மேலும் அறிய

Sita Ramam: ''இனி லவ் படம் இல்லை.. புதுப்பசங்களைப் பார்த்து கத்துக்கிறேன்'' - நிலைமையைச் சொன்ன துல்கர்..

ஹனு ராகவ்புடி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் காதலை கசிந்துருக செய்யும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

நேற்று வெளியான சீதா ராமம் படத்தின் ட்ரைலர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஹனு ராகவ்புடி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் காதலை கசிந்துருக செய்யும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். 20 ஆண்டுகளுக்கு முன் ராணுவத்தில் பணியாற்றிய கடிதத்தை சீதாவிடம் சேர்க்க போராடும் ஒருவராக ராஷ்மிகா. ஏன்? எதற்கு? சிக்கல்கள் என்ன? சவால்கள் என்ன என பல எதிர்பார்ப்புகளை டீசரே உண்டாக்கியது. அதேபோல் காட்சி அமைப்புகளும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் உருவாகியுள்ள நிலையில் தமிழ் ட்ரைலர் நேற்று வெளியிடப்பட்டது. சென்னையில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்ட படக்குழுவினர் ட்ரைலரை வெளியிட்ட அங்கு கூடியிருந்த ரசிகர்களிடம் கலந்துரையாடினர்.

இந்த விழாவில் பேசிய துல்கர் ரொம்ப ரொம்ப ஸ்பெஷலான படம். மிகப்பெரிய கதை. அழகான கதை. நிச்சயம் அனைவரும் படத்தைப் பாருங்கள். நடித்த நடிகர்கள் அனைவரும் சிறப்பான நடித்துள்ளனர். தமிழுக்கு வரும்போதெல்லாம் ஏன் காதல்கதை என்று கேட்கிறார்கள். மலையாளத்தில்கூட வித்தியாசமான படங்களை கொடுக்கிறீர்கள். தமிழ் என்றால் காதல்தானா என்கிறார்கள். நிச்சயம் அடுத்த முறை காதல்கதையோடு வர மாட்டேன். இப்போது உள்ள இளம் நடிகர்கள் அழகாக காதல்படங்களை கொண்டு வருகிறார்கள். அந்த புதுப்பசங்களைப் பார்த்து நான் லவ் படங்கள் செய்ய கற்றுக்கொள்கிறேன் என்றார்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dulquer Salmaan (@dqsalmaan)

மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளிலும் துல்கர் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடித்து இயக்குநர் ஆர்.பால்கி உருவாக்கிய `சுப்’ என்ற த்ரில்லர் திரைப்படத்தின் முதல் டீசர் வெளியானது. `ஹேப்பி பர்த்டே’ பாடலைப் பாடிக் கொண்டே நடிகர் துல்கர் சல்மான் செய்தித்தாள்களை வைத்து மலர்களை செய்வதாகவும், சன்னி தியோல் கதாபாத்திரத்தையும் காட்டும் இந்த டீசரில், படத்தின் தலைப்பின் கீழ் ‘Revenge of the Artist’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 80களின் பிரபலமான பாலிவுட் பாடலான `வக்த் நே கியா க்யா ஹசீம் சிதம்’ பாடல் பின்னணியில் ஒலிக்கிறது. 

சைக்காலஜிக்கல் த்ரில்லர் பாணியிலான இந்தத் திரைப்படம் பரிசோதனை முயற்சியாக உருவாக்கப்படுவதாக சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கூறியிருந்தார் நடிகர் துல்கர் சல்மான். `பால்கி சார் என்னிடம் `சுப்’ படத்தை வழங்கிய போது, நான் அதிர்ச்சியடைந்தேன். `இந்தக் கதாபாத்திரத்தில் என்னை யோசித்து பார்த்தீர்களா? நான் இதுவரை செய்திராத கதாபாத்திரம் இது. வழக்கமானது அல்ல. இது பரிசோதனை படம் என்பதால் நானும் ஆர்வமாக இருக்கிறேன். படம் வெளிவரும் போது, அனைவரும் ஆர்வமாக இருப்பார்கள்’ எனக் கூறியிருந்தார்.

தலைப்பு செய்திகள்

சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
"கருத்து சுதந்திரத்திற்கு எல்லை உண்டு" – உதயநிதி கைது விவகாரத்தில் நடிகர் விஷால் கருத்து

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
கோயிலுக்கு எந்த VIP வந்தாலும் கண்டிப்பாக எனக்கு சொல்லனும்.! அமைச்சர் ரமேஷ் போட்ட உத்தரவால் பரபரப்பு
கோயிலுக்கு எந்த VIP வந்தாலும் கண்டிப்பாக எனக்கு சொல்லனும்.! அமைச்சர் ரமேஷ் போட்ட உத்தரவால் பரபரப்பு
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
Indias Best SUV: இங்க எஸ்யுவி-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
இங்க SUV-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
Embed widget