ஸ்ருதி நாராயணன் ஹீரோயினாக நடிக்கும் படத்தின் இயக்குனர் உருக்கமாக பேசியது என்ன?
நடிகை ஸ்ருதி நாராயணன் கதாநாயகியாக நடிக்கும் கட்ஸ் படத்தின் இயக்குனர் ரங்கராஜ் மேடையில் மிகவும் உருக்கமாக பேசினார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல் சிறகடிக்க ஆசை. நம்பர் 1 சீரியலாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த சீரியலில் நடித்து வருபவர் ஸ்ருதி நாராயணன். சமீபத்தில் இவரது ஆபாச வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஸ்ருதி நாராயணனின் படத்தின் இயக்குனர்:
இந்த நிலையில், ஸ்ருதி நாராயணன் கட்ஸ் என்ற படத்தில் நாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இதில், இந்த படத்தின் தயாரிப்பாளரும், இயக்குனர் ரங்கராஜ் உருக்கமாக பேசினார்.
அவர் பேசியதாவது, "நான் இந்த மேடையிலே இங்க வந்து நிற்பதற்கு காரணமே என்னுடைய இரண்டு மகள்கள்தான். அம்மா, அப்பா இந்த மேடையில் நின்றுவிட்டேன். பார்த்துக் கொண்டு இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். என் மனைவி ஜெயபாரதிக்கும் தாழ்மையான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவர்கள்தான் என்னைத் தூக்கி இந்த மேடையில் நிறுத்தியுள்ளனர்.
25 ஆண்டுகால போராட்டம்:
நான் 25 ஆண்டுகளாக சினிமாவில் போராடிக் கொண்டிருக்கிறேன். எப்படியாவது நடிகராக வேண்டும் என்று 1999ம் ஆண்டு முதல் எனது கனவுகளை துரத்திக் கொண்டு இருக்கிறேன். ஆனால், எங்கே போனாலும் பணம் என்ற ஒரு விஷயத்தை கேட்டு கேட்டு என்னை சாவடித்து விட்டார்கள். என்னால் அப்போது பணம் கொடுக்க முடியும். ஆனால், ஒரே விஷயம் பணம் கொடுக்க மாட்டேன் என்று நின்றேன்.
வீட்ல கூட மனைவி பணத்தை கொடுத்து முயற்சிக்கலாம் என்றார்கள். ஆனால், நான் ஏன் பணம் கொடுக்க வேண்டும். காஸ்ட்யூம் எல்லாம் நான் வாங்கிக்குறேன். எனக்கு செலவு செய்ய வேண்டாம். சாப்பாடு எல்லாம் நான் பாத்துக்குறேன். நான் இலவசமா நடிச்சு தர்றேன். எனக்கு வாய்ப்பு மட்டும் கொடுத்தா போதும். ஆனால், யாருமே அந்த வாய்ப்பை சரியாக கொடுக்கல.
நானும் சுத்தி, சுத்தி தேடிப்பாத்தேன். எங்கயும் வாய்ப்பு கிடைக்கல.
15 லட்சம் பட்ஜெட்:
ஒரு கட்டத்தில மன உளைச்சல் ஆளாகி போதும்டா, இதுக்கு மேல உடம்பாலயும், மனசாலயும் ஒர்க் பண்ண முடியலனு கிளம்பிடுவோம்னு கம்பெனியில இருந்து விஆர்எஸ் வாங்கிடுவோம்னு வெளிய வந்துட்டேன். குடும்பத்தை ஊர்ல செட்டில் பண்ணிட்டு நண்பர்கள் வர்றாங்க குறும்படம் எடுக்குறாங்க. நாம ஏன் ஒரு சின்ன படம் எடுக்கக்கூடாது? எவ்வளவுக்குள்ள எடுக்கலாம்? ஒரு 15 லட்சத்துக்குள்ள எடுக்கலாம். நான் ஒரு கணக்கு போட்டேன்.
15 லட்சம் நம்ம குடும்பத்துல சமாளிச்சிடலாம். எனக்கு தயாரிப்பு பத்தி பெருசா அறிவு இல்ல. உள்ளே இறங்கிட்டேன். வலிகள் தெரியுது. 15 லட்சத்துல படம் பண்ண முடியாதுனு தெரியுது. என்னுடைய கலைத்தாய்க்கு வாழ்க்கையில எல்லாத்தையும் கொடுத்துட்டேன். என்ன பண்ணப்போறேனு தெரியல. அப்போ எனது இரண்டு மகள்கள் வந்து விடுப்பா.. பாத்துக்கலாம்னு. நான் தரத்துல காம்ப்ரமைஸ் பண்ணமாட்டேன்.
பின்னணி கிடையாது
இந்த மேடையில ஒரு நாள் நீ பேசுவ நாங்க பாக்கனும்பா என்றார்கள். ஐ லவ் யூ மா. எனக்கு சினிமா பின்னணி, அரசியல் பின்னணி, பணபலம் கிடையாது. இட்லி சுட்டு வித்துகிட்டு இருந்தவங்களோட மகன் நான். இந்த படத்தில் வேலை பாத்த அனைவருக்கும் என் நன்றி."
இவ்வாறு அவர் உருக்கமாக பேசினார்.