Blue sattai maran: மாமனிதன் மெகா சீரியலா? ப்ளூ சட்டை மாறனின் ரிவியூக்கு நச் பதில் கொடுத்த சீனுராமசாமி..!
மாமனிதன் படத்தை விமர்சனம் செய்த ப்ளூ சட்டை மாறனுக்கு இயக்குநர் சீனு ராமி தனது ட்விட்டர் வாயிலாக பதிலடி கொடுத்துள்ளார்.

மாமனிதன் படத்தை விமர்சனம் செய்த ப்ளூ சட்டை மாறனுக்கு இயக்குநர் சீனு ராமி தனது ட்விட்டர் வாயிலாக பதிலடி கொடுத்துள்ளார்.
விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குநர் சீனுராமசாமி இயக்கத்தில் அண்மையில் வெளியான திரைப்படம் ‘மாமனிதன்’. இளையராஜா, யுவன்ஷங்கர்ராஜா முதன்முறையாக இணைந்து இசையமைத்துள்ள இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த நிலையில் இந்தப்படத்தை விமர்சனம் செய்த ப்ளூ சட்டை மாறன், “ நகை வாங்க போற காயத்ரியின் அப்பா, தனியாகவா செல்வார் என்று கேள்வி எழுப்பியதோடு மாமனிதன் படத்தை பெரிய திரையில் பார்க்க கூடிய மெகா சீரியல் என்று விமர்சனம் செய்திருந்தார்.
View this post on Instagram
இந்த நிலையில் இந்த விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்திருக்கும் சீனு ராமசாமி, தனது ட்விட்டர் பக்கத்தில், “ இனிய மாறா வணக்கம் உங்கள் விமர்சனத்திற்கு எனதன்பு. நகை ஆர்டர் கொடுக்க மகளோடு போயிருக்கார்வாங்க தனியா போகலாம் இல்லையா? மனிதனை கொல்லலாம் மாமனிதனை உங்களால் கொல்ல முடியாது” என்று பதிவிட்டு இருக்கிறார். இந்தப்பதிவு தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது.
இனிய மாறா
— R.Seenu Ramasamy (@seenuramasamy) June 25, 2022
வணக்கம்
உங்கள்
விமர்சனத்திற்கு எனதன்பு
நகை ஆர்டர் குடுக்க மகளோடு போயிருக்கார்
வாங்க தனியா போகலாம் இல்லையா?
மனிதனை கொல்லலாம்
மாமனிதனை
உங்களால் கொல்ல முடியாது @tamiltalkies
நன்றி...@VijaySethuOffl@thisisysr @studio9_suresh#Maamanithanhttps://t.co/UNRjFvJvSQ
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

