Leo Interval: ‘தியேட்டர் தெறிக்கும்’.. எதிர்பார்ப்பை எகிற செய்யும் லியோ படத்தின் இண்ட்டர்வல் காட்சி..!
விஜய் படத்தின் ஒரு நல்ல இண்டர்வெல் ப்ளாக் பார்த்து ரொம்ப நாளாகிவிட்டது. அந்த குறையை லியோ தீர்க்கும் என்று எதிர்பார்க்கலாம்
லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் லியோ திரைப்படம் அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் படத்தின் மீது எக்கசக்கமான எதிர்பார்ப்பு இருந்துவருகிறது. இந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில் மேலுமொரு தகவலை வழங்கியுள்ளார் படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார்.
லியோ
விஜய் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், பிரியா ஆனந்த், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், உட்பட பலர் நடித்துள்ள இந்தப் படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரித்துள்ளது அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். லியோ திரைப்படம் உலகளவில் ஆயிரம் கோடி ரூபாய் வசூல் செய்யும் என சினிமா ஆர்வலர்கள் யூகித்துள்ளார்கள். இதற்கேற்ற வகையில் படத்தின் மீதான வரவேற்பை எந்த எந்த வகைகளில் அதிகப்ப்டுத்த முடியுமோ அதை படக்குழு செய்துவருகிறது.
இதுவரை லியோ
நடிகர் விஜய் பிறந்தநாள் அன்று படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஃபோஸ்டர் மற்றும் நான் ரெடிதான் பாடலை வெளியிட்டதில் இருந்து படத்தில் நடித்துள்ள சஞ்ஜய் தத் மற்றும் அர்ஜுன் ஆகிய இருவரின் பிறந்தநாளன்று அவர்களின் கதாபாத்திரங்களான ஆண்டோனி தாஸ் மற்றும் ஹரோல்டு தாஸ் முன்னோட்டக் காணொளிகள் வெளியிடப்பட்டன. படம் இப்படி இருக்குமா, அப்படி இருக்குமா என்று ரசிகர்கள் பேசி வரும் நிலையில் தற்போது படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் பேட்டி ஒன்றில் லியோ படம் பற்றிய முக்கியமான தகவல் ஒன்றை பகிர்ந்துகொண்டுள்ளார்.
ஐ ஆம் வெயிட்டிங்
#Leo interval Scene in theatres pure Bomb Blast..💥💣💯!! pic.twitter.com/SzxBJW3sBb
— 𝐕𝐣 𝐒𝐢𝐯𝐀ᴸᵉᵒ (@Sivamag007) August 22, 2023
பொதுவாகவே விஜய் படங்களில் இடைவேளைக் காட்சிகள் எப்படியானதாக இருக்கும் என்று தெரிந்துகொள்வதற்கு ரசிகர்கள் மிக அர்வமாக இருப்பார்கள். அந்த வகையில் விஜய் படங்களின் இடைவேளைக் காட்சிகளில் இதுவரை வந்ததிலேயே சிறந்ததாக ரசிகர்களால் சொல்லப்படுவது துப்பாக்கிப் படத்தில் வரும் ஐ ஆம் வெயிட்டிங் என்கிற வசனம். இந்த வசனம் எந்த அளவிற்கு புகழ்பெற்றது என்றால் விஜய்யின் அடுத்தடுத்து நான்கு படங்களின் இந்த வசனம் பயன்படுத்தப் பட்டிருக்கிறது.
தற்போது லியோ படத்தின் இடைவேளைக் காட்சி துப்பாக்கி படத்தைவிட சிறந்ததாக இருக்குமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகையில் லியோ படத்தின் இடைவேளைக் காட்சி குறித்து தயாரிப்பாளர் லலித் குமார் இப்படி தெரிவித்துள்ளார். “ லியோ படம் நடிகர் விஜயின் கேரியரிலேயே பெஸ்ட் படமாக இருக்கும். குறிப்பாக படத்தின் இடைவேளைக் காட்சியை நான் சமீபத்தில் பார்த்தேன் இந்த காட்சியில் நிச்சயம் ரசிகர்களுக்கு கூஸ்பம்ப்ஸை ஏற்படுத்தும். மொத்தம் 8 நிமிடம் இருக்கும் இந்த காட்சி நிச்சயம் ரசிகர்களுக்கு ரொம்பப் பிடிக்கும் “ என்று அவர் தெரிவித்துள்ளார்.