Suriya : சிங்கத்தை சீண்ட வருகிறது தேள் கொடுக்கு.. முழுப்படமாக உருவாகிறது சூர்யாவின் ரோலக்ஸ்
விக்ரம் படத்தின் சூர்யா நடித்த ரோலக்ஸ் கதாபாத்திரம் முழு நீளப்படமாக உருவாக இருப்பதாக சூர்யா கூறியிருக்கிறார்..
லியோ படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜின் எல்.சி,யு வில் இடம்பெற இருக்கும் அடுத்தப் படமாக உருவாக இருக்கிறதா சூர்யாவின் ரோலக்ஸ். லோகேஷ் சொன்ன அந்த கதைக்கு இப்போது யெஸ் சொல்லப் போகிறார் சூர்யா.
சூர்யா
சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. சரித்திர கதையாக உருவாகி வரும் இந்தப் படத்தின் வேலைகளை படுவேகமாக நடந்து வருகின்றன. தாங்கள் எதிர்பார்த்ததை விட பல மடங்கு சிறப்பாக படம் உருவாகி வருவதாக தெரிவித்துள்ளார் சூர்யா.
சமீபத்தில் தனது ரசிகர்களை சந்தித்து பேசியபோது தான் தற்போது நடித்துவரும் படங்கள் மற்றும் நடிக்க இருக்கும் படங்கள் குறித்து தகவல்கள் தெரிவித்துள்ளார்.
அடுத்தடுத்த ஐந்து படங்கள்
சூரரைப்போற்று கூட்டணி
தற்போது சூர்யா நடித்து வரும் கங்குவா திரைப்படத்தினை தொடர்ந்து அடுத்ததாக தனது 43-வது படத்தை சூரரைப்போற்று திரைப்படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்க இருப்பதாகவும் ஜி.வி பிரகாஷ் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார் என்றும் தெரிவித்துள்ளார். இந்த படம் ஜி வி பிரகாஷ் குமாருக்கு 100-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
வாடிவாசல்
சூர்யாவில் ரசிகர்கள் மிக நீண்டகாலமாக காத்துக்கொண்டு வரும் படம் வாடிவாசல். வெற்றிமாறன் இயக்கும் இந்தப் படத்தின் வேலைகள் அடுத்த ஆண்டில் இருந்து தொடங்க இருப்பதாக தெரிவித்துள்ளார் சூர்யா.
ரோலக்ஸ்
யாரும் எதிர்பார்க்காத வகையில் சூர்யா தகவல் ஒன்றை தெரிவித்திருக்கிறார். ரசிகர்கள் மிக ஆர்வமாக கேட்டு வந்த ரோலக்ஸ் கதாபாத்திரத்தை வைத்து முழு படம் ஒன்றை இயக்க இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். அவரிடம் இந்தப் படத்தின் கதையை கேட்டதாகவும் தனக்கு கதை பிடித்திருந்ததாகவும் கூறியுள்ளார் சூர்யா. மேலும் லோகேஷ் கனகராஜ் தனது கனவுப்படமாக கருதி வரும் இரும்பு கை மாயாவி படமும் தொடங்க இருப்பதாக தெரிவித்துள்ளார் சூர்யா. இதனால் சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சியில் துள்ளி குதித்துவருகிறார்கள்.
தேளா? சிங்கமா?
Director Lokesh Kanakaraj narrated the script of #Rolex as a standalone film!!
— Ramesh Bala (@rameshlaus) August 13, 2023
- Suriya at his Fans meet today.
Best news in recent times.. 🙌 pic.twitter.com/NdLCZBSxjB
தற்போது இதன் மூலம் புதிய சந்தேகம் ஒன்றும் கிளம்பியுள்ளது. இந்தப் படம் எல்.சி.யு வில் இடம்பெறுமா அப்படி இருந்தால் லியோ படத்தின் விஜயும் சூர்யாவும் ஒரே படத்தில் சேர்ந்து நடிக்க வாய்ப்பிருக்கிறதா? என்று இணையதளத்தில் விவாதம் கிளம்பியுள்ளது