பாக்யராஜ் மகள் யாரை காதலித்தார் தெரியுமா? சீக்ரெட்டை வெளியிட்ட பிரபலம்!
நடிகர் பாக்யராஜின் மகள் யாரை காதலித்தார் என்பது குறித்த உண்மையை பிரபல பத்திரிக்கையாளர் சபிதா ஜோசப் வெளிப்படுத்தியுள்ளார்.

இந்திய சினிமாவை தனது திரைக்கதையால் திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குநர் கே பாக்யராஜ். நடிகர் திலகம் சிவாஜி கணேசனை இயக்கிய பெருமை இவருக்கு உண்டு. இவ்வளவு ஏன் முறுங்கைக் காய்க்கு என்று தனி ஒரு அடையாளத்தை தனது படத்தின் மூலமாக கொடுத்தார். ஒவ்வொரு கதையும், காட்சியையும் வித்தியாசமாக கொடுத்து ரசிகர்களை வியக்க வைத்தார்.
வெள்ளிவிழா கண்ட இயக்குநர்களில் கே பாக்யராஜூம் ஒருவர். நடிகை பூர்ணிமாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவருக்கு சாந்தனு என்ற மகனும், சரண்யா என்ற மகளும் இருக்கிறார்கள். சாந்தனுவும் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். இதே போன்று சரண்யாவும் ஒரே இரு படத்தில் மட்டுமே நடித்துள்ளார். அந்த படம் தான் 'பாரிஜாதம்'.

இந்த நிலையில் தான் சரண்யா குறித்து பிரபல பத்திரிக்கையாளர் சபிதா ஜோசப் முக்கியமான தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். சமீபத்தில் சரண்யா தனக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கிறது என்று கூறியிருந்தார். ஆனால், கணவர் குறித்து எந்த தகவலும் அவர் பகிர்ந்து கொள்ளவில்லை. இந்த நிலையில் தான் மூத்த பத்திரிக்கையாளர் சபிதா அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: இன்றைய காலகட்டத்தில் காதல் பொதுவான ஒன்றாகிவிட்டது. சிறு வயதிலேயே எல்லோரும் காதலித்து காதல் திருமணமும் செய்து கொள்ளும் நிலை வந்துவிட்டது.
இயக்குநர் பாக்யராஜ் 'பாரிஜாதம்' என்ற படத்தை இயக்கி தயாரிக்கவும் செய்திருந்தார். இந்தப் படத்தில் அவரது மகள் சரண்யா தான் ஹீரோயினாக நடித்தார். ஆனால், இந்தப் படம் பெரியளவில் ரீச் கொடுக்கவில்லை. இந்தப் படத்தில் பிருத்விராஜ் தான் ஹீரோவாக நடித்து தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தினார்.

இந்தப் படத்தில் பிருத்விராஜை காதலிக்கும் காட்சிகளில் எல்லாம் சரண்யா நிஜமாகவே அவரை காதலிக்க ஆரம்பித்துவிட்டார். ஆனால், பிருத்விராஜ் காதலிக்கவில்லை. சரண்யாவின் எண்ணமெல்லாம் அவரை காதலித்து கரம் பிடிக்க வேண்டும் என்பதுதான். அப்பாவும், அம்மாவும் என்ன சொல்கிறார்களோ அதைத் தான் பிருத்விராஜ் கேட்பார். மலையாள நடிகர்கள் எப்போது மலையாள பெண்களை தான் விரும்புவார்கள். பிருத்விராஜ் தமிழில் ஒரு சில படங்களில் நடித்து வந்தார்.
பிருத்விராஜை பொறுத்த வரையில் அவர் மலையாளத்தில் நிறைய படங்களில் நடித்து முன்னணி நடிகர்களில் ஒருவராக வர வேண்டும். ஒருவேளை அவர் சரண்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டிருந்தால் மலையாள பட வாய்ப்பு வராமல் போயிருக்குமோ என்ற பயம் தான். ஒரு நடிகராக மட்டுமின்றி இயக்குநராகவும் வர வேண்டும் என்ற ஆசை கொண்டவர். அதனால்தான் அவர் சரண்யாவை காதலிக்கவில்லை.

ஆனால் சரண்யாவோ பிருத்விராஜ் மீது உயிராக இருந்தார். அவரையே காதலித்து திருமணம் செய்ய வேண்டும். அவருக்காகவே வாழ வேண்டும் என்று விரும்பினார். அவர் இல்லையென்றால் தற்கொலை செய்து கொள்ளும் நிலையில் கூட இருந்தார். அதன் பிறகு தான் வீட்டிலுள்ளவர்களின் அட்வைஸை கேட்டு கொஞ்சம் கொஞ்சமாக அதிலிருந்து வெளியில் வந்தார். அப்போதைய சூழலில் பாக்யராஜ் சினிமாவில் கொஞ்சம் பிஸியாக இருந்தார். எனினும் சரண்யாவின் காதல் பிரச்சனையில் மகளுக்கு அதாதரவாக இருந்தார் என்றும் கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.





















