மேலும் அறிய

Pa. Ranjith: “மஞ்சும்மல் பாய்ஸ் போல தான் ஜே.பேபி, என் அம்மா என்ன பாராட்டுனாங்க” - பா.ரஞ்சித் பேச்சு

Pa. Ranjith: மனித உறவுகளை அதன் எமோஷன் அதன் மதிப்பை பற்றி பேசும் ஒரு சிம்பிளான படம் தான் ஜே பேபி.

'அட்டகத்தி' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் பா. ரஞ்சித். நீலம் புரொடக்சன்ஸ் பேனரின் கீழ் ஏராளமான நல்ல படங்களைத் தயாரித்து வருகிறார். அந்த வகையில் ஊர்வசி, அட்டகத்தி தினேஷ், லொள்ளு சபா மாறன் உள்ளிட்டோரின் நடிப்பில் அறிமுக இயக்குநர் சுரேஷ் மாரி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஜே. பேபி'. மகளிர் தினத்தை முன்னிட்டு மார்ச் 8ம் தேதி வெளியாக உள்ள நிலையில் அதன் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

Pa. Ranjith: “மஞ்சும்மல் பாய்ஸ் போல தான் ஜே.பேபி,  என் அம்மா என்ன பாராட்டுனாங்க” - பா.ரஞ்சித் பேச்சு

இந்த விழாவில் கலந்து கொண்ட இயக்குநர் பா.ரஞ்சித் பேசுகையில் "நான்  திரைத்துறையில் நுழையும்போது மிகவும் ஒரு கோபக்காரனாக தான் நுழைந்தேன். இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளேன். அவர் எப்படி படங்களை மிகவும் ஜாலியாக எடுத்து அதை ரசிகர்கள் விரும்பும் வகையில் காட்சிப்படுத்த முடிகிறது என்பதைப் பார்த்து இப்படியும் நாம் சினிமாவை அணுகலாம் என என்னுடைய பார்வையை மாற்றிக்கொண்டேன். 

சுரேஷ் மாரி அண்ணனோட இந்தத் திரைப்படம் மனித உறவுகளை அதன் எமோஷன் அதன் மதிப்பை பற்றி பேசும் ஒரு சிம்பிளான படமாக இருக்கும் . இந்தப் படம் எனக்குள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆக்ஷன், திரில்லர் போன்ற படங்கள் தான் இன்றைய காலகட்டத்தில் அதிகமாக வெளியாகின்றன. 

இப்படியான சூழலில் 'மஞ்சும்மல் பாய்ஸ்'. 'ப்ளூ ஸ்டார்' உள்ளிட்ட தரமான படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. சமீபத்தில் வெளியான இது போன்ற படங்களை மக்கள் கொண்டாடுகிறார்கள். அதற்கு காரணம் அதன் எளிமையான திரைக்கதையும் இயல்பான தன்மையும் தான். அதே போல மக்கள் இது போன்ற படங்களை ரசிக்க மாட்டார்கள் எனக் குறிப்பிட்டு ஸ்டீரியோ டைப் உள்ளே அடக்கவே முடியாது. அப்படங்களின் வெற்றிக்கும் அது தான் காரணம். அந்தப் படத்தை போல ஒரு இயல்பான படம் தான் ஜே. பேபி படமும். எங்கம்மா இந்தப் படத்தை பார்த்துவிட்டு நீ பண்ண படத்திலேயே இது தான் நல்ல படம்ன்னு பாராட்டுனாங்க. 

Pa. Ranjith: “மஞ்சும்மல் பாய்ஸ் போல தான் ஜே.பேபி,  என் அம்மா என்ன பாராட்டுனாங்க” - பா.ரஞ்சித் பேச்சு

இது போன்ற படங்களை மக்கள் விரும்பமாட்டாங்கன்னு ஓடிடி தளங்கள் அவங்களாக முடிவு எடுத்துக்குறதால இந்தப் படங்களை வாங்க தயக்கம் காட்டுறாங்க. அதனால் ஜே.பேபி போன்ற சிம்பிளான படங்களை முன் முடிவுடன் அணுகுவதால் பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. ஆனால் நிச்சயம் இந்தத் தடைகளை எல்லாம் தாண்டி இப்படம் நிச்சயம் முன்னேறும். இப்படமும் மக்களின் ரசனைக்கு ஏற்ற மக்கள் விரும்பும் ஒரு படமாக நிச்சயம் அமையும் என நான் நம்புகிறேன்" எனப் பேசி உள்ளார் இயக்குநர் பா. ரஞ்சித்.       

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
Embed widget