மேலும் அறிய

Ajith kumar: கதையே கேட்கல.. 2 நிமிடத்தில் என்னை இயக்குநர் ஆக்கினார்.. அஜித் குறித்து பேசிய சரண்!

முதல் படத்திலேயே வெற்றிக்கண்ட இயக்குனர் சரண், அஜித்தை வைத்து அமர்க்களம், அட்டகாசம் போன்ற படங்களை இயக்கி வெற்றிக்கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நடிகர் அஜித்திடம் கதையைக்கூற சென்ற போது கே.பி சாரின் உதவி இயக்குநரிடம் கதையை கேட்கவே வேண்டாம் எனவும் நான் உங்களது படத்தில் நடிக்கிறேன் என 2 நிமிடத்தில் ஒத்துக்கொண்டதாக பழைய நினைவுகளைப் பகிர்கிறார் இயக்குநர் சரண்.

காதல் மன்னன் அஜித் மாதிரி தான் எனக்கு லைப் பார்டனரோ அல்லது காதலராகவோ வர வேண்டும் என்ற நினைக்காத பெண்கள் இருக்கவே இருக்கமாட்டார்கள். அந்தளவிற்குப் பார்ப்பதற்கு அழகாக இருப்பதோடு, நடிப்பிலும் அசத்தி இருப்பார். காதல் மன்னன்,காதல் மன்னன் என்ற பாடலும், உன்னைப்பார்த்த பின்பு தான் நான் நானாக இல்லையே என்ற பாடல் இப்போதும் பல காதலர்களுக்கு மனதை வருடும் இசையாகவே உள்ளது. கடந்த 1998 ஆம் ஆண்டு இப்படம் வெளிவந்திருந்தாலும் இன்று தான் ரீலிஸ் ஆனது போல் இப்படத்தின் பாடல்கள் இணையத்தில் வைரலாகிவருவதும் குறிப்பிடத்தக்கது.

  • Ajith kumar: கதையே கேட்கல.. 2 நிமிடத்தில் என்னை இயக்குநர் ஆக்கினார்.. அஜித் குறித்து பேசிய சரண்!

இப்படி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ள இப்படம் இந்தளவிற்கு வெற்றிப்பெறுவதற்கு முன்னதாக பல பிரச்சனைகளை சந்தித்தாகவும், இதனையெல்லாம் கடந்து உதவி இயக்குநராக இருந்த என்னை இயக்குனராக்கியது அஜித் தான் என  பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசியுள்ளார் இயக்குனர் சரண்..

அதில், “ நான் இயக்குனர் கே. பாலச்சந்திரடம் உதவி இயக்குனராகப் பணியாற்றினேன். நான் மட்டும் இல்லை ஆயிரக்கணக்கானோர் சினிமாத்துறையில் இயக்குனராக வேண்டும் என்ற கனவுடன் இருப்பார்கள். ஆனால் 90 சதவீதம் நிறைவேறாது. ஆனால் என்னுடைய வாழ்க்கையில் என்னையும் இயக்குனராக்குவதற்கு ஒத்துக்கொண்டவர் தான் நடிகர் அஜித் என்கிறார் சரண்.

காதல் மன்னன்' எடுத்தபோது சினிமா ஸ்டிரைக் வந்தது. அதனால், படப்பிடிப்பு தடைபட்டது. நான் படம்பிடித்தவரை எடிட்டிங் செய்து, அதற்கு டப்பிங் பேச அஜித்தை அழைத்தேன். முதன்முதலாக `எனக்கு ஜெயிக்கிறதுதான் முக்கியம்' வசனத்தைப் பேசினார் அவர்.  காரணம் தல அஜித் தான். மைனர் மாப்பிள்ளை போன்ற பல்வேறு படங்களில் அஜித் நடித்துக்கொண்டிருந்த சமயத்தில், காதல் மன்னன் படத்தில் நடிப்பதற்கு இவர் சரியாக இருப்பார் என்று உள்ளுணர்வு கூறியுள்ளது. இதனையடுத்து என்னுடைய நண்பரான விவேக் சாரை அழைத்துக்கொண்டு அஜித் வீட்டிற்கு சென்றேன். அவரது அம்மா வந்து கதவை எங்களுக்குத் திறந்துவிட்டார். அப்போதே நான் இயக்குனர் ஆகிவிட்டேன் என்ற மனநிலை வந்தது. இதனையடுத்து விவேக், இவர் கேபி சாரிடம் உதவி இயக்குநராக உள்ளார் ஒரு கதை உங்களிடம் கூற வேண்டுமாம் என்று சொன்னார். இதற்கு உடனே அஜித், கே.பி சாரின் உதவி இயக்குநரிடம் கதையைக் கேட்கவே வேண்டாம் என்று கூறி 2 நிமிடத்தில் என்னை இயக்குனர் ஆகிவிட்டார் என்று மகிழ்வுடன் பகிர்கிறார்.

மேலும் காதல் மன்னன் படம்  எடுத்தபோது சினிமா ஸ்டிரைக் வந்தது. அதனால், படப்பிடிப்பு தடைபட்டது.  ஆனாலும் நான் படம்பிடித்தவரை எடிட்டிங் செய்து, அதற்கு டப்பிங் பேச அஜித்தை அழைத்தேன். முதன்முதலாக `எனக்கு ஜெயிக்கிறதுதான் முக்கியம்' வசனத்தைப் பேசினார்.அப்போதே இப்படம் வெற்றிப்பெறும் என்ற நம்பிக்கை அதிகளவில் இருந்ததாக என்று கூறினார். மேலும் தற்போது வரை ஹிட் ஆகியுள்ள காதல் என்ற பாட்டை வைரமுத்து தான் எழுதினார். குறிப்பாக காதல்மன்னன் என்றால், ப்ளே பாய் என்று நினைப்பார்கள். ஆனால்  காதலில் ஜெயிக்கிற மாதிரி எனக்கு வேண்டும் என்று வைரமுத்து சாரிடம் விடம் கேட்டேன். அப்படியே நடந்துவிட்டது என்று மகிழ்வோடு பகிர்கிறார்.

  • Ajith kumar: கதையே கேட்கல.. 2 நிமிடத்தில் என்னை இயக்குநர் ஆக்கினார்.. அஜித் குறித்து பேசிய சரண்!

மேலும் இப்படத்தின் முக்கியமான கதாபாத்திரத்தில் வந்தவர் தான் எம்.எஸ். விஸ்வநாதன். நடிப்பதற்கு ஒத்துக்கொள்ளாமல் இருந்தவரிடம் விவேக் வுடன்சென்று பல முறை அணுகினோம். ஆனால் அவர் ஒத்துக்கொள்ளவில்லை. இருந்தப்போதும் ஒரு கடிதத்தை எழுதி, அவரது அம்மா படத்திற்கு வைத்து தயவு செய்து மனதை மாற்ற உதவுங்கள் என்று கேட்டோம். இதனையடுத்து தான் ஒத்துக்கொண்டோம் என்று பழைய நினைவுகளைப் பகிர்கிறார். இப்படி முதல் படத்திலேயே வெற்றிக்கண்ட இயக்குனர் சரண், அஜித்தை வைத்து அமர்க்களம், அட்டகாசம் போன்ற படங்களை இயக்கி வெற்றிக்கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் வசூல்ராஜா எம்பிபிஎஸ், பார்த்தேன் ரசித்தேன், அல்லி அர்ஜூனா, ஜெமினி  போன்ற பல்வேறு வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
“தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Vijay - Seeman:
Vijay - Seeman: "மாணவ - மாணவியரை ஊக்கப்படுத்திய விஜய்” - நெகிழ்ந்து போன சீமான்.. என்ன சொன்னார் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
“தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Vijay - Seeman:
Vijay - Seeman: "மாணவ - மாணவியரை ஊக்கப்படுத்திய விஜய்” - நெகிழ்ந்து போன சீமான்.. என்ன சொன்னார் தெரியுமா?
Vijay Honours Students: மாணவர்கள் என்ன படிக்கலாம்?- எப்படி துறை தேர்வு செய்யலாம்?- கேரியர் குறித்து விஜய் கொடுத்த டிப்ஸ்
Vijay Honours Students: மாணவர்கள் என்ன படிக்கலாம்?- எப்படி துறை தேர்வு செய்யலாம்?- கேரியர் குறித்து விஜய் கொடுத்த டிப்ஸ்
Thalapathy Vijay:
"எனக்கு பயமா இருக்கு” - போதைப்பொருள் பயன்பாடு குறித்து மாணவர்களுக்கு விஜய் அட்வைஸ்
Kalki 2898AD : முதல் நாளிலே 150 கோடிக்கு மேல் வசூல் செய்த கல்கி 2898 AD!
Kalki 2898AD : முதல் நாளிலே 150 கோடிக்கு மேல் வசூல் செய்த கல்கி 2898 AD!
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
Embed widget