அது இல்லாம ரஜினியால இருக்கமுடியாது.... மீண்டும் சர்ச்சையை கிளப்பிய ராம் கோபால் வர்மா
பெரிய ஸ்டார்கள் எளிய கதைகளில் நடிக்கும் போது ரசிகர்களுக்கு ஒரு விதமான அசெளகரியம் ஏற்படுகிறது இதனால் ஸ்டார்கள் நல்ல நடிகர்களாக முடிவதில்லை என ராம் கோபால் வர்மா தெரிவித்துள்ளார்

ராம் கோபால் வர்மா
சத்யா , கம்பேனி , ஷிவா , போன்ற தனது படங்களால் சினிமா உலுக்கியவர் ராம் கோபால் வர்மா. தெலுங்கு , தமிழ் , தெலுங்கு , இந்தி ஆகிய மொழிகளில் இவரது படங்கள் கமர்சியல் சினிமா பரப்பில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் திரைப்படத்தில் பல படங்களில் ஷிவா படத்தின் இஸ்பிரேஷனைப் பார்க்கலாம் . ராம் கோபால் வர்மா சமீபத்தில் இயக்கிய படங்கள் கவனம் பெறவில்லை என்றாலும் அவரது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் அடிக்கடி கவனமீர்க்கின்றன. குறிப்பாக ஆஸ்கர் வென்ற பாடல் ஜெய் ஹோவை ரஹ்மான் இசையமைக்கவில்லை என ஸ்டேட்மெண்ட் விட்டு பகீர் கிளப்பினார்.
செக் பவுன்ஸ் ஆன விவகாரத்தில் சமீபத்தில் இவரை மும்பை போலீஸ் கைது செய்து மூன்று மாத சிறை தண்டனை விதித்தது குறிப்பிடத் தக்கது.
ரஜினியின் நடிப்பை பற்றி ராம் கோபால் வர்மா
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய ராம் கோபால் வர்மா ஒரு நடிகருக்கும் ஸ்டாருக்கு இடையில் உள்ள வித்தியாசத்தைப் பற்றி பேசினார். அப்போது அவர் இப்படி கூறியுள்ளார் " நடிப்பு என்பது ஒரு கதாபாத்திரத்தைப் பற்றிய அதே நேரம் ஒரு ஸ்டார் செய்யக்கூடியது பெர்ஃபாமன்ஸ் தான். இது இரண்டிற்கும் இடையில் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. ரஜினிகாந்த் ஒரு நல்ல நடிகரா என்று கேட்டால் என்னால் சொல்ல முடியவில்லை. ரஜினி எதுவுமே செய்யாமல் பாதி படம் முழுக்க நடந்தே வந்தாலும் கூட நீங்கள் பார்ப்பீர்கள். உங்களுக்கு அவரை அப்படிதான் பார்க்க பிடித்திருக்கிறது. ஸ்லோ மோஷன் இல்லாமல் ரஜினியால் இருக்கவே முடியாது. அமிதாப் பச்சன் , ரஜினிகாந்த் மாதிரி பெரிய ஸ்டார்களை மக்கள் கடவுள் மாதிரி பார்க்கிறார்கள். இதனால் அவர்களால் நல்ல கதாபாத்திரங்களில் நடிக்க முடிவதில்லை. அமிதாப் பச்சன் ஒரு படத்தில் வயிற்று வலி வரும் காட்சியில் நடித்திருந்தார். அமிதாப் பச்சனுக்கு வயிற்று வலி வரும் காட்சியை பார்க்கவே முடியவில்லை. கடவுள் மாதிரி பார்க்கும் ஒருத்தரை நாம் சாதாரணமாக பார்க்க விரும்பவில்லை . அதனால் தான் ஸ்டார்களால் நடிகர்களாக முடிவதில்லை." என ராம் கோபால் வர்மா தெரிவித்துள்ளார்
ரஜினியைப் பற்றிய ராம் கோபால் வர்மாவின் கருத்து ரஜினி ரசிகர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது

