(Source: ECI/ABP News/ABP Majha)
Sasikumar: மீண்டும் இயக்குநர்? முக்கிய நாவலை கையிலெடுக்கும் சசிகுமார்.. நடிகராக விஜயகாந்த் மகன்!
மீண்டும் இயக்குநர் பக்கம் திரும்பவுள்ளார் சசிகுமார். முக்கிய நாவலை தழுவி வெப் சீரிஸ் எடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது
கோலிவுட் சினிமா பல பன்முக கலைஞர்களை கண்டுள்ளது. இயக்குநராக இருந்து, சிறந்த இயக்குநராக வளர்ந்தவர்கள் ஒருபுறம் இருந்தாலும், இயக்குநராகவும் இருப்போம், நடிகராகவும் இருப்போம் என இன்றைய தலைமுறை இயக்குநர்கள் சினிமா மீதான தாகத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். அப்படியான ஒரு இயக்குநர், ஒரு நடிகர்தான் சசிக்குமார். கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான சுப்ரமணியபுரம் படத்தில் நடித்ததோடு அதனை இயக்கியும் இருந்தார் சசிகுமார். அந்தப் படம் விமர்சன ரீதியாகவும் சரி, வசூல் ரீதியாகவும் மிகப் பெரும் வெற்றியைப் பெற்றது.
1980 காலக்கட்டத்தில் நடக்கும் கதையை தத்ரூபமாக திரையில் காண்பித்திருப்பார் சசி. இன்றளவும் அந்தப் படத்திற்கு ஏராளனமான ரசிகர்கள் இருக்கின்றனர். அதன் பிறகு இயக்குநர் சமுத்திரக்கனி இயக்கத்தில் நாடோடிகள் படத்தில் நடித்தார். அந்தப் படமும் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. அதனைத்தொடர்ந்து ஈசன் படத்தை இயக்கினார். அந்தப் படம் சரியாக போகாத நிலையில், தொடர்ந்து நடிப்பிலேயே கவனம் செலுத்தி வந்தார் சசி. தொடர்ந்து நடித்த சசிகுமார் நடித்த சுந்தரபாண்டியன், குட்டிப்புலி, பிரம்மன், பாலா இயக்கத்தில் வெளியான தாரை தப்பட்டை உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். இந்நிலையில் மீண்டும் இயக்குநர் பக்கம் திரும்பவுள்ளார் சசிகுமார்.
குற்றப்பரம்பரை..
நீண்டகாலமாக பாரதிராஜவுக்கும், பாலாவுக்கும் இடையே சிக்கித்தவிக்கும் குற்றப்பரம்பரை நாவலைத் தழுவி வெப் சீரிஸ் ஒன்றை இயக்கப் போவதாகவும், அதில் விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியன் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த வெப் சீரிஸை ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் தயாரிக்கப்போவதாகவும் கூறப்படுகிறது.
View this post on Instagram
முன்னதாக, வேலராமமூர்த்தி எழுதிய குற்றப்பரம்பரை நாவலை இயக்குநர் பாரதிராஜா எடுக்க இருப்பதாக கூறி வந்த நிலையில், இயக்குநர் பாலாவும் அந்த நாவலை படமாக எடுக்க இருப்பதாக கூறினார். இதனால் பாரதிராஜாவுக்கும், பாலாவுக்கும் இடையில் யார் இந்த நாவலை படமாக இயக்குவது என்ற போட்டி எழுந்தது. இந்தப் போட்டியில் இருவருக்கும் இடையே வார்த்தை போர் மூண்டது. அந்தப் பிரச்னை ஒரு வழியாக முடிந்த நிலையில், தற்போது அந்த நாவலை, சசிகுமார் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. சசிகுமார் பாலாவிடம் துணை இயக்குநராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது