
Lakshmi Menon : ஈரம் கூட்டணி மீண்டும் இணையும் ’சப்தம்’ படம் ... இணைந்த லட்சுமி மேனன்... உற்சாகத்தில் ரசிகர்கள்!
ஈரம் படத்துக்குப் பிறகு மீண்டும் ஆதி - அறிவழகன் இருவரும் சப்தம் படத்துக்காக இணைந்துள்ளனர். இந்தப் படத்தின் நாயகியாக லக்ஷ்மி மேனன் இணைந்துள்ளார்.

ஈரம் பட இயக்குநர் அறிவழகன் மற்றும் அப்பட நடிகர் ஆதி மீண்டும் இணையும் சப்தம் படத்தில் நாயகியாக நடிகை லக்ஷ்மி மேனன் இணைந்துள்ளார்.
கோலிவுட்டில் 2009ஆம் ஆண்டு அமானுஷ்ய க்ரைம் த்ரில்லர் படமாக வெளியாகி கவனமீர்த்து வெற்றிபெற்ற படம் ஈரம். நடிகர்கள் ஆதி, நந்தா, நடிகை சிந்து மேனன் உள்ளிட்டோர் நடித்த இந்தப் படம் பெரும் கவனமீர்த்து பாசிட்டிவ் விமர்சனங்களை அள்ளியது.
இப்படத்தைத் தொடர்ந்து வல்லினம், ஆறாது சினம், குற்றம் 23 உள்ளிட்ட படங்களை இயக்கிய அறிவழகன் இறுதியாக தமிழ் ராக்கர்ஸ் வெப் சீரிஸை இயக்கியிருந்தார்.
இந்நிலையில் தற்போது மீண்டும் ஆதி - அறிவழகன் இருவரும் சப்தம் படத்துக்காக இணைந்துள்ளனர். இந்தப் படத்தின் நாயகியாக லக்ஷ்மி மேனன் இணைந்துள்ளார்.
ஆஃபா ஃப்ரேம்ஸ், இயக்குநர் அறிவழகன் மற்றும் செவன் ஜி ஃபில்ம்ஸ் சிவா இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். ஈரம் படத்தைப் போல் அதிரவைக்கும் ஹாரர் திரில்லர் திரைப்படமாக உருவாகும் இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பை, திட்டமிட்டபடி படக்குழுவினர் நிறைவு செய்துள்ளனர். விரைவில் இரண்டாம் கட்டப்படப்பிடிப்பு துவங்கவுள்ளது. இதில் ஆதி - லக்ஷ்மி மேனன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படவுள்ளன.
Welcome talented & lovely #LakshmiMenon in joining the sets of #Sabdham
— Arivazhagan (@dirarivazhagan) February 24, 2023
Starring @AadhiOfficial
An @dirarivazhagan Film
A @MusicThaman Musical
Produced by @7GFilmsSiva & @Aalpha_frames.@Dop_arunbathu @EditorSabu @Manojkennyk @stunnerSAM2 @Viveka_Lyrics @teamaimpr @decoffl pic.twitter.com/Ej9xlWlP9b
முன்னதாக நடிகை லக்ஷ்மி மேனன் இப்படத்தில் இணைந்தது குறித்த அறிவிப்பை ஒரு போஸ்டராக தயாரிப்புக் குழுவினர் பகிர்ந்திருந்தனர். நேற்று சந்திரமுகி 2 படக்குழு புகைப்படத்தைத் தொடர்ந்து, லட்சுமி மேனன் குறித்து இன்று மீண்டும் அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், லட்சுமி மேனன் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் உற்சாகம் தெரிவித்து வருகின்றனர்.
த்ரில்லர் படங்களில் தனக்கென தனி முத்திரை பதித்த இயக்குநர் அறிவழகன், இப்படத்தில் தயாரிப்பாளராக தனது புதிய பயணத்தை தொடங்கியுள்ளார். ஈரம் படத்துக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தமனே இப்படத்துக்கும் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர் பற்றிய அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

