Aishwarya Shankar: இயக்குநர் ஷங்கர் மகளுக்கு உதவி இயக்குநருடன் இரண்டாவது திருமணம்: வாழ்த்திய தங்கை அதிதி!
தனது அக்கா ஐஸ்வர்யா ஷங்கரின் திருமணத் தகவலை நடிகை அதிதி சங்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் ஷங்கரின் மூத்த மகளான ஐஷ்வர்யாவுக்கும் ஷங்கரின் உதவி இயக்குநர் தருண் கார்த்திகேயனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
ஐஸ்வர்யா ஷங்கர்
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ஷங்கருக்கு இரண்டு மகள் உள்ளார்கள். இதில் இளைய மகளான அதிதி ஷங்கர் விருமன் படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார். ஷங்கரின் மூத்த மகளாக ஐஸ்வர்யா ஷங்கருக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த ரோஹித்தை ஐஸ்வர்யா திருமணம் செய்துகொண்டார்.
இதனைத் தொடர்ந்து திருமணம் ஆன ஆறே மாதங்களில் ரோஹித் போக்சோ சட்டத்தில் சிறை சென்ற நிலையில், அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து ரோஹித்திடமிருந்து விவாகரத்துப் பெற்றார் ஐஸ்வர்யா. தற்போது ஐஸ்வர்யா ஷங்கர் மற்றும் ஷங்கரின் உதவி இயக்குநர் தருண் கார்த்திகேயனுக்கும் திருமணம் நிச்சயிக்கப் பட்டுள்ளது.
இந்தத் தகவலை நடிகை அதிதி ஷங்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். விரைவில் இவர்களின் திருமணம் குறித்த தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.