Entertainment Headlines Aug 13: வருகிறார் ‘ரோலக்ஸ்’ சார்... ஜெட் வேகமெடுக்கும் ஜெயிலர் வசூல்... ஸ்ரீதேவி டூடுள்... இன்றைய டாப் சினிமா செய்திகள்!
Entertainment Headlines Aug 13: திரையுலகில் இன்று இதுவரை நடந்த நிகழ்வுகளை கீழே விவரமாக காணலாம்.
![Entertainment Headlines Aug 13: வருகிறார் ‘ரோலக்ஸ்’ சார்... ஜெட் வேகமெடுக்கும் ஜெயிலர் வசூல்... ஸ்ரீதேவி டூடுள்... இன்றைய டாப் சினிமா செய்திகள்! Entertainment Headlines Today August 13th Tamil Cinema News Kollywood sridevi suriya rolex a r rahman nayanthara Entertainment Headlines Aug 13: வருகிறார் ‘ரோலக்ஸ்’ சார்... ஜெட் வேகமெடுக்கும் ஜெயிலர் வசூல்... ஸ்ரீதேவி டூடுள்... இன்றைய டாப் சினிமா செய்திகள்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/13/f1b8253824ed29164344af2819ce82b31691928116618574_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நடிகை ஸ்ரீதேவி பிறந்தநாள்.. சிறப்பு டூடுள் வெளியிட்டு கொண்டாடும் கூகுள்..!
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் 60-வது பிறந்த்நாளான இன்று கூகுள் சிறப்பு டூடுள் வெளியிட்டு சிறப்பித்துள்ளது. அறிவியல், இயற்கை, சினிமா, தொழில்நுட்பம், கலை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்த ஆளுமைகள், முக்கியமான தினங்கள் வரும் நாட்களில் கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுள் வெளியிட்டு அவர்களின் பங்களிப்பை கொண்டாடும். மேலும் படிக்க
அச்சச்சோ.. சென்சாரில் கட் செய்யப்பட்ட ஜெயிலர் படத்தின் மாஸ் காட்சிகள்.. சோகத்தில் ரசிகர்கள்...
ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படத்தின் முக்கிய காட்சிகள் கிளைமேக்ஸில் நீக்கப்பட்டதாக எடிட்டர் நிர்மல் சொன்னது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 169வது படமாக ‘ஜெயிலர்’ கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியானது. தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, சிவராஜ் குமார், சுனில், ஜாக்கி ஷெராஃப் ,யோகிபாபு, விநாயகம், வசந்த் ரவி, யோகிபாபு உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். மேலும் படிக்க
சொந்த குரலில் பாடிய ஷாலினி.. காதலில் விழுந்த அஜித்.. 24 ஆண்டுகளை நிறைவு செய்த ‘அமர்க்களம்’
1999 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான மாஸ் ஹிட் அடித்த ‘அமர்க்களம்’ படம் இன்றோடு 24 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இயக்குநர் சரண், நடிகர் அஜித் இருவரும் முதல்முறையாக காதல் மன்னன் படத்தில் இணைந்தனர். இன்றளவும் ரசிகர்களின் பேவரைட் ஆக உள்ள அப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து இருவரும் ‘அமர்க்களம்’ படம் மூலம் இரண்டாவதாக இணைந்தனர். மேலும் படிக்க
சிங்கத்தை சீண்ட வருகிறது தேள் கொடுக்கு.. முழுப்படமாக உருவாகிறது சூர்யாவின் ‘ரோலக்ஸ்’
லியோ படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜின் எல்.சி,யு வில் இடம்பெற இருக்கும் அடுத்தப் படமாக உருவாக இருக்கிறதா சூர்யாவின் ரோலக்ஸ். லோகேஷ் சொன்ன அந்த கதைக்கு இப்போது யெஸ் சொல்லப் போகிறார் சூர்யா. சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. சரித்திர கதையாக உருவாகி வரும் இந்தப் படத்தின் வேலைகளை படுவேகமாக நடந்து வருகின்றன. மேலும் படிக்க
களைகட்டும் தியேட்டர்கள்.. கல்லா கட்டும் ஜெயிலர்.. 3 நாளில் இவ்வளவு கோடி வசூலா?
நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் தொடந்து ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், 3 நாட்களில் இப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படுகிறார் நடிகர் ரஜினிகாந்த். அவரின் 169-வது படமாக உருவாகியுள்ள “ஜெயிலர்” படம் கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி உலகமெங்கும் வெளியானது. மேலும் படிக்க
மழையால் இசை கச்சேரி ரத்து.. சோகத்தில் ஏ.ஆர்.ரஹ்மான்.. முதலமைச்சர் சொன்ன ஹேப்பி நியூஸ்..!
சென்னையில் நடைபெறவிருந்த ஏ.ஆர்.ரஹ்மானின் இசை கச்சேரி மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்திய சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக உள்ள ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஏராளமான ரசிகர்கள் உலகமெங்கும் உள்ளனர். அவர் படங்களை தாண்டி, தனது இசைக் கச்சேரிகளை உலகமெங்கும் நடத்தி வருகிறார். மேலும் படிக்க
பட்டையைக் கிளப்பும் கெமிஸ்ட்ரி... லைக்ஸ் அள்ளும் ஷாருக்கான் - நயன் ஜோடி.. ஜவான் இரண்டாவது பாடல் டீசர்!
ஷாருக்கான் நடித்து அனிருத் இசையமைத்துள்ள ஜவான் படத்தின் இரண்டாவது பாடலின் புதிய காட்சிகள் வெளியாகி உள்ளன. ஜவான் படத்தின் மூலம் கோலிவுட் டூ பாலிவுட் பயணித்துள்ளதுடன் தன்னுடன் சில கோலிவுட் பிரபலங்களையும் அழைத்துச் சென்றுள்ளார் அட்லீ. முதல் பாலிவுட் படத்திலேயே உச்ச நட்சத்திரமான ஷாருக்கானை அட்லீ இயக்கும் நிலையில், இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா, வில்லனாக விஜய் சேதுபதி இருவரும் நடிக்க உள்ளனர். மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)