Jawan Second Single: பட்டையைக் கிளப்பும் கெமிஸ்ட்ரி... லைக்ஸ் அள்ளும் ஷாருக்கான் - நயன் ஜோடி.. ஜவான் இரண்டாவது பாடல் டீசர்!
நயன் - ஷாருக் இணைந்திருக்கும் பெப்பியான இப்பாடலின் மற்றொரு டீசர் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது.
ஷாருக்கான் நடித்து அனிருத் இசையமைத்துள்ள ஜவான் படத்தின் இரண்டாவது பாடலின் புதிய காட்சிகள் வெளியாகி உள்ளன. ஜவான் படத்தின் மூலம் கோலிவுட் டூ பாலிவுட் பயணித்துள்ளதுடன் தன்னுடன் சில கோலிவுட் பிரபலங்களையும் அழைத்துச் சென்றுள்ளார் அட்லீ.
முதல் பாலிவுட் படத்திலேயே உச்ச நட்சத்திரமான ஷாருக்கானை அட்லீ இயக்கும் நிலையில், இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா, வில்லனாக விஜய் சேதுபதி இருவரும் நடிக்க உள்ளனர். நடிகை தீபிகா படுகோன் இரண்டாவது ஹீரோயினாக நடிக்க, யோகி பாபு, பிரியாமணி, சான்யா மல்ஹோத்ரா உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கியப் பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
நடிகர் விஜய் இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. கோலிவுட் சினிமாவின் ராக் ஸ்டாராகக் கொண்டாடப்படும் இசையமைப்பாளர் அனிருத், இப்படத்தின் மூலம் பாலிவுட் எண்ட்ரி கொடுத்துள்ளார்.
தமிழ், இந்தி, தெலுங்கு என மூன்று மொழிகளில் இப்படம் வரும் செப்டெம்பர் 7ஆம் தேதி வெளியாக இப்படம் வெளியாக உள்ளது.
முன்னதாக இப்படத்தின் முதல் பாடலான வந்த இடம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. ஷாருக்கானின் இண்ட்ரோ பாடல் போல் தோற்றமளித்த இப்பாடல் இந்தியை விட தமிழில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இரண்டாவது பாடலான செலியா, தமிழில் ஹய்யோடா பாடல் நாளை (ஆகஸ்ட்.14) வெளியாக உள்ளது.
இந்நிலையில் நேற்று இப்பாடலின் முன்னோட்டக் காட்சிகள் வெளியாகி வரவேற்பைப் பெற்றன. அந்த வகையில் தற்போது நயன்தாரா - ஷாருக் இணைந்திருக்கும் பெப்பியான இப்பாடலின் மற்றொரு டீசர் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது.
Love will find a way to your heart….Chaleya Teri Aur….#Chaleya, #Hayyoda and #Chalona Song Out Tomorrow! #Jawan releasing worldwide on 7th September 2023, in Hindi, Tamil & Telugu. pic.twitter.com/ntAgvgsKLx
— Shah Rukh Khan (@iamsrk) August 13, 2023
க்யூட்டான ரொமாண்டிக் பாடலாக அமைந்துள்ள இப்பாடலில் ஷாருக் - நயன்தாரா இடையேயான கெமிஸ்ட்ரி ரசிக்க வைத்து இந்த வீடியோ தற்போது லைக்ஸ் அள்ளி வருகிறது.
முன்னதாக ஜவான் படத்தின், டீசர், ட்ரெய்லர், போஸ்டர்கள் ஆகியவை வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றன.
பான் இந்தியா ரசிகர்கள் எதிர்நோக்கும் ஜவான் படத்தின் வெளியீட்டுக்கு இன்னும் ஒரு மாதத்துக்கும் குறைவான நாட்களே உள்ள நிலையில், அடுத்தடுத்து இப்படத்தின் அப்டேட்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மற்றொருபுறம் நடிகர் விஜய் சேதுபதி பாலிவுட்டில் வெப் சீரிஸ், படங்கள் என மெல்ல காலடி எடுத்து வைத்து வருகிறார். நடிகர்கள் விஜய், ரஜினிகாந்த், கமல் என உச்ச நட்சத்திரங்களுக்கு ஜோடியாகக் கலக்கி வரும் விஜய் சேதுபதி தற்போது பாலிவுட் பாட்ஷா ஷாருக்கானுக்கு வில்லனாக அறிமுகமாக உள்ளார். தொடர்ந்து கத்ரினா கைஃப் உடன் விஜய் சேதுபதி நடித்துள்ள மெர்ரி கிறிஸ்துமஸ் படமும் வெளியாக உள்ள நிலையில், இப்படம் அவருக்கு பெரும் ப்ரேக்காக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: K Krishnasamy: மாமன்னன் படத்தில் ஃபஹத் பேசிய வசனம்தான் காரணம்... உதயநிதி மேல் வழக்கு பதிய வேண்டும் - கிருஷ்ணசாமி ஆவேசம்!