(Source: ECI/ABP News/ABP Majha)
Entertainment Headlines: ஓயாத லியோ பஞ்சாயத்து.. சிவகார்த்திகேயன் Vs இமான்.. விக்ரமின் 33 ஆண்டு சினிமா பயணம்.. இன்றைய ரவுண்டப்!
Entertainment Headlines Oct 17: திரையுலகில் இன்று இதுவரை நடந்த நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
உள்துறை செயலருடன் லியோ வழக்கறிஞர்கள் சந்திப்பு.. 7 மணி காட்சிக்கு அனுமதி கிடைக்குமா?
லியோ திரைப்படத்தின் காலை 7 மணி காட்சிக்கு அனுமதி கேட்டு உள்துறை செயலரை லியோ வழக்கறிஞர்கள் சந்தித்து வருகின்றனர். லியோ படத்துக்கு காலை 7 மணி காட்சிக்கு அனுமதி அளிப்பது பற்றிய அரசின் முடிவை மறுஆய்வு செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் இன்று தெரிவித்தது. நாளை மறுநாள் அக்.19 லியோ திரைப்படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மேலும் படிக்க
விஜய் முதல் மன்சூர் அலிகான் வரை.. லியோ பட நடிகர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் லியோ (Leo Film) திரைப்படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக இருக்கிறது. விஜய், த்ரிஷா, அர்ஜூன், மன்சூர் அலிகான், கெளதம் மேனன், சஞ்சய் தத், சாண்டி மாஸ்டர் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்து 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. மேலும் படிக்க
சிவகார்த்திகேயன் செஞ்ச துரோகத்த வெளியில் சொல்ல முடியாது.. மனம் நொந்து பேசிய டி.இமான்!
தேசிய விருது வென்றவரும், தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளருமான டி.இமான் தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் நடிகர் சிவகார்த்தியேன் உடனான பிரச்னை பற்றி அதிர்ச்சித் தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அவர் தெரிவித்திருப்பதாவது: "நாங்கள் இருவரும் முதலில் மனம் கொத்திப் பறவை படத்தில் பணியாற்றினோம். அந்தப் படம் வேலை செய்யும்போது அவரது முதல் படம் ரிலீசாகவில்லை. விஜய் டிவியில் அவர் பணியாற்றிய அது, இது, எது நிகழ்ச்சியை பார்த்துவிட்டு எழில் சார் என்னிடம் கேட்டார்.. “இது சரியாக இருக்குமா, ஹீரோவாக யாரை போடலாம்” எனக் கேட்டார். மேலும் படிக்க
கலையுலக பிதாமகன்.. நடிகர் “சீயான்” விக்ரம் சினிமாவில் அறிமுகமாகி 33 ஆண்டுகள் நிறைவு..!
தமிழ் சினிமா ரசிகர்களால் “சீயான்” என கொண்டாடப்படும் நடிகர் விக்ரம் இன்றோடு திரைத்துறையில் அறிமுகமாகி 33 ஆண்டுகள் நிறைவடைகிறது. தமிழ் சினிமாவை இந்த ஊரில் இருந்து தொடங்கலாம் என சில பிரபலங்களில் சொந்த ஊரை குறிப்பிடுவார்கள். அந்த வகையில் தமிழ் சினிமாவில் பரமக்குடி மிக முக்கியமான இடத்தை பிடித்துள்ளது. இங்கிருந்து தான் தமிழ் சினிமாவின் மகத்தான கலைஞன் கமல்ஹாசன் வருகை தந்தார். மேலும் படிக்க
திராவிடத்தின் போர்வாளாக ஒலித்த வசனங்கள்... 71 ஆண்டுகளை நிறைவு செய்யும் “பராசக்தி” படம்..!
திராவிட இயக்கத்தை வளர்த்தெடுத்த திரைப்படங்களில் மிக முக்கியமான இடத்தை பிடித்துள்ள “பராசக்தி” படம் வெளியாகி இன்றோடு 71 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. 1950 ஆம் ஆண்டின் தொடக்க காலக்கட்டம் அது. எங்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அங்கெல்லாம் ஆத்திகத்தின் உள்ளடி வேலைகளை மக்களுக்கு விளக்கி ஆத்திகத்தை தூக்கி பிடித்துக் கொண்டு ஒரு கூட்டம் இருந்தது. அப்படிப்பட்ட இடங்களில் ஒன்றாக தியேட்டர்களும் இருந்தது. மேலும் படிக்க