Dulquer Salmaan : 'அப்பா தந்த அறிவுரையில் விமர்சனங்களை அணுகுகிறேன்’ துல்கர் மனம் திறந்த பேட்டி!
Dulquer Salmaan: மலையாள நடிகர் துல்கர் சல்மான் தனது தந்தை மம்மூட்டி குறித்து மனம் திறந்துள்ளார்
துல்கர் சல்மான்:
மலையாளத்தில் ‘மாஸ்’ காட்டும் நடிகர்களுள் ஒருவர் துல்கர் சல்மான். மலையாள நடிகர் மம்மூட்டியின் செல்ல மகனான இவர், வாயை மூடி பேசவும் படத்தில் முதன்முதலாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். மெது மெதுவாக நல்ல படங்களில் நடிக்க ஆரம்பித்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, அனைவருக்கும் பிடித்த நடிகராக மாறி விட்டார். கோலிவுட்டிலும் மாலிவுட்டிலும் மாறி மாறி கலக்கி வந்த அவர், சமீபத்தில் பாலிவுட்டிற்குள் நுழைந்தார். சாக்லேட் பாயாக-ஆர்மி மேனாக, இவர் நடித்து சமீபத்தில் வெளியான சீதா ராமம் திரைப்படம், விமர்சனத்திலும் வசூலிலும் சக்கை போடு போட்டது. ‘லைட் ஸ்டோரி லைன்’ உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து ‘ஃபீல் குட்’ படங்களாக நடித்து வந்த துல்கர், இப்போது புதிய பரிமானத்தில் சைக்கலாஜிக்கல் த்ரில்லர் படம் ஒன்றில் நடித்துள்ளார்.
ச்சுப்:ரிவெஞ் ஆஃப் தி ஆர்டிஸ்ட்:
துல்கரின் நடிப்பில், ச்சுப்: ரிவென்ஞ் ஆஃப் தி ஆர்டிஸ்ட் (Chup: Revenge of the Artist) படம் வெளியாகியுள்ளது. சைக்காலஜிக்கல் ரிவென்ஞ் த்ரில்லராக எடுக்கப்பட்டுள்ள இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.
View this post on Instagram
படத்தில் பாலிவுட் நடிகர் சன்னி டியோல், துல்கல் சல்மான், ஸ்ரேயா தன்வந்திரி, பூஜா பட் ஆகியோர் மெயின் ரோலில் நடித்துள்ளனர். இங்கிலீஷ் விங்க்லீஷ், பேட் மேன், டியர் ஜிந்தகி ஆகிய படங்களை இயக்கி புகழ் பெற்ற பால்கி இப்படத்தை இயக்கியுள்ளார். படத்தில் நிறைய நட்சத்திரங்கள் உள்ளதால் திரைக்கதையும் அதற்கு ஏற்றார் போல விருவிருப்பாக அமைக்கப்பட்டுள்ளது. துல்கரின் நடிப்பையும் பலர் பாராட்டி வருகின்றனர். படம் குறித்த ஒரு பேட்டியின் போது, நடிகர் துல்கர் தனது தந்தை எவ்வாறு விமர்சனங்களை எதிர் கொண்டார் என்பது குறித்து பேசியுள்ளார்.
தந்தையின் அட்வைஸ்:
'ச்சுப்' படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் துல்கர் சல்மான் கலந்து கொண்டு வந்தார். அப்படியொரு பேட்டியின் போது, நடிகர் மம்மூட்டி சினிமாவிற்கு வந்த புதிதில் எவ்வாறு விமர்சனங்களை எதிர்கொண்டார் என்பது குறித்து பகிர்ந்துகொண்டுள்ளார் துல்கர். “நான் என்னைப்பற்றி எழுதியிருக்கும் விமர்சனங்களை பார்த்து வருத்தப்படுவது உண்டு அப்போதெல்லாம் என் தந்தை கூறுவது இதுதான், ‘80’ஸ் காலங்களில், நான் சினிமாவிற்கு வந்த புதிதில் என்னைப்பற்றி கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. சிலர் எனது சினிமா வாழ்க்கையே அவ்வளவுதான் என்றெல்லாம் கூறினார்கள். இப்போது அவர்களெல்லாம் எங்கே என்று தெரியவில்லை. இப்படித்தான் விமர்சனங்களைப் போன்று விமர்சனங்களும் மாறிக்கொண்டேயிருக்கும்’ என்று மம்மூட்டி கூறியதை நினைவு கூர்ந்துள்ளார் துல்கர் சல்மான்.