TTF Vasan: மஞ்சள் வீரன் படத்துக்கு டிடிஎஃப் வாசன் சம்பளம் இத்தனை கோடியா? - ரசிகர்கள் அதிர்ச்சி
மஞ்சள் வீரன் படம் அனைவருக்கும் போய் சேர்ந்தால் போதும் என நினைக்கவில்லை. ஆனால் படத்தை எல்லாரும் கொண்டாடும் அளவுக்கு இதில் விஷயம் இருக்கிறது.
நான் இயக்கி வரும் மஞ்சள் வீரன் படம் எல்லாரும் கொண்டாடும் அளவுக்கு இருக்கும் என அப்படத்தின் இயக்குநர் செல்அம் தெரிவித்துள்ளார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு தமிழில் வெளியான திரு.வி.க பூங்கா என்ற படத்தை இயக்கி நடித்தவர் செல்அம். இவர் தற்போது யூட்யூப் பிரபலம் டிடிஎஃப் வாசனை வைத்து மஞ்சள் வீரன் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் பூஜை விமரிசையாக நடைபெற்ற நிலையில் ஷூட்டிங் போகலாம் என நினைத்த நேரத்தில் அதிவேகமாக பைக் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய விபத்தில் டிடிஎஃப் வாசன் சிறை சென்றார். கிட்டதட்ட ஒன்றைரை மாத சிறைவாசத்துக்குப் பின் டிடிஎஃப் வாசன் ஜாமினில் வெளியே வந்தார். இப்படியான நிலையில் இந்த சம்பவத்தால் மஞ்சள் வீரன் படப்பிடிப்பு நடைபெறுவதில் சிக்கல் எழுந்தது.
இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசியுள்ள இயக்குநர் செல்அம் மஞ்சள் வீரன் படம் பற்றி பல தகவல்களை தெரிவித்திருக்கிறார். அதில், “என்னுடைய திரு.வி.க. பூங்கா படம் நல்லா இல்லை என்றால் யாருக்கும் தெரிந்திருக்காது இல்லையா?. எல்லாருக்கு அப்படம் சென்றுள்ளது. நேரம் ஒதுக்கி பார்த்திருக்கிறார்கள் என்றால் அதில் ஏதோ ஒரு விஷயம் ஈர்த்திருக்கும். அதேமாதிரி மஞ்சள் வீரன் படம் அனைவருக்கும் போய் சேர்ந்தால் போதும் என நினைக்கவில்லை. ஆனால் படத்தை எல்லாரும் கொண்டாடும் அளவுக்கு இதில் விஷயம் இருக்கிறது.
திரு.வி.க பூங்காவை அவார்டு வாங்கக்கூடிய அளவுக்கு கலைப்படமாக எடுத்தேன். இந்த படம் கமர்ஷியலா எடுக்கப்போறேன். மஞ்சள் வீரன் படத்தின் பட்ஜெட் மட்டும் ரூ.5 கோடிக்கும் மேல் வரும். அதில் டிடிஎஃப் வாசனுக்கு சம்பளம் ரூ.4 கோடி என சொல்வது பற்றி தெரியவில்லை. என்னுடைய சம்பளம் படம் வெளியான பிறகு வாங்கிக் கொள்வேன்.
நான் கல்யாணம் பண்ணிட்டு அந்த பணத்தில் தான் இயக்குநரானேன். முதலில் படத்தை முடித்து ட்ரெய்லர் வெளியிட்டு அதன்பின் தான் ரிலீஸ், ஓடிடி பிசினஸ் எல்லாம் பார்க்க வேண்டும். இந்த படத்தை தயாரிப்பதே நான் தான். ஹீரோயினை தேர்வு செய்து விட்ட நிலையில் அவரின் போர்ஷன் இன்னும் ஷூட் செய்யப்படவில்லை. அடுத்த போஸ்டரே டிடிஎஃப் வாசன் ஹீரோயினுடன் இருப்பது போன்று தான் வெளியாகும்” என இயக்குநர் செல்அம் கூறியுள்ளார்.
முன்னதாக ஒரு பேட்டியில் பேசிய இவர், “மஞ்சள் வீரன் படம் 100 நாட்கள் திரையரங்கில் ஓடும் எனவும், படத்துக்கு ஆஸ்கர் விருது கொடுத்தாலும் வாங்க மாட்டேன்” என்றும் தெரிவித்திருந்தார். மேலும் டிடிஎஃப் வாசன் உண்மையில் மாவீரன். இப்படத்துக்கு தேசிய விருது கொடுத்தால் வாங்கி கொள்வேன் எனவும் இயக்குநர் செல்அம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Pa. Ranjith: “மஞ்சும்மல் பாய்ஸ் போல தான் ஜே.பேபி, என் அம்மா என்ன பாராட்டுனாங்க” - பா.ரஞ்சித் பேச்சு