்றி சட்ட-ஒழுங்கை நிலை நாட்டிடுக”
12 years of Naan Ee :  ஈ விஸ்வரூபம் எடுத்தா என்ன நடக்கும் தெரியுமா? எஸ்.எஸ். ராஜமௌலியின் 'நான் ஈ' வெளியான நாள் இன்று
12 years of Naan Ee : ஈ விஸ்வரூபம் எடுத்தா என்ன நடக்கும் தெரியுமா? எஸ்.எஸ். ராஜமௌலியின் 'நான் ஈ' வெளியான நாள் இன்று
BSP Armstrong Murder: தமிழகத்தை உலுக்கிய ஆம்ஸ்ட்ராங் படுகொலை - காரணம் என்ன? சரணடைந்த 8 பேர்
BSP Armstrong Murder: தமிழகத்தை உலுக்கிய ஆம்ஸ்ட்ராங் படுகொலை - காரணம் என்ன? சரணடைந்த 8 பேர்
Rahul Gandhi: காப்பீடு ஓகே,  இழப்பீடு எங்க? அக்னிவீர் திட்டத்தின் மீது ராகுல் காந்தி அட்டாக் - பதில் சொல்லுமா ராணுவம்?
காப்பீடு ஓகே, இழப்பீடு எங்க? அக்னிவீர் திட்டத்தின் மீது ராகுல் காந்தி அட்டாக் - பதில் சொல்லுமா ராணுவம்?
Embed widget