Entertainment Headlines: கேப்டன் மில்லர் சிங்கிள்; ஸ்குவிட் கேம் 2 அப்டேட்: இன்றைய சினிமா செய்திகள்
Entertainment Headlines November 22: திரைத்துறையில் இன்று நடந்த முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
Captain Miller: நீ தனியா வந்தா தலை மட்டும் உருளும் - மிரட்டும் கேப்டன் மில்லர் பாடல் வரிகள்
Squid Game 2: புதிய போட்டிகளுக்கு தயாரா மக்களே? ஓடிடியில் வெளியானது ஸ்குவிட் கேம் 2 வது சீசன்!
கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான ஸ்குவிட் கேம் எம்மி விருதுகளுக்கு தேர்வாகியது. ஆங்கிலம் அல்லாத ஒரு இணையத் தொடர் இந்த விருதுக்காக தேர்வாவது இதுவே முதல் முறை. அதே சமயத்தில் சிறந்த முக்கிய கதாபாத்திரத்திற்கான விருதை ஹ்வாங் டோங் ஹ்யூக் (Hwang Dong-hyuk) வென்று சாதனைப் படைத்தார். ஆசிய நடிகர் ஒருவர் எம்மி விருதை வெல்வது வரலாற்றில் அதுவே முதல் முறையாகும். லீ.யூ.மீ கெளரவ கதாபாத்திரத்திற்கான விருதை வென்றார். கூடுதலாக சிறந்த புரோடக்ஷன் டிசைன், சிறந்த ஸ்டண்ட் காட்சிகள், சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் என மூன்று விருதுகளையும் வென்ற ஒரே ஆசிய தொடர் ஸ்குவிட் கேம். மேலும் படிக்க
Actress Vichitra: 2001 ஷூட்டிங்கில் நடந்த கொடுமை..அந்த ஆண்டில் விசித்ரா நடித்து ரிலீசான படங்கள் இதுதான்..!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய தினம் உங்கள் வாழ்க்கையில் பூகம்பத்தை ஏற்படுத்திய சம்பவங்கள் பற்றி தெரிவிக்க வேண்டும் என்ற டாஸ்க் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்டது. அப்போது பேசிய நடிகை விசித்ரா, 2001 ஆம் ஆண்டு டாப் ஹீரோ ஒருவரின் படத்தின் ஷூட்டிங்கின் போது தனக்கு ஏற்பட்ட கசப்பான சம்பவங்களை பகிர்ந்தார். இது சக போட்டியாளர்கள் மட்டுமின்றி ஒட்டுமின்றி மொத்த ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் படிக்க
Mansoor Ali Khan: ”நாளை ஆஜராகணும்”.. மன்சூர் அலிகானுக்கு செக் வைத்த காவல்துறை.. என்ன செய்யப் போகிறார்?
நடிகை த்ரிஷாவை அநாகரிகமாக பேசிய விவகாரத்தில் நடிகர் மன்சூர் அலிகான் ஆஜராக வேண்டுமென காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தில் நடிகை த்ரிஷா, நடிகர் மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்த படத்தில் த்ரிஷாவுக்கும், தனக்கும் காட்சிகள் வைக்கப்படவில்லை என அப்படத்தின் வெற்றி விழாவில் நடிகர் மன்சூர் அலிகான் கருத்து தெரிவித்திருந்தார். தொடர்ந்து கடந்த வாரம் நடந்த செய்தியாளர் சந்திப்பில், மீண்டும் அதே விஷயத்தை சொல்ல முயன்ற அவர் அநாகரீகமான வார்த்தைகளை பேச தொடங்கினார். மேலும் படிக்க
Gandhi Talks: கோவா திரைப்பட விழாவில் வெளியான விஜய் சேதுபதியின் ‘காந்தி பேசுகிறார்’!
மத்திய அரசின் நிதியுதவியுடன் வருடந்தோறும் நடத்தப் படும் நிகழ்வு சர்வதேச இந்தியத் திரைப்பட விழா. கடந்த 53 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த விழா 54 ஆவது முறையாக கோவாவில் நடைபெற்று வருகிறது. நவம்பர் 20 முதல் 28 ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் இந்த நிகழ்ச்சியில் உலகம் முழுவதிலுமிருந்து பல்வேறு மொழிப்படங்கள், ஆவணப்படங்கள் , குறும்படங்கள் திரையிடப்பட இருக்கின்றன. மேலும் உலகம் முழுவதில் இருந்து திரைக் கலைஞர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விவாதிக்க இருக்கிறார்கள். மேலும் படிக்க