மேலும் அறிய

தமிழ் சினிமா மேதைகளைக் கொண்டாட வேண்டும்: இயக்குநர் வசந்த பாலன் பேச்சு!

புதுமுகங்கள் ஜீவா, ஹரிஷா, பிரபு சாஸ்தா, இந்திரா மற்றும் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும்  'ட்ரீம் கேர்ள்' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது

ட்ரீம் கேர்ள்

'ட்ரீம் கேர்ள்'படத்தின் முன்னோட்டம் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் இயக்கிய 'மீரா' படத்தின்  கதாசிரியரும் 'அழியாத கோலங்கள் 2' படத்தின் இயக்குநருமான எம் .ஆர் .பாரதி இயக்கத்தில் புதுமுகங்கள் ஜீவா, ஹரிஷா, பிரபு சாஸ்தா, இந்திரா மற்றும் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம்  'ட்ரீம் கேர்ள்' . இப்படத்திற்கு சாலமன் போஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார் .இளமாறன் இசையமைத்துள்ளார்.  வசனம் ஹேமந்த் செல்வராஜ். கலை இயக்கம் கலை. படத்தொகுப்பு .கே.பி. அஹமத் .சாருலதா பிலிம்ஸ் தயாரித்துள்ளது.பாடல்களை சரிகம வெளியிட்டுள்ளது. இப்படத்தின் முன்னோட்டம் மற்றும் பாடல்களைப் பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் வெளியிட்டார் .விழாவுக்கு வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் பெற்றுக் கொண்டனர்.விழாவில் ஏராளமான இயக்குநர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் கலந்து கொண்டனர்.

விழாவில் படத்தின் ஒளிப்பதிவாளர் சாலமன் போஸ் பேசும்போது,

 "முதலில் வாய்ப்பு கொடுத்த எம். ஆர். பாரதி அவர்களுக்கு நன்றி.நான் இயக்குநர் எம் .ஆர் . பாரதியைச் சந்தித்து படம் பற்றிப் பேசிக் கொண்டிருந்தபோது  அவர் சென்னையில்   எடுக்கலாமென்றார். நான்தான் ஊட்டியில் எடுக்கலாம் என்று கூறினேன். வைடுஷாட், லாண்ட்ஸ்கேப் எடுத்துக் கொண்டு வா, இருவர் நடப்பது மாதிரி போனிலேயே எடுத்துக் கொண்டு வா என்றார். அடுத்த நாளே எடுத்து அனுப்பினேன். அதை அவர் பார்த்துவிட்டு அவர் ஊட்டியில் தான் நாம் படப்பிடிப்பு நடத்துகிறோம் என்றார்.ஊட்டியின் காலநிலையும் வண்ணங்களும் மிகவும் சிறப்பாக இருந்தன.ஒரு சிறிய குழுவாகச் சென்று சிறப்பாகச் எடுத்து முடித்திருக்கிறோம்" என்றார்.

படத்தின் நாயகன் ஜீவா பேசும்போது,

" இந்தப் படத்தில் நடித்தது மறக்க முடியாத அனுபவம். உடன் நடித்தவர்களுக்கு நன்றி. இயக்குநர் மிகவும் அன்பானவர்,அவர் ஒரு குழந்தையைப் போன்றவர். எப்போதும் நேர் நிலையாக சிந்திப்பவர். அனைவருக்கும் நம்பிக்கை அளிப்பவர். இந்தப் படம் வெற்றி பெற வாழ்த்துங்கள்'' என்றார்.

படத்தில் நடித்துள்ள பிரபு சாஸ்தா பேசும் போது,

" இந்தப் படத்தில் நான் அரவிந்த் என்ற ஒரு பாத்திரத்தில் நடித்திருக்கிறேன்.  இயக்குநர் மனதில் ஒரு உலகம் இருந்தது.  அந்த உலகத்தில் உள்ள கதாபாத்திரத்திற்கு என்னை தேர்ந்தெடுத்ததற்கு நன்றி. அவர் மிகவும் அன்பானவர் .அதிகம் பேச மாட்டார் , நேர்நிலை எண்ணம் கொண்டவர்.
ஒளிப்பதிவாளர் சாலமன் போஸ் ஒளிப்பதிவில் காதல் மொழி இருக்கிறது.அவர் ஒரு நிறத்தைத் தேர்ந்தெடுத்து அதில் நம்மை நிற்க வைத்தால் அது மிகவும் சிறப்பாக இருக்கும். 
மணிவண்ணன் சார் போல வசனங்களை ஹேமந்த் சிறப்பாக எழுதியிருக்கிறார்.படத்தில் என்னுடன் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி.பார்ப்பதற்கு எளிதாகத் தோன்றலாம் .ஆனால்  மிகவும் கடினமான இடங்களில் சிரமப்பட்டு  படப்பிடிப்பு நடத்தி இருக்கிறோம்" என்றார்.

படத்தின் நாயகி ஹரிஷா பேசும்போது ,

" இங்கே பெரிய பெரிய ஜாம்பவான்கள் வந்திருக்கிறார்கள்.அவர்கள் அமர்ந்திருக்கும் இப்படிப்பட்ட மேடையைப் பகிர்ந்து கொள்வது மகிழ்ச்சியாக இருக்கிறது.வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி.இயக்குநர் பாரதி சார் நடிப்பவர்களைத் தேர்வு செய்த போது என்னை அழைத்தார்.பார்த்துவிட்டு நீ தான் என் ட்ரீம் கேர்ள் என்றார். எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. 25 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. மிகவும் மகிழ்ச்சிகரமான அனுபவமாக இருந்தது .நாங்கள் அழகாக இருப்பதே இந்தப் படத்தைப் பார்த்த பிறகுதான் தெரிந்தது.
படம் வெற்றி பெற வாழ்த்துங்கள்" என்றார்.

ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ள கனவு இருக்கும் . அந்தக் கனவு தான் இந்தப் படம்.

இங்கே வந்திருக்கும் பி.சி ஸ்ரீராம் அவர்களை நான் பிலிமாலயா பத்திரிகைக்காக பேட்டி எடுக்க வேண்டும் என்று அவரிடம் எப்படி பேசுவது என்ன கேள்வி கேட்பது என்று எனக்குக் தெரியவில்லை .பி சி ஸ்ரீராம்  உருவான கதை எப்படி என்று கேட்டேன்.அப்போது அவரது சித்தி பிரபல மொழிபெயர்ப்பாளர் எழுத்தாளர் சரஸ்வதி ராம்நாத் என்றார். அவரைச் சந்திக்க வரும் பல எழுத்தாளர்களை இவர் பார்த்து இலக்கியம் பற்றி ஆர்வம் வந்திருக்கிறது.ஒரு நாள் ஒரு கூட்டத்துக்கு அழைத்துச் சென்றாராம் .அது ஜே. கிருஷ்ணமூர்த்தி பேசிய கூட்டம் . அப்போது அவர் 'உன் கண்களால் உலகைப் பார் 'என்று கூறியதை மனதில் எடுத்துக்கொண்டு அப்படி உலகம் பார்க்கும் கண்களால் பார்க்காமல் உன் கண்களால் உலகத்தை பார் என்று அவர் பார்க்க ஆரம்பித்தார். அந்தக் காட்சிகள் எல்லாம் நமக்கு வேறு விதமாக அழகாகத் தெரிந்தன .
இந்தப் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்" என்றார்.

இயக்குநர் கதிர் பேசும்போது,

"நான் கல்லூரியில் படித்த போதே எம்.ஆர். பாரதி எனக்கு பழக்கம் .அப்போது பல படங்களுக்கு நான் டிசைனராக பணியாற்றி இருக்கிறேன். எல்லாமே சின்ன சின்ன படங்கள். 'வேலியில்லா மாமரம்' என்ற படத்தில் அவர் உதவி இயக்குநராக பணிபுரிந்தார்.அப்போதிலிருந்து எனக்கு அவர் பழக்கம்.
 அவர் நல்ல புத்தக வாசிப்பு கொண்டவர்.
எனது புத்தக அறிவுக்குக் காரணம் அவர் தான். அவர் வீட்டில் ஏராளமான புத்தகங்கள் இருக்கும். அவர் வீட்டுக்குச் சென்றால் ரஷ்ய நாவல்கள் நிறைய படிப்போம். அவற்றை மீண்டும் மீண்டும் அங்கே போய் படிப்போம்.
எழுத்து என்பது சினிமாவுக்கு மிகவும் அத்தியாவசியம்.  சினிமாவுக்கே எழுத்துதான்  அஸ்திவாரம் அது இல்லாததால் தமிழ் சினிமா இன்று சீர்கெட்டுப் போயிருக்கிறது.யாரும் படிப்பதில்லை .ஆனால் புத்தகம் எழுத்தை ஆயுதமாகக் கொண்டு பாரதி இங்கே இயக்குநராக இருக்கிறார்.அவருக்கு எனது வாழ்த்துக்கள்.
படம் கவிதை போல வந்திருக்கிறது. வெற்றி பெற வாழ்த்துகிறேன்" 
என்றார்.

.திரைப்படக் கல்லூரி முதல்வரும் ஓவியருமான கலைமாமணி ட்ராட்ஸ்கி மருது பேசும்போது ,

"சென்னை வந்த காலத்தில் இருந்து  பாரதியை எனக்குத் தெரியும் .
அப்போது பழக்கமான பல நண்பர்கள் இங்கே வந்திருக்கிறார்கள்.
பாரதி என் நல்ல நண்பர். இந்தப் படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்" என்றார்.

இயக்குநர் வசந்தபாலன் பேசும்போது,

 "மீரா' படத்தில் நான் உதவி எடிட்டராக பணியாற்றினேன். அப்போது எடிட்டர் லெனின் - விஜயனைப் பார்க்க அடிக்கடி பிசி ஸ்ரீராம் சார் அங்கே வருவார். அவர் ஒளிப்பதிவில் எடுக்கப்பட்ட படத்தின் காட்சிகளைப் பார்த்து எனக்கு வியப்பாக இருக்கும்.

இசைஞானி இளையராஜாவுக்கு சற்றும் குறைவில்லாத பெருமைக்குரியவர் ஒளிப்பதிவு  மேதை பி. சி.. ஸ்ரீராம் அவர்கள் .

இவர் படத்தில் இவரது ஒளிப்பதிவில்தான் நாம் அதுவரை பார்த்த சாதாரண வீடு கூட அழகாகத் தெரிந்தது. வீடு இவ்வளவு அழகாக இருக்கிறது என்று இவரது 'மௌன ராகம் 'படத்தைப் பார்த்து தான் தெரிந்து கொண்டேன் .ஒரு காட்டன் புடவையைக் கூட அழகாகக் காட்ட முடியுமா என்று நான் வியந்தேன்.
'திருடா திருடா 'படத்தின்  'தீ தீதித்திக்கும் தீ  ' பாடலில் நாம் இதுவரை பார்த்த எழும்பூர் மியூசியத்தைக் கூட அவ்வளவு அழகாக காட்டியிருப்பார் .
கமலா தியேட்டரில் அந்தப் படத்தை பார்த்தேன்.அந்தப் பாடலில் விளக்குகள் அணைந்து எரியும்போது
  அந்த அவரது ஒளி ஜாலத்தைப் பார்த்து திரையரங்க ரசிகர்கள் கைதட்டினார்கள். மீண்டும் பார்த்தபோது அதே காட்சியில் கைதட்டினார்கள்.

வசனங்கள் ,நடிப்பு எல்லாவற்றையும் கடந்து ஒளிப்பதிவுக்குக் கைத்தட்டல் பெற்றவர் இந்த ஒளிப்பதிவு மேதை.அப்படி தனது ஒளிப்பதிவின் மூலம் சிறப்பு சேர்த்தவர் இங்கே வந்திருக்கிறார் .இன்று இந்தியாவின் தலைசிறந்து விளங்கும் பல ஒளிப்பதிவாளர்கள் அவர்  மூலம் வந்தவர்கள் .

அவர் ஒளி அமைப்பின் மூலம் கவிதை எழுதியவர் .அதன் மூலம் ஒரு மாயாஜாலம் நிகழ்த்தியவர் .ஒளியாலும் கதை சொல்ல முடியும் என்று நிரூபித்தவர் .அவரது 'குருதிப்புனல்' ,'அக்னி' நட்சத்திரம் போன்ற படங்கள் எந்த ஏஐ-யும் இல்லாத அந்தக் காலத்திலேயே 35 எம் எம் பிலிமில் அசத்தியவர் .

'அலைபாயுதே', 'ஓகே கண்மணி', 'சீனி கம் ' வரை அவர் தனது மேதைமையான ஒளிப்பதிவைக் காட்டியவர்.பெரிய மாயாஜாலம் நிகழ்த்தியவர். இவர் தமிழ் சினிமாவால் கொண்டாடப்பட வேண்டிய ஒருவர்.சினிமா மேதைகளைக் கொண்டாட வேண்டும். விரைவில் இவருக்கான விழா எடுக்க வேண்டும் என்றும் இந்த மேதை கொண்டாடப்பட வேண்டும் என்றும் இதன் மூலமாக வேண்டுகோள் விடுக்கிறேன். 

கவனிப்பாரற்று கிடந்த எம்ஜிஆர் திரைப்படக் கல்லூரிக்கு டிராட்ஸ்கி மருது அவர்கள்  பொறுப்பேற்ற போது நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். கல்லூரிக்காக 10 கோடி ரூபாய் ஒதுக்கி இருக்கும் செய்தியை அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். இனி திரைப்படக் கல்லூரிக்கு ஒளிமயமான எதிர்காலம் இருக்கும் என்று நம்புகிறேன்.

பாரதி இயக்கியிருக்கும் இந்தப் படம் வெற்றி பெற வேண்டும்"
என்று கூறி படக் குழுவினரை வாழ்த்தினார்.  

இயக்குநர் எம் .ஆர் .பாரதி பேசும் போது,

"நான் சினிமாவுக்கான உதவி இயக்குநர் வாய்ப்பு தேடிய போது சரியான படம் அமைய வில்லை. சின்ன சின்ன படங்களில் நான் உதவி இயக்குநராக வேலை பார்த்தேன்.'நெஞ்சமெல்லாம் நீயே' என்ற படத்தில் பணியாற்றினேன். அதுதான் உருப்படியான ஒரு படம் .

'மீரா' படத்திற்கு பிறகு பல ஆண்டுகள் கழித்து 12 நாளில்  'அழியாத கோலங்கள் 2 'படத்தை எடுத்தோம். அந்த பட முயற்சியில் இறங்கிய போது அர்ச்சனா தயாரிக்க முன் வந்தார். நான் பொருளாதார சிக்கலில் மாட்டிக் கொள்ளக் கூடாது என்று அர்ச்சனா தயாரிக்க முன் வந்தார். அப்போது ரேவதியை இயக்குநராக ஆக்கலாமே படத்துக்கு ஒரு மதிப்பு கிடைக்கும் என்றேன். உன் கனவு இது.நீதான் இயக்க வேண்டும் என்று கூறினார். அப்படி அந்தப் படத்தை 12  நாட்களில்  எடுத்தோம்.யூட்யூபில் லட்சக்கணக்கான பேர் பார்த்துள்ளார்கள்.

 இந்த 'ட்ரீம் கேர்ள்' படத்திற்கு நான்கு காட்சிகள்  எடுப்பது போல்  திட்டத்தோடு சென்றோம். ஆனால் முழுப் படத்தையும் முடித்து விட்டு வந்திருக்கிறோம் .16 நாட்களில் பெரும்பாலான காட்சிகளை எடுத்து விட்டோம் .

சினிமா என்பது கஷ்டம் கிடையாது .தேவையில்லாமல் சிரமப்படக்கூடாது.

சரியாக வாய்ப்புகள் அமையவில்லை என்றால் அதிலிருந்து ஒரு பிரேக் கொடுத்துவிட்டு மீண்டும் செல்லலாம். சற்று விலகி இருந்து பார்த்தால் நமக்கு ஒரு திறப்பு கிடைக்கும்.

 நான் சினிமாவில் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று சிரமப்பட்டதில்லை .சினிமா நம்ப வேண்டும் நேசிக்க வேண்டும்.

சிறிய பட்ஜெட்டில் சிக்கனமாகப் படம் எடுக்கக் தெரிந்தால் நம்மை அது காப்பாற்றி விடும். சிக்கனமாக எடுத்தால் இழப்பும் குறைவாக இருக்கும்.

 முதலில் நான் 'மீரா' படத்திற்கு கதை வசனம் எழுதினேன். பி சி சார் இயக்கினார். அதன் பிறகு சினிமாவை நான் நேசித்ததால் அதற்குள்ளேயே எப்போதும் இருப்பது போல் பார்த்துக் கொண்டேன்.

 ராஜ் டிவிக்காக நிறைய விளம்பரங்கள், விளம்பர படங்கள் தயாரித்தேன். கல்லூரிகளுக்கு புத்தகம் போட்டேன். முதலில் இக்னோ எனப்படும் இந்திராகாந்தி திறந்தவெளி பல்கலைக்கழகத்திற்காக ஒரு சிறு புத்தகம் போட்டோம். இந்தியா முழுக்க ஒரே பாடத்திட்டம் இருந்ததால் அந்தச் சிறிய புத்தகம் பெரிய வெற்றி பெற்றது. அதற்குப் பிறகு அந்த துறையில் நுழைந்து வெற்றிகரமாக 26 ஆண்டுகளாக சாருலதா பப்ளிகேஷன் நடத்தி வருகிறேன்.

 எனக்குள் இருந்த சினிமா கனவை அழிக்காமல் இருந்ததால் அதற்குப் பிறகும் 'அழியாத கோலங்கள் 2 'எடுக்க முடிந்தது.இந்தப் படம் வெற்றி பெற ஒத்துழைப்பு கொடுங்கள்" என்றார்.



மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN BJP : ‘மதில் மேல் பூனையாக கட்சிகள்’ கூட்டணியை பெரிதாக்க முடியாமல் திணறும் பாஜக..!
‘மதில் மேல் பூனையாக கட்சிகள்’ கூட்டணியை பெரிதாக்க திணறும் பாஜக..!
’’முதல்வருக்கு கூச்சமில்லையா? வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசு’’- ஆசிரியர்கள் கைதுக்கு அண்ணாமலை கண்டனம்!
’’முதல்வருக்கு கூச்சமில்லையா? வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசு’’- ஆசிரியர்கள் கைதுக்கு அண்ணாமலை கண்டனம்!
TN MRB Recruitment 2025: டிப்ளமோ போதும்; மருத்துவப் பணிகள் தேர்வு வாரியத்தில் பணி- ரூ.1.3 லட்சம் ஊதியம்- விண்ணப்பிக்க அழைப்பு!
TN MRB Recruitment 2025: டிப்ளமோ போதும்; மருத்துவப் பணிகள் தேர்வு வாரியத்தில் பணி- ரூ.1.3 லட்சம் ஊதியம்- விண்ணப்பிக்க அழைப்பு!
Jana Nayagan Audio Launch: டைம் நோட் பண்ணுங்க.. ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா நேரம் இதுதான்!
Jana Nayagan Audio Launch: டைம் நோட் பண்ணுங்க.. ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா நேரம் இதுதான்!
ABP Premium

வீடியோ

மூர்த்தியுடன் ரகசிய DEAL? தவெக மா.செ மீது புகார்! சொந்த கட்சியினரே போர்க்கொடி
Sleeping Man falls from 10th Floor|10 வது மாடியில் இருந்துதவறி விழுந்த முதியவர் | Surat
DMDK DMK Alliance | திமுக கொடுத்த OFFER!ரூட்டை மாற்றும் பிரேமலதா! தேமுதிக கூட்டணி ப்ளான்
TVK Ajitha ICU| ’’நான் திமுக கைக்கூலியா?’’ICU-வில் தவெக அஜிதா! தவெகவில் நடப்பது என்ன?
Priyanka Gandhi to lead Congress | ராகுல் தலைமைக்கு ENDCARD?பவருக்கு வரும் பிரியங்கா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN BJP : ‘மதில் மேல் பூனையாக கட்சிகள்’ கூட்டணியை பெரிதாக்க முடியாமல் திணறும் பாஜக..!
‘மதில் மேல் பூனையாக கட்சிகள்’ கூட்டணியை பெரிதாக்க திணறும் பாஜக..!
’’முதல்வருக்கு கூச்சமில்லையா? வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசு’’- ஆசிரியர்கள் கைதுக்கு அண்ணாமலை கண்டனம்!
’’முதல்வருக்கு கூச்சமில்லையா? வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசு’’- ஆசிரியர்கள் கைதுக்கு அண்ணாமலை கண்டனம்!
TN MRB Recruitment 2025: டிப்ளமோ போதும்; மருத்துவப் பணிகள் தேர்வு வாரியத்தில் பணி- ரூ.1.3 லட்சம் ஊதியம்- விண்ணப்பிக்க அழைப்பு!
TN MRB Recruitment 2025: டிப்ளமோ போதும்; மருத்துவப் பணிகள் தேர்வு வாரியத்தில் பணி- ரூ.1.3 லட்சம் ஊதியம்- விண்ணப்பிக்க அழைப்பு!
Jana Nayagan Audio Launch: டைம் நோட் பண்ணுங்க.. ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா நேரம் இதுதான்!
Jana Nayagan Audio Launch: டைம் நோட் பண்ணுங்க.. ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா நேரம் இதுதான்!
Teachers Protest: முற்றும் போராட்டங்கள்; முற்றுகையிட முயன்ற இடைநிலை ஆசிரியர்கள் கைது- சென்னையில் பரபரப்பு!
Teachers Protest: முற்றும் போராட்டங்கள்; முற்றுகையிட முயன்ற இடைநிலை ஆசிரியர்கள் கைது- சென்னையில் பரபரப்பு!
GK Mani removed from PMK: பாமகவில் இருந்து ஜி.கே.மணி நீக்கம்.! ராமதாசுக்கு காலையிலேயே ஷாக் கொடுத்த அன்புமணி
பாமகவில் இருந்து ஜி.கே.மணி நீக்கம்.! ராமதாசுக்கு காலையிலேயே ஷாக் கொடுத்த அன்புமணி
Rohit Kohli: சொதப்பிய ரோகித்.. அசத்திய கோலி - பிசிசிஐ நிர்வாகத்தை வறுத்தெடுக்கும் கிரிக்கெட் ரசிகர்கள்
Rohit Kohli: சொதப்பிய ரோகித்.. அசத்திய கோலி - பிசிசிஐ நிர்வாகத்தை வறுத்தெடுக்கும் கிரிக்கெட் ரசிகர்கள்
Renault Duster 2026: மொத்தமாக மாறிய டிசைன், ஸ்டைலிஷ் லுக், ப்ரீமியம் அம்சங்கள் - ரெனால்ட் டஸ்டர் டீசர் - ஜன.26 லாஞ்ச்
Renault Duster 2026: மொத்தமாக மாறிய டிசைன், ஸ்டைலிஷ் லுக், ப்ரீமியம் அம்சங்கள் - ரெனால்ட் டஸ்டர் டீசர் - ஜன.26 லாஞ்ச்
Embed widget