(Source: ECI/ABP News/ABP Majha)
Space Movies: எம்ஜிஆர் முதல் ஜெயம் ரவி வரை... சினிமா மூலம் விண்வெளி பயணத்தை பேசிய பிரபலங்கள்..!
சந்திரயான் 3 விண்கலம் நிலவில் தரையிறங்கி சாதனை படைக்கவிருக்கும் நிலையில் இந்திய சினிமாவில் இதுவரை விண்வெளித்துறையை மையமாக வைத்து வெளியாகியிருக்கும் படங்களை பற்றி காணலாம்.
சந்திரயான் 3 விண்கலம் நிலவில் தரையிறங்கி சாதனை படைக்கவிருக்கும் நிலையில் இந்திய சினிமாவில் இதுவரை விண்வெளித்துறையை மையமாக வைத்து வெளியாகியிருக்கும் படங்களை பற்றி காணலாம்.
-
கலையரசி (1963)
1963 ஆம் ஆண்டு இயக்குநர் A. காசிலிங்கம் இயக்கிய படம் ‘கலையரசி’. இப்படத்தில் ஹீரோவாக எம்.ஜி. ராமச்சந்திரன் மற்றும் ஹீரோயினாக பானுமதியும் நடித்திருந்தனர். மேலும் எம்.என்.நம்பியார் , பி.எஸ்.வீரப்பா , ராஜஸ்ரீ மற்றும் சச்சு உள்ளிட்ட பழம்பெரும் நடிகர்களும் கலையரசி படத்தில் நடித்தனர். 1963 ஆம் ஆண்டு ஏப்ரல் 19 ஆம் தேதி வெளியான இப்படம் வேற்றுகிரகவாசிகள் பூமிக்கு வருகை தந்து இங்கிருந்து மனிதர்களை தங்கள் இடத்துக்கு அழைத்துச் செல்வதை பற்றி அமைக்கப்பட்டிருந்தது. இதுவே இந்திய திரையுலகில் வேற்று கிரகம் அடிப்படையில் எடுக்கப்பட்ட முதல் படமாகும்.
-
சந்த் பர் சடாயி (1967)
1967 ஆம் ஆண்டு இந்தியில் வெளியான சந்த் பர் சதாயி (சந்திரனுக்கு ஒரு பயணம்) என்ற படத்தை டி.பி.சுந்தரம் இயக்கியிருந்தார். இப்படத்தில் படத்தில் தாரா சிங் , அன்வர் ஹுசைன் , பகவான், ஜி. ரத்னா மற்றும் பத்மா கண்ணா ஆகியோர் நடித்திருந்தனர். நிலவுக்கு புறப்படும் விண்வெளி வீரர்களின் குழு எதிர்கொள்ளும் சவால்களை சுற்றி திரைப்படத்தின் கதை அமைக்கப்பட்டிருந்தது.
-
கோய்…மில் கயா (2003)
ராகேஷ் ரோஷன் தயாரித்து இயக்கிய இந்தி படமான கோய்…மில் கயா’வில் ஹிருத்திக் ரோஷன் , ப்ரீத்தி ஜிந்தா, ரேகா,பிரேம் சோப்ரா, ரஜத் பேடி மற்றும்ஜானி லீவர் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். மறைந்த தந்தையின் பழைய உபகரணங்களைக் கண்டுபிடித்து அதில் விளையாட முடிவு செய்யும் சிறுவனுக்கு அந்த உபகரணங்கள் மற்ற உலகங்களுடன் தொடர்புகொள்வதற்கான சாதனமாக மாறிவிடும்.இதன் பிறகு என்ன நடக்கும் என்பதே இப்படத்தின் கதையாகும்.
-
அந்தரிக்ஷம் 9000 kmph (2018)
சங்கல்ப் ரெட்டி இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு உருவான இப்படத்தில் வருண் தேஜ் மற்றும் அதிதி ராவ் ஹைதாரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். விண்வெளி நிலையத்துடனான தொடர்பை இழந்த செயற்கைக்கோளில் ஏற்பட்ட பிரச்சினையை ஓய்வு பெற்ற விண்வெளி வீரரான வருண் தேஜ் எப்படி சரி செய்கிறார் என்பது இப்படத்தின் கதையாகும்.
-
டிக் டிக் டிக் (2018)
ஏழு நாட்களில் ஒரு விண்கல் பூமியைத் தாக்கும் என்பதைக் கண்டறிந்த விண்வெளித்துறை, அதனை அழிக்க ஓர் அணுசக்தி ஏவுகணையை செலுத்த முடிவு செய்கின்றனர். இந்த மிஷனில் ஜெயம் ரவி, ரமேஷ் திலக், அர்ஜுனன்,நிவேதா பெத்துராஜ், வின்சென்ட் அசோகன் என பயணிக்க கடைசியில் என்ன நடந்தது என்பதே இப்படத்தின் கதையாகும்.
-
மிஷன் மங்கள்(2019)
ஜெகன் சக்தி இயக்கத்தில், அக்ஷய் குமார், வித்யா பாலன், டாப்ஸி ,சோனாக்ஷி சின்ஹா, கீர்த்தி குல்ஹாரி உள்ளிட்ட பலரும் நடித்த படம் மிஷன் மங்கள். இந்தியாவின் மிகப்பெரிய விண்வெளிப் பயணமான செவ்வாய் பயணம் செய்த விஞ்ஞானிகளின் அடிப்படையாகக் கொண்டது இப்படம்.
-
ராக்கெட்ரி: நம்பி எஃபெக்ட்(2022)
இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட இந்த படத்தில் அவரின் கேரக்டரில் நடித்து படத்தை இயக்கியிருந்தார் மாதவன். இப்படத்தில் சூர்யா மற்றும் ஷாருக்கான் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் படத்தின் வெவ்வேறு பதிப்புகளில் நடித்திருந்தனர்.