தெலுங்கு சினிமாவில் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்திய ராஜமெளலி...
மகேஷ் பாபுவை இயக்கும் படத்தில் புதிய தொழில்நுட்பத்தை தெலுங்கு சினிமாவிற்கு அறிமுக செய்யவிருக்கிறார் இயக்குநர் ராஜமெளலி .

இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் படத்தின் டைட்டில் இன்று ஹைதராபாதில் பிரம்மாண்டமான நிகழ்ச்சியுடன் வெளியிடப்பட்டது. வாரணாசி என இப்படத்திற்கு டைட்டில் வைத்துள்ளார்கள். அதே நேரம் இந்த படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவிற்கு புதிய தொழில்நுட்பத்தை இயக்குநர் ராஜமெளலி அறிமுகப்படுத்த இருக்கிறார்
வாரணாசி
ஆர்.ஆர்.ஆர் படத்திற்கு அடுத்தபடியாக 1000 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமான சாகச கதையை இயக்கி வருகிறார் இயக்குநர் ராஜமெளலி. மகேஷ் பாபு இப்படத்தில் நாயகனாக நடிக்க பிரியங்கா சோப்ரா நாயகியாக நடிக்கிறார். பிருத்விராஜ் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார். எம்.எம் கீரவாணி படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் டைட்டில் இன்று ஹைதராபாதில் மிகபிரம்மாண்டமான நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப் பட்டு வெளியிடப்பட்டது. வாரணாசி என இப்படத்திற்கு டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஒரு சிறிய டீசர் வெளியிட்டு படக்குழு இந்த டைட்டிலை அறிவித்தது. இந்த டீசர் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் இந்த படத்தின் வழியாக தெலுங்கு திரையுலகிற்கு புதிய தொழில்நுட்பம் ஒன்றினை ராஜமெளலி அறிமுகப்படுத்தியுள்ளார்
ப்ரீமியம் ஐமேக்ஸ் ஃபார்மேட்
பெரும்பாலான திரைப்படங்கள் சினிமா ஸ்கோப் எனப்படும் வடிவத்தில் எடுக்கப்படுகின்றன. திரைக்கு மேலும் கீழும் கருப்பு நிற இடைவேளி இருக்க நடுவில் காட்சி அமைந்திருக்கும். இந்த படங்களை ஐமேக்ஸில் வெளியிட வேண்டும் என்றால் அவற்றின் வரைவுகளை மாற்றியமைக்க வேண்டும். ஆனால் இதனை முழுமையான ஐமேக்ஸ் அனுபவம் என்று சொல்ல முடியாது. ஐமேக்ஸில் திரையிடப்படும் படங்கள் பிரத்யேகமாக அதற்கென உருவாக்கப்பட்ட கேமராக்களில் படமாக்கப்பட வேண்டும் . ராஜமெளலி முன்னதாக இயக்கிய பாகுபலி , ஆர்.ஆர். ஆர் ஐமேக்ஸில் படமாக்கப்பட்டு ஐமேக்ஸில் வெளியிடப்பட்டன. தற்போது வாரணாசி படத்தைப் பொறுத்தவரை இப்படம் முழுக்க முழுக்க ப்ரீமியம் ஐமேக்ஸ் வடிவத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த வடிவத்தில் முழு திரையிலும் காட்சி அமைந்திருப்பதால் பார்வையாளர்களுக்கு மேலும் தத்ரூபமான அனுபவம் கிடைக்கும்.
Here you go… VARANASI to the WORLD…https://t.co/3VJa3zpUNb
— rajamouli ss (@ssrajamouli) November 15, 2025





















