தேவயானி வெறும் கையை வீசிக்கொண்டு வந்தார்..வைரலாக சொந்த மனைவியை விமர்சித்த ராஜகுமாரன்
பேட்டி ஒன்றில் இயக்குநர் ராஜகுமாரன் தனது மனைவி தேவயானி பற்றி பேசியுள்ள விதம் ரசிகர்களை முகம் சுழிக்க வைத்துள்ளது

கடந்த சில மாதங்களாக யூடியுப் பேட்டிகளில் தொடர்ச்சியாக சர்ச்சைக்குரிய விதமாக பேசி வரும் இயக்குநர் ராஜகுமாரன் தற்போது தனது சொந்த மனைவி பக்கமே திரும்பியுள்ளார். இயக்குநர் ராஜகுமாரனும் தேவயானியும் காதலித்து கடும் எதிர்ப்புகளுக்கு இடையில் திருமணம் செய்துகொண்டனர். சமீபத்தில் பேட்டி ஒன்றில் தேவயானி தன்னை திருமணம் செய்துகொண்ட போது வெறும் கையை வீசிக்கொண்டு தான் வந்தார் என ராஜகுமாரன் பேசியுள்ள விதம் ரசிகர்களை முகம் சுழிக்க வைத்துள்ளது
ராஜகுமாரன் தேவயானி காதல் திருமணம்
2000 ஆம் ஆண்டு நீ வருவாய் என படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் ராஜகுமாரன். இப்படத்தில் தேவயானி கதாநாயகியாக நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து விக்ரம் நடித்த விண்ணுக்கு மண்ணுக்கும் படத்திலும் கதாநாயகியாக நடித்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு இடையே ராஜகுமாரன் தேவயானி இடையே காதல் மலர்ந்ததாக சொல்லப்படுகிறது. இந்த காதல் விஷயம் இரு குடும்பத்தினருக்கு தெரியவர இரு தரப்பு சார்பாகவும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
புகழின் உச்சத்தில் இருந்த தேவயானி மும்பையைப் பூர்வீகமாக கொண்டவர். இரண்டு படங்கள் மட்டுமே இயக்கியிருந்த ராஜகுமாரனை திருமணம் செய்து கொள்ள தேவயானியின் பெற்றோர் சம்மதிக்கவில்லை. அதேபோல், ஈரோட்டைப் பூர்வீகமாகக் கொண்ட ராஜகுமாரன் வீட்டிலும் தேவயானியை திருமணம் செய்து கொள்ள எதிர்ப்பு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில், ராஜகுமாரனுக்காக தேவயானி தனது வீட்டை விட்டு வெளியேறினார். நண்பர்கள் முன்னிலையில், மிக எளிமையாக திருத்தணி முருகன் கோயிலில் 2001ம் ஆண்டு தேவயானி – ராஜகுமாரன் திருமணம் நடைபெற்றது. அந்த நேரத்தில், இவர்களது திருமணம் திரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மனைவி குறித்து ராஜகுமாரன் சர்ச்சை பேச்சு
அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் ராஜகுமாரன் தனது பணத் தேவைகள் குறித்து பேசினார். அதில் அவர் ' நான் முதல் படம் இயக்கியபோது நான் இருந்த அறைக்கு 1000 ரூபாய் தான் வாடகை. மேல் வீட்டில் இருந்தவர்களிடம் 500 ரூபாய் சாப்பாட்டிற்கு கொடுப்பேன். நான் பெரிய இயக்குநரானபோதும் என் செலவு என்பது இவ்வளவு. என் கல்யாணம் நடந்தபோது மனைவி தேவயானி வெறும் கையை வீசிக்கொண்டுதான் வந்தார். நான் கொஞ்சம் பணத்தை வங்கியில் சேர்த்து வைத்திருந்தேன். அதைதான் எங்கள் திருமணத்திற்கு செலவு செய்தேன். " என்று ராஜகுமாரன் பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது





















