Diwali Movies Box Office : இந்த ஆண்டு தீபாவளி ரேஸில் யார் வென்றது..? தீபாவளி ரிலீஸ் படங்களின் பாக்ஸ் ஆஃபீஸ்
தீபாவளியை ஒட்டி வெளியானத் திரைப்படங்களின் பாக்ஸ் ஆஃபீஸ் கலெக்ஷனைப் பார்க்கலாம்
இந்த ஆண்டு தீபாவளியை ஒட்டி தமிழ் மற்றும் பிற மொழித் திரைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன. தீபாவளியோடு மூன்று நாட்களை கடந்துள்ள இந்தப் படங்களில் சிலப் படங்களுக்கு சிறப்பான வரவேற்பும் சில படங்களுக்கு சுமாரான வரவேற்பும் கிடைத்துள்ளன. கார்த்தி நடித்த ஜப்பான், ராகவா லாரன்ஸ் எஸ் ஜே சூர்யா நடித்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். ஆகிய இரு படங்களுக்கு இடையில் கடுமையான போட்டி நிலவுகிறது
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்
இந்த ஆண்டு உண்மையான தீபாவளி என்றால் அது ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் தான். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் எஸ் ஜே சூர்யா , நிமிஷா சஜயன், இளவரசு, சஞ்சனா நடராஜன், நவீன் சந்திரா, ஷைன் டாம் சாக்கோ உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். கார்த்திக் சுப்பராஜின் ஸ்டைலில் ஒரு நல்ல கமர்ஷியல் படமாக மட்டும் இல்லாமல் சமூக பிரச்சனையை பேசும் படமாகவும் உருவாகி இருக்கிறது ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்.
4 ஆண்டுகள் கழித்து திரையரங்கத்தில் தன்னுடைய படத்தை வெளியிட்டுள்ள கார்த்திக் சுப்பராஜ் ரசிகர்களுக்கு ஒரு சிறப்பான படத்தை வழங்கியிருக்கிறார். ஜிகர்தண்டா படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்தபடியே இருக்கிறது, மொத்தம் 3 நாட்களாக...
முதல் நாளில் இந்தியாவில் மட்டுமே ரூ 2.41 கோடி வசூல் செய்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் இரண்டாவது நாளில் 4.86 கோடி வசூல் செய்தது. மூன்றாவது நாளாக 7.2 கோடி என மொத்தம் மூன்று நாட்களில் ரூ 14.47 கோடிகளை வசூல் செய்துள்ளது ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்.
ஜப்பான்
ராஜு முருகன் இயக்கியிருக்கும் ஜப்பான் திரைப்படத்தில் கார்த்தி, அனு இமானுவேல், விஜய் மில்டன், கே எஸ் ரவிகுமார், சுனில் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார்கள். ஜி வி பிரகாஷ் குமார் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். கார்த்தியின் 25-வது படமாக உருவாகி இருக்கும் ஜப்பான் திரைப்படத்திற்கு மிகப்பெரிய ஓப்பனிங் கிடைத்தது. மேலும் தீபாவளி என்றாலே கார்த்தியின் படங்களின் மேல் ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பும் இருந்து வந்திருக்கிறது. ஜப்பான் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்த விமர்சனங்கள் படத்தின் வசூலையும் பாதித்துள்ளது.
முதல் நாளில் மட்டுமே 4.15 கோடிகளை வசூல் செய்த ஜப்பான் திரைப்படம் இரண்டாவது நாளாக ரூ 2.85 கோடி வசூல் செய்தது. தொடர்ந்து மூன்றாவது நாளாக ரூ 4 கோடி வசூல் செய்து மூன்று நாட்களில் மொத்தம் 11 கோடிகள் வசூல் செய்துள்ளது ஜப்பான் திரைப்படம்.