Ajith - Shalini : அஜித்தை காதலில் விழ வைத்த இந்த பாடல்... நினைவுகளை பகிர்ந்த இயக்குநர் சரண்..!
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நட்சத்திர காதல் ஜோடிகளில் மிக முக்கியமானவர்கள் நடிகர் அஜித் - நடிகை ஷாலினி. இருவரும் இணைந்து 1999 ஆம் ஆண்டு வெளியான அமர்க்களம் படத்தில் நடித்த போது காதல் மலர்ந்தது.
நடிகர் அஜித்துக்கு, நடிகை ஷாலினி மீது எந்த தருணத்தில் காதல் வந்தது என்பதை இயக்குநர் சரண் தனது பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நட்சத்திர காதல் ஜோடிகளில் மிக முக்கியமானவர்கள் நடிகர் அஜித் - நடிகை ஷாலினி. இருவரும் இணைந்து 1999 ஆம் ஆண்டு வெளியான அமர்க்களம் படத்தில் நடித்த போது காதல் மலர்ந்தது. குழந்தை நட்சத்திரமாக 55 படங்களில் நடித்த ஷாலினி, ஹீரோயினாக 7 படங்களில் மட்டுமே நடித்திருந்தார். அதுமட்டுமல்லாமல் இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 2000 ஆம் ஆண்டு அஜித் - ஷாலினி இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
View this post on Instagram
அதன்பிறகு கண்ணுக்குள் நிலவு, அலைபாயுதே மற்றும் பிரியாத வரம் வேண்டும் ஆகிய படங்கள் வெளியான நிலையில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார். ஆனால் இன்றளவும் ஷாலினி ஏன் நடிப்பதை விட்டார் என்ற கேள்வி 90ஸ் கிட்ஸ் ரசிகர்களிடத்தில் உண்டு. அதேசமயம் அஜித் மீதான காதலும், அவர் கொண்ட நம்பிக்கையும் 22 ஆண்டுகள் கடந்த நிலையில் அப்படியே உயிர்ப்போடு இருப்பதாலேயே இந்த தம்பதியினர் ரசிகர்களால் கொண்டாடப்படுகின்றனர்.
ஆனால் அமர்க்களம் படப்பிடிப்பில் என்ன நடந்தது. அஜித்துக்கு ஷாலினி மீது எந்த தருணத்தில் காதல் வந்தது என்பதை அமர்க்களம் படத்தின் இயக்குநர் சரண் தெரிவித்துள்ளார். அதாவது அமர்க்களம் படத்தில் ஷாலினி பாடிய சொந்தக்குரலில் பாடல் பதிவாகி முடிந்ததும் அஜித்துக்கு போட்டுக் காட்டினோம். அவருக்கு ரொம்ப பிடித்து விட்டது. தொடர்ந்து ரீவைண்ட் செய்து கேட்டுக் கொண்டே இருந்தார்.
தினமும் பலமுறை அந்தப் பாடலை கேட்டுக் கொண்டிருந்த நிலையில் ஒரு காட்சியை ஊட்டியில் படமாக்கலாம் என அஜித் சொன்னார். இதனைத் தொடர்ந்து காரில் நாங்கள் இருவரும் ஊட்டிக்கு சென்றுக் கொண்டிருந்தோம். சாதாரணமாக ஊட்டிக்கு 12 மணி நேரத்தில் தான் செல்ல முடியும் என்ற நிலையில் அஜித் 7 மணி நேரத்திலேயே சென்றார். அதற்கு காரணம் அப்போது காரில் உள்ள டேப் ரெக்கார்டர்களில் திரும்ப திரும்ப கேட்கும் லூப் மோட் ஆப்ஷன் கிடையாது. அதனால் சொந்தக்குரலில் பாட பாடலை 10 முறை கேசட்டில் பதிவு செய்து கொடுத்தோம்.
View this post on Instagram
பொதுவாக அஜித் ஒரு கார் ரேஸர் என்றாலும், காரில் திரும்ப திரும்ப அவர் கேட்டுக் கொண்டிருந்த ஷாலினியின் அந்த குரல் தான் வேகமாக எங்களை ஊட்டிக்கு அழைத்து சென்றது எனலாம். இதனாலேயே அஜித்துக்கு ஷாலினி மேல் இருந்த காதலை பெரிதாக வெளிக்காட்டியதும் இந்த பாடல் தான் என சொல்லலாம் என அப்பேட்டியில் சரண் கூறியுள்ளார்.