மேலும் அறிய

Vignesh Shivan: விக்னேஷ் சிவனின் அதிகாரத் திமிர்.. எல்.ஐ.சி தலைப்பு என்னுடையது.. பிரபல இயக்குநர் குற்றச்சாட்டு!

LIC தலைப்பு தன்னுடையது என்றும், இதை மீறி விக்னேஷ் சிவன் பயன்படுத்தினால் அவர் மீது வழக்கு தொடுப்பேன் என்றும் இசையமைப்பாளரும் இயக்குநருமான எஸ்.எஸ்.குமரன் தெரிவித்துள்ளார்.

பூ, களவாணி ஆகிய படங்களுக்கு இசையமைத்தவரும், தேநீர் விடுதி, கேரள நாட்டிளம் பெண்களுடனே ஆகிய படங்களை இயக்கியவருமான எஸ்.எஸ்.குமரன் இயக்குநர் விக்னேஷ் சிவனின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

‘சட்டத்துக்கு புறம்பானது’

“விக்னேஷ் சிவன் இயக்கும் புதிய படத்திற்கு LIC என்று பெயரிட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியும் மன உளைச்சலும் அடைந்தேன். காரணம் LIC என்கிற பெயரை 2015ஆம் ஆண்டே என் தயாரிப்பு நிறுவனமான சுமா பிச்சர்ஸின் வாயிலாக பதிவு செய்து வைத்திருக்கிறேன்.

இதை அறிந்த விக்னேஷ் சிவன் தன்னுடைய புதிய படத்திற்கு அந்தப் பெயரை தரக்கோரி தனது மேலாளர் மயில்வாகனன் மூலம் என்னை அணுகினார். ஆனால் LIC என்கிற தலைப்பு நான் இயக்கும் படத்திற்கு மிகச்சரியாக பொருந்துவதாலும், கதையின் பலமே அந்த தலைப்பை ஒட்டி அமைந்திருப்பதாலும் நான் மறுத்துவிட்டேன்.

‘சிறிய தயாரிப்பாளர்களை நசுக்கும் செயல்’

ஆக இந்தத் தலைப்பை நான் முறைப்படி பதிவு செய்து வைத்திருக்கிறேன் என்பதை விக்னேஷ் சிவன் நன்றாக அறிவார். அப்படி இருந்தும் இந்த தலைப்பை அவர் தனது படத்திற்கு வைக்கிறார் என்று சொன்னால், அது சட்டத்திற்கு புறம்பானது மட்டுமல்ல எளிய, சிறிய தயாரிப்பாளர்களை நசுக்கும் செயலாகும். இச்செயல் முழுக்க முழுக்க அதிகாரத் தன்மை கொண்டது. அவரின் இந்த செயலுக்கு நியாயம் கேட்டு ஊடகத்திற்கு முன் நிற்கிறேன்.

LIC என்கிற தலைப்பு என்னிடம் மட்டுமே இருப்பதால் அதை விக்னேஷ் சிவன் தன் படத்தில் எந்த விதத்திலும் பயன்படுத்தக்கூடாது  என்று இதன் மூலம் தெரியப்படுத்த விரும்புகிறேன். இனியும் இச்செயலை விக்னேஷ் சிவன் தொடர்வார் என்றால் சட்டப்படி அவர் மீது நடவடிக்கை எடுப்பேன் என்பதையும் இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்” என எஸ்.எஸ். குமரன் தெரிவித்துள்ளார்.

விக்னேஷ் சிவன், நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் மற்றும் செவன் கிரீன் ஸ்டுடியோஸ் தயாரிக்க, பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி நடிப்பில் தயாராகும் திரைப்படம் எல்.ஐ.சி.

விக்னேஷ் சிவன் இப்படத்தை இயக்கும் நிலையில், யோகிபாபு, எஸ்ஜே சூர்யா உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அனிருத் இப்படத்துக்கு இசையமைக்கிறார். இப்படத்தின் பூஜை குறித்த படங்கள் நேற்று தான் வெளியாகின. படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் நேற்று இப்படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இசையமைப்பாளரும் இயக்குநருமான எஸ்.எஸ்.குமரன் விக்னேஷ் சிவன் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

மேலும் படிக்க: Animal: ஹிட்லரின் சின்னத்தை பெருமையாக நெஞ்சில் குத்துவதா.. அனிமல் படத்தை வெளுத்த 'தளபதி 68' ஒளிப்பதிவாளர்!

Adhik Ravichandran - Aishwarya marriage : விஷால் முதல் லெஜெண்ட் சரவணன் வரை... ஆதிக் ரவிச்சந்திரன் - ஐஸ்வர்யா திருமணத்திற்கு வந்த பிரபலங்கள்...

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Rains: ஒரே கஷ்டமப்பா! சென்னையில் காலையிலே கொட்டித் தீர்க்கும் கனமழை!
Chennai Rains: ஒரே கஷ்டமப்பா! சென்னையில் காலையிலே கொட்டித் தீர்க்கும் கனமழை!
13 பேர் உயிரிழப்பு - விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படைதான் - வெளியான பரபரப்பு தகவல்
13 பேர் உயிரிழப்பு - விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படைதான் - வெளியான பரபரப்பு தகவல்
TVK Vijay:
TVK Vijay: "ஃப்ரேம் பாருங்க ஜீ" கீர்த்தி சுரேஷை வாழ்த்திய தளபதி விஜய்! ட்ரெண்டாகும் போட்டோ!
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "கிறிஸ்தவன், முஸ்லீம், இந்து எல்லாமே நான்தான்" துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்Aadhav Arjuna slams Amit Shah : ‘’அம்பேத்கர் இல்லனா நீங்க இல்லபாத்து பேசுங்க அமித் ஷா’’-ஆதவ் அர்ஜுனா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rains: ஒரே கஷ்டமப்பா! சென்னையில் காலையிலே கொட்டித் தீர்க்கும் கனமழை!
Chennai Rains: ஒரே கஷ்டமப்பா! சென்னையில் காலையிலே கொட்டித் தீர்க்கும் கனமழை!
13 பேர் உயிரிழப்பு - விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படைதான் - வெளியான பரபரப்பு தகவல்
13 பேர் உயிரிழப்பு - விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படைதான் - வெளியான பரபரப்பு தகவல்
TVK Vijay:
TVK Vijay: "ஃப்ரேம் பாருங்க ஜீ" கீர்த்தி சுரேஷை வாழ்த்திய தளபதி விஜய்! ட்ரெண்டாகும் போட்டோ!
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "கிறிஸ்தவன், முஸ்லீம், இந்து எல்லாமே நான்தான்" துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
தந்தை உயிரிழப்பு - போலீசுக்கு வந்த ரகசிய தகவல் - மகன் கைது! என்ன நடந்தது?
தந்தை உயிரிழப்பு - போலீசுக்கு வந்த ரகசிய தகவல் - மகன் கைது! என்ன நடந்தது?
Breaking News LIVE: ஆந்திரா நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு! அடுத்த 6 நாட்களுக்கு மழை தொடரும்
Breaking News LIVE: ஆந்திரா நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு! அடுத்த 6 நாட்களுக்கு மழை தொடரும்
Crime: தம்பியை கடப்பாறையால் குத்தி கொலை செய்த அண்ணனும் அண்ணியும் கைது! ஏன் எதற்கு?
Crime: தம்பியை கடப்பாறையால் குத்தி கொலை செய்த அண்ணனும் அண்ணியும் கைது! ஏன் எதற்கு?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
Embed widget