Entertainment Headlines: லால் சலாமை கைப்பற்றிய ரெட் ஜெயண்ட்.. ஹியூக் ஜேக்மேன் பிறந்தநாள் - சினிமா செய்திகள் இன்று!
Entertainment Headlines Oct 12: திரையுலகில் இன்று இதுவரை நடந்த நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
![Entertainment Headlines: லால் சலாமை கைப்பற்றிய ரெட் ஜெயண்ட்.. ஹியூக் ஜேக்மேன் பிறந்தநாள் - சினிமா செய்திகள் இன்று! Entertainment Headlines Oct 12 tamil cinema news The Southern Rising Actress Revathy Actor Rana Lal Salaam Release Entertainment Headlines: லால் சலாமை கைப்பற்றிய ரெட் ஜெயண்ட்.. ஹியூக் ஜேக்மேன் பிறந்தநாள் - சினிமா செய்திகள் இன்று!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/12/e189c9aa27503dbb415f20b9ee5e5dbe1697110321658333_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
லால் சலாம் ரிலீஸ்
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி இருக்கும் லால் சலாம் படம் பொங்கலுக்கு ரிலீசாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ஜெயிலர் படத்தை தொடர்ந்து ரஜினி நடித்துள்ள படம் லால் சலாம். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி இருக்கும் இந்த படத்தில் மொய்தீன் பாய் கேரக்டரில் நடித்துள்ளார். இவர் மட்டும் இல்லாமல் முன்னாள் கிரிக்கெட் விரர் கபில்தேவும் நடித்துள்ளார். லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகி இருக்கும் லால் சலாம் படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைத்துள்ளார். விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும் வாசிக்க..
மனம் திறந்த நடிகை ரேவதி
சினிமாவில் பெண்களின் பங்கு குறித்து பல்வேறு கோணங்களில் பேசினார் ரேவதி. அப்போது தேவர் மகன் படத்தில் இஞ்சி இடுப்பழகி பாடல் உருவான விதம் குறித்த சுவாரஸ்யமான தகவல் ஒன்றைப் பகிர்ந்துகொண்டார். இஞ்சு இடுப்பழகி பாடலில் கமல் ரேவதியிடம் பாட்டு பாட கேட்டுக்கொள்வார். அப்போது பாடத் தொடங்கும் ரேவதி கமல் தனது கையை பிடித்தவுடன் அவரது குரல் தடுமாறும். அப்போது ரேவதி பேசும் காத்துதா வருது என்கிற வசனம் இன்றுவரை அவரது புகழ்பெற்ற காட்சிகளில் ஒன்று. இந்த காட்சி உருவான விதத்தை குறித்து பேசினார் ரேவதி.மேலும் வாசிக்க..
பிரபலமாக இருப்பதில் எந்த நன்மையும் இல்லை - நடிகர் ராணா
புதிய இந்தியா தொடர்பான தங்களது கருத்துகளை தெரிவிக்கும் விதமாக, பல்துறை பிரமுகர்கள் பங்கேற்கும் ஏபிபி சார்பிலான “தெற்கின் எழுச்சி” எனும் தலைப்பிலான கருத்தரங்கு சென்னையில் இன்று அதாவது அக்டோபர் 12ஆம் தேது நடைபெற்று வருகிறதுஇந்த சிறப்பு மிக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் ராணா டகுபதி பேசியதாவது: “சிறுவயதில் இருந்தே திரைப்படங்களில் ஈர்க்கப்பட்டதால் விஷுவல் எஃபெக்ட்ஸ் துறையில் இருந்து எனது பணியைத் தொடங்கினேன். பிரபலமாக இருப்பது ஒரு வேலை. இருப்பினும் பிரபலமாக இருப்பதில் எந்த நன்மையும் இல்லை. அனைவரையும் AI தொழில்நுட்பம் பாதிக்கும். மேலும் வாசிக்க..
ஃபிட்னஸ் பற்றி அட்வைஸ் பண்ண மாட்டேன் நடிகர் ராணா
என்னைப் பற்றிய ஒரு பொதுவான ஒரு பிம்பம் நான் மிக ஃபிட்டான ஒரு நபர் என்பதே. என்னுடைய வாழ்க்கையில் எந்த தருணத்திலும் நான் ஃபிட்னசை கடைபிடித்தது கிடையாது. நான் நடித்த படங்களில் கதாபாத்திரங்கள் என்னை ஃபிட்டாக இருக்க வலியுறுத்தின. படப்பிடிப்பு நேரங்களைத் தவிர்த்து நான் பெரும்பாலும் எந்த விதமான பயிற்சியும் செய்வதே இல்லை. பாகுபலி மாதிரியான படங்கள் உங்களை அந்த எல்லைக்கு தள்ளும்...மேலும் வாசிக்க..
அன்பெனும் ஆயுதம் தானே ஒரு வீரன் நெஞ்சமே..
லியோ திரைப்படத்தின் மூன்றாவது பாடலான அன்பெனும் பாடல் வெளியாகி இருக்கிறது. அனிருத் இசையமைத்து விஷ்ணு எடவன் இந்தப் பாடலுக்கான வரிகளை எழுதி இருக்கிறார். அனிருத் மற்றும் லோதிகா இணைந்து இந்தப் பாடலை பாடியுள்ளார்கள்.மேலும் வாசிக்க..
ஹியூக் ஜேக்மேன் பிறந்தநாள்!
தமிழில் ஹாலிவுட் படங்களைப் பார்த்து ரசித்தவர்கள் நிச்சயம் எக்ஸ் மேனாக நடித்த ஹியூக் ஜேக்மேன் என்கிற நடிகரைத் தெரிந்து வைத்திருப்போம். பெரும்பாலான ரசிகர்கள் அவரை ஒரு மார்வெல் காமிக் சூப்பர்ஹீரோ கதாபாத்திரமாகவே பார்த்திருக்கிறோம். ஆனால் தனது ஒவ்வொரு படத்துக்கும் ஏதோ ஒரு வகையில் தனித்துவமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து தொடர்ச்சியாக நடித்து வருபவர் ஹியூக் ஜேக்மேன். இன்று அவரது பிறந்தநாள்.மேலும் வாசிக்க..
வில்லன் கமல்ஹாசனுடன் போட்டிபோடும் அமிதாப்..
நடிகையர் திலகம் என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கிய நாக் அஸ்வின், அடுத்ததாக இயக்கி வரும் திரைப்படம் 'கல்கி 2898 AD'. சயின்ஸ் பிக்ஷன் ஜானரில் உருவாகும் இப்படத்தை 600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் மிக பிரமாண்டமாக தயாரித்து வருகிறது வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம். இரண்டு பாகங்களாக வெளியாக உள்ள இப்படத்தின் முதல் பாகம் வரும் ஜனவரி 2024ல் வெளியாக உள்ளது. மேலும் வாசிக்க.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)